சொல்
|
அருஞ்சொற்பொருள் |
கையிகத்தல் | அளவுக்கு மேற்படுதல் ; மீறுதல் ; ஒழுங்கு தப்புதல் ; கடத்தல் . |
கையிசைதல் | மனம் இணங்குதல் . |
கையிடுதல் | கையைத் தோய்த்தல் ; தலையிட்டுக் கொள்ளுதல் ; ஒரு தொழிலில் வேண்டாது தலையிடுதல் . |
கையிணக்கம் | பொருத்தம் ; கையடக்கம் ; கைகலந்து சண்டையிடுகை ; வைப்பாட்டி வைக்கை . |
கையிருப்பு | கையிலுள்ள பணம் ; இருப்புத் திட்டம் ; செங்குவளை . |
கையில் | தேங்காய்ப் பாதி . |
கையிலாகாதவன் | காண்க : கையாலாகாதவன் . |
கையிலாதம் | கைலாசம் . |
கையிழத்தல் | காணாமற்போதல் . |
கையிளகுதல் | கைப்பிடிப்பு நெகிழ்தல் ; தாராளமாதல் . |
கையிளைத்தல் | கைசலித்தல் ; செல்வநிலை குன்றுதல் . |
கையிறக்கம் | சீட்டு விளையாட்டில் முதலில் சீட்டை இறக்குதல் ; செல்வம் முதலியவற்றின் நிலைகுன்றுகை . |
கையிறுக்கம் | சிக்கனம் ; ஈயாத்தன்மை . |
கையிறை | கைரேகை ; கைவிரலின் இடுக்கு . |
கையுங்களவுமாய் | கையும் களவுப் பொருளுமாய் . |
கையுடன் | காண்க : கையோடு . |
கையுடை | கைக்கவசம் . |
கையுண்ணுதல் | பிறர் கையை எதிர்பார்த்து உண்டு வாழ்தல் . |
கையுதவி | சமயத்தில் செய்யும் உதவி ; துணையான உணவுப்பொருள் ; சிற்றுதவி ; இலஞ்சம் . |
கையுதிர்க்கோடல் | விட்டு விலகுமாறு கையசைத்துக குறிப்பிடுதல் . |
கையுபகாரம் | கையுதவி . |
கையுயர்த்துதல் | கையோங்குதல் ; கைதூக்குதல் ; கையெடுத்தல் . |
கையுயர்தல் | கையோங்கதல் ; அடித்தல் ; மேன்மைப்படுதல் . |
கையுறுதல் | கையிற் கிடைத்தல் ; அகப்படல் ; தொடுதல் . |
கையுறுதி | கடனுக்கு வைக்கப்படும் ஈடு ; கையடித்து விலையுறுதி செய்கை ; |
கையுறை | காணிக்கைப் பொருள் ; மொய்ப்பணம் ; தலைவிக்கு அன்பு பாராட்டித் தலைவன் கொடுக்கும் தழை முதலிய நன்கொடை ; இலஞ்சம் ; கைக்கவசம் . |
கையுறையெழுதுதல் | திருமணம் முதலியவற்றில் மொய்க்கணக்கு எழுதுதல் . |
கையூட்டு | இலஞ்சம் . |
கையூழ் | இசைக்கரணம் எட்டனுள் ஒன்று , வண்ணத்திற் செய்த பாடலெல்லாம் இன்பமாக யாழிற் பாடுகை . |
கையெடுத்தல் | கும்பிடல் ; இரத்தல் ; கையுயர்த்தித் தம் கருத்தை உணர்த்துதல் . |
கையெடுப்பு | கையையுயர்த்தி நிற்கம் ஒருவனது உயரத்தினளவு . |
கையெழுத்து | கையாலெழுதுதல் ; கையொப்பம் ; உடன்படிக்கை ; கைரேகை . |
கையெழுத்துப் பிரதி | கையால் எழுதிய நூற்படி . |
கையெழுத்துப்போடுதல் | கையொப்பமிடுதல் . |
கையெறிதல் | கைகொட்டுதல் ; உறுதிகூறிக் கையடித்தல் ; கோபத்தாற் கைவீசுதல் . |
கையடை | பிறர் கையில் ஒப்புவிக்கை ; பாதுகாக்குமாறு ஒப்படைத்த பொருள் ; அடைக்கலப் பொருள் ; இலஞ்சம் . |
கையடைத்தல் | பிறர் கையில் ஒப்புவித்தல் ; கடனைத் தீர்த்தல் . |
கையடைப்பு | கைவசமான பொருள் . |
கையமர்த்துதல் | கைகாட்டி அடங்கச் செய்தல் ; கையால் சைகைகாட்டி உட்காரச் செய்தல் ; அடக்கியாளுதல் . |
கையமர்தல் | கையமைத்தருளல் . |
கையமைத்தல் | காண்க : கையமர்த்துதல் . |
கையயர்தல் | நிலைமை தாழ்தல் ; சோர்வடைதல் . |
கையர் | கீழ்மக்கள் ; கள்ளர் ; வஞ்சகர் ; மூடர் . |
கையரி | தேடுதல் . |
கையரிக்கொள்ளுதல் | தேடுதல் ; வாரி அரித்துகொள்ளுதல் ; சேர்த்துக்கொள்ளுதல் . |
கையரித்தல் | தேடுதல் ; வாரி அரித்துகொள்ளுதல் ; சேர்த்துக்கொள்ளுதல் . |
கையரியம் | இரும்பு . |
கையல்லது | தகாதது . |
கையலகு | கைமரம் . |
கையலுத்தல் | நிலைமை தாழ்தல் ; சோர்வடைதல் . |
கையலைத்தல் | துன்புறுத்துதல் . |
கையளித்தல் | அடைக்கலம் புகுதல் ; ஒப்படைத்தல் . |
கையறம் | இரங்கற்பா ; வசைக்கவி . |
கையறல் | செயலறுதல் , செயலற்ற நிலை ; இறப்பு ; துன்பம் ; ஊடல் ; வறுமை ; ஒழுக்கமின்மை . |
கையறவு | செயலறுதல் , செயலற்ற நிலை ; இறப்பு ; துன்பம் ; ஊடல் ; வறுமை ; ஒழுக்கமின்மை . |
கையறிதல் | பழக்கமாதல் ; செய்யுமுறைமை அறிதல் . |
கையறுத்துக்கொள்ளுதல் | பொருள் இழத்தல் . |
கையறுதல் | செயலொழிதல் ; மனமழிதல் ; அளவுகடத்தல் ; மீட்சி அரிதாதல் ; இறத்தல் ; ஒழுக்கம் நீங்குதல் . |
கையறுதி | அறுதியாக விற்றல் ; கையுறுதி ; கையடித்து விலை உறுதிசெய்கை ; முற்றும் கைவிட்டு நீக்குகை . |
கையறுநிலை | வாட்போரில் இறந்த வேந்தனைப் பார்த்து யாழ்ப்பாணருஞ் சுற்றத்தாரும் அவன் பட்ட பாட்டைச் சொல்லி இரங்குதல் ; தலைவனேனும் தலைவியேனும் இறந்தமைக்கு அவர் சுற்றத்தார் முதலானோர் செயலற்று மிக வருந்தியமை கூறும் புறத்துறை ; கையறுநிலைபற்றிய நூல்வகை . |
கையறை | செயலின்மை ; ஒழுக்கமின்மை ; சிறிய சரக்கறை ; கண்ணி வாய்க்கால் . |
கையன் | கயவன் ; கீழ்மகன் . |
கையாட்சி | கைப்பழக்கம் ; தொழில் ; ஒருவன் வசமானது ; அனுபவத்தால் நன்மையெனத் தெளிந்தது . |
கையாடல் | நம்பிக்கைக்கு மாறாகப் பிறர் பொருளைக் கவர்தல் . |
கையாடுதல் | கவர்தல் . |
கையாந்தகரை | கரிசலாங்கண்ணிப் பூண்டு . |
கையாலாகாதவன் | எவ்வேலையும் செய்யத் திறமையற்றவன் . |
கையாலாதல் | செய்யும் ஆற்றல் பெறுதல் . |
கையாள் | குற்றேவல் செய்வோன் ; உதவி செய்வோன் . |
கையாளுதல் | கையாலெடுத்து ஆளுதல் ; வழக்கத்துக்குக் கொண்டுவருதல் ; பறித்தல் ; கற்பழித்தல் . |
கையாளி | திறமையுடையவன் ; கொடியவன் , தீயன் ; பாசாங்கு செய்வோன் . |
கையாற்றுதல் | உதவி செய்து இளைப்பாறச் செய்தல் . |
கையாறு | செயலொழிதல் ; ஒழுக்கநெறி ; துன்பம் . |
கையாறுதல் | இளைப்பாறுதல் . |
கையான் | கையாந்தகரைப்பூடு . |
![]() |
![]() |
![]() |