சொல்
|
அருஞ்சொற்பொருள் |
கைவளை | கைத்தொடி ; கடகம் ; சிறுவளை ; மேற்கூரையைத் தாங்குமாறு சுவர் முதலியவற்றில் அமைக்குஞ் சட்டம் . |
கைவற்றுதல் | பொருளின்றி நிலைமை தாழதல் ; கையில் பொருளறுதல் . |
கைவறளுதல் | பொருளின்றி நிலைமை தாழதல் ; கையில் பொருளறுதல் . |
கைவன்மை | கைத்திறம் . |
கைவாக்கு | கைராசி: கையால் ஆளுதற்குரிய நிலை . |
கைவாகு | கைராசி: கையால் ஆளுதற்குரிய நிலை . |
கைவாங்குதல் | நீங்குதல் ; கையை வெட்டுதல் . |
கைவாசி | காண்க : கைராசி . |
கைவாய்க்கால் | சிறு கால்வாய் . |
கைவாரம் | கைதூக்கிக் கூறும் வாழ்த்து ; செய்கைப்பங்கு ; கூலி ; வயிரம் முதலியவற்றின் முனை ; சரிவாரம் . |
கைவாரிகள் | நின்றேத்துவோர் , அரசவையில் வாழ்த்துக் கூறுவோர் . |
கையொத்துதல் | வணக்கம் செய்தல் , அஞ்சலி செய்தல் . |
கையொப்பம் | கையெழுத்து ; கீறற் கையெழுத்து ; கையெழுத்துச் செய்யப்பட்ட தொகை . |
கையொலி | தெய்வத் திருமேனிகளுக்குச் சாத்தும் சிறிய ஆடை . |
கையொலியல் | தெய்வத் திருமேனிகளுக்குச் சாத்தும் சிறிய ஆடை . |
கையொழிதல் | கைதூவுதல் ; கைவேலை நீங்குதல் . |
கையொழியாமை | முயற்சி நீங்காமை ; நேரமின்மை . |
கையொறுப்பு | சிக்கனச் செலவு ; இச்சையடக்குகை . |
கையோங்குதல் | செழித்தோங்குதல் ; மேன்மைப்படுதல் ; அடித்தல் . |
கையோட்டம் | செல்வநிலைமை ; எழுதுதல் முதலிய வேலைகளிற் கைவிரைவு . |
கையோடு | உடன் ; பிடித்த பிடியோடு ; சித்தமாய் ; தாமதமின்றி . |
கையோடுகையாய் | செயலோடு செயலாய் ; தாமதமின்றி . |
கையோடுதல் | வேகமாக எழுதுதல் ; ஒரு தொழிலின் மனஞ் செல்லுதல் . |
கையோடே | கைவிடாமல் ; உடனே . |
கையோலை | ஓலைத்துண்டு , ஓலைச்சீட்டு ; கையுறுதி . |
கையோலைசெய்தல் | தீர்மானித்தல் . |
கைரவம் | குமுதம் , வெள்ளாம்பல் . |
கைரவி | நிலவு ; காந்திப்பூ ; வெந்தயம் . |
கைராசி | கைபடுவதனால் உண்டாவதாகக் கருதும் நன்மை . |
கைராட்டு | கையால் நூல் நூற்கும் பொறி , இறாட்டை . |
கைரிகம் | காவிக்கல் ; பொன் ; பொன்னூமத்தை . |
கைரேகை | கையில் அமைந்திருக்கும் கோடு . |
கைலாகு | கைத்தாங்கல் . |
கைலாகு கொடுத்தல் | அரசர் முதலியோர் நடக்கும்பொழுது மரியாதையாக அவர் கைகளைத் தாங்குதல் ; உடல் வலியற்றவரைக் கைகொடுத்துத் தாங்குதல் . |
கைலாகை | கைகொடுத்தல் . |
கைலாசநாதன் | கைலாயத்து இறைவனான சிவன் . |
கைலாசபதி | கைலாயத்து இறைவனான சிவன் . |
கைலாசம் | எண்குல பர்வதங்களுள் ஒன்றும் சிவபிரான் வாழ்விடமுமான ஒரு மலை . |
கைலாயம் | எண்குல பர்வதங்களுள் ஒன்றும் சிவபிரான் வாழ்விடமுமான ஒரு மலை . |
கைலி | கையொலி ; ஓர் ஆடைவகை . |
கைலேசு | கைக்குட்டை . |
கைலை | கயிலைமலை . |
கைவசம் | தன்னிடம் உள்ளவை ; கைக்குட்படல் . |
கைவட்டணை | கையாற் செய்யும் அபிநயம் . |
கைவட்டி | சிறிய ஓலைப்பெட்டி . |
கைவண்டி | கையால் இழுக்கும் வண்டி . |
கைவந்தவன் | தொழிலிற் பழகித் தேர்ச்சியடைந்தவன் . |
கைவந்தி | தோளின்கீழாகக் கையில் அணியும ஓர் அணி . |
கைவரிசை | திறமை ; கொடை ; சீட்டாட்டத்தில் முதலில் சீட்டை இறக்கும் உரிமை . |
கைவருதல் | கைகூடுதல் ; ஒருங்கே நிகழ்தல் ; தேர்ச்சி பெறுதல் ; பழக்கம் ; ஒன்றைச் செய்யக் கையெழுதல் . |
கைவரை | காண்க :கைரேகை . |
கைவல்யம் | காண்க : கைவல்லியம் . |
கைவல்லபம் | தோள்வலிமை ; தொழில் செய்கைத்திறம் . |
கைவல்லியம் | ஒருமைத் தன்மை ; தனிமை ; வீடுபேறு ; கைகூடுகை ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
கைவலச்செல்வன் | அருகன் . |
கைவலம் | வீடுபேறு . |
கைவலிதல் | கைகடந்துபோதல் . |
கைவலை | சிறுவலை . |
கைவழக்கம் | கொடைக்குணம் ; கோயிலில் பூசகர் முதலியோர்க்கு உரிய உரிமை ; தொழிலின் திறமை ; ஈமக்கடன் ஆற்றிய பின்பு குடிமக்கள் ஐவர்க்கும் கொடுக்கும் பணம் முதலியன . |
கைவழங்குதல் | கொடுத்தல் ; கையடித்து உறுதி கூறுதல் . |
கைவழி | யாழ் ; கைவசமாக அனுப்பிய பொருள் ; ஒற்றையடிப்பாதை ; சிறு கிளையாறு . |
கைவளம் | கைராசி ; கைப்பொருள் ; செழுமை ; கைத்தொழிலின் திறம் . |
கைவளர்தல் | போற்றப்பட்டு வளர்தல் ; பழக்கமுறுதல் . |
கையேடு | நாட்குறிப்புக் கணக்கு ; சிறிய ஏட்டுப் புத்தகம் ; பெருஞ் செலவுவிவரக் கணக்குப் புத்தகம் . |
கையேந்தி | இரவலன் , பிச்சைக்காரன் . |
கையேந்துதல் | இரந்து வாங்குதல் , யாசித்தல் . |
கையேற்பு | பெறுகை ; யாசிக்கை ; களப்பிச்சை வாங்குகை ; ஒரு தொழிலை ஏற்றுக்கொள்கை . |
கையேற்றம் | செல்வப்பெருக்கான நிலை . |
கையேறல் | நடுத்தரமான முத்து . |
கையேறுதல் | கையிற் கிடைத்தல் ; கைமாறுதல் . |
கையை | தங்கை . |
கையைக்கடித்தல் | எதிர்பார்த்ததற்குமேல் செலவாதல் ; இழப்பாதல் . |
கையைக் குறுக்குதல் | செலவைக் குறைத்தல் ; உலோபஞ் செய்தல் . |
கையைப்பிடித்தல் | திருமணஞ் செய்தல் ; காண்க : கையைக்கடித்தல் ; கையைப் பிடித்து இழுத்தல் . |
கையொட்டுக்கால் | கருப்பூரவகை . |
![]() |
![]() |
![]() |