கொட்டணை முதல் - கொடித்தடம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கொடிஞ்சிற்பலகை எருதுகளைக்கொண்டு ஆற்றுக்கால் தோண்டும் பலகை .
கொடித்தடம் ஒற்றையடிப்பாதை .
கொட்டை விதை ; தாமரைக்கொட்டை ; பலாப்பிஞ்சு ; உருண்டை வடிவம் ; மகளிர் தலையணிவகை ; கொட்டைக்கரந்தை ; பாதக் குறட்டின் குமிழ் ; ஆடைத்தும்பினைத் திரள முடிந்த முடிச்சு ; கிடுகு தாங்கும் கால் முதலியவற்றின் பகுதி ; நூற்குங் கதிரின் கொட்டை ; பஞ்சுச் சுருள் ; யானையின் அணி விசேடம் ; சும்மாடு ; சிறு தலையணை ; நெல்வகை .
கொட்டைக்கரந்தை ஒரு கரந்தைச்செடிவகை .
கொட்டைக்காய்ச்சி சதைப்பற்றுக் குறைந்து கொட்டை பருத்துள்ள காய்காய்க்கும் மா ; பனைமரம் .
கொட்டைநூற்றல் பஞ்சு நூற்றல் ; பயனற்ற வேலை செய்தல் ; வீண்காலம் போக்குதல் .
கொட்டைப்பயறு ஒரு பயறுவகை .
கொட்டைப்பாக்கு வேகவைக்காமல் உணக்கிய முழுப் பாக்கு .
கொட்டைப்பாசி நீர்ப்பாசிவகை .
கொட்டைப்புளி விதை எடுக்காத புளி .
கொட்டைபரப்புதல் பகைவரது நாட்டை அழித்துத் தரைமட்டமாக்குதல் .
கொட்டைபோடுதல் விதை விதைத்தல் ; கடலைக் கொட்டை போடுதல் ; பலாமரம் பிஞ்சு பிடித்தல் ; தொழிலில் பழக்கப்படுதல் ; சாதல் .
கொட்டைமுத்து சிற்றாமணக்கு விதை .
கொட்டைமுந்திரி ஒரு முந்திரிவகை .
கொட்டைமுந்திரிகை ஒரு முந்திரிவகை .
கொட்டையாடுதல் பஞ்சு பன்னுதல் , பஞ்சைப் பிரித்தெடுத்தல் .
கொட்டையிடுதல் பஞ்சுச் சுருள் செய்தல் .
கொட்பு சுழற்சி ; சுற்றித்திரிகை ; மனச் சுழற்சி ; சரராசி ; வளைவு ; கருத்து ; நிலையின்மை .
கொட்பேரன் கொள்ளுப்பேரன் .
கொடாக்கண்டன் சிறிதும் ஈயாதவன் .
கொடாரி காண்க : கோடரி .
கொடி படர்க்கொடி ; ஆடையுலர்த்துங் கொடி ; கொப்பூழ்க்கொடி ; மகளிர் கழுத்தணி ; அரைஞாண் ; ஒழுங்கு ; நீளம் ; சிறு கிளைவாய்க்கால் ; கொடி ; காற்றாடி ; கலத்துவசம் என்னும் யோகம் ; கேது ; காக்கை ; கிழக்குத்திசை .
கொடிக்கம்பம் காண்க : கொடிமரம் .
கொடிக்கயிறு முறுக்கேறின கயிறு ; கொடியாகக் கட்டின கயிறு .
கொடிக்கரும்பு நேராக வளர்ந்த கரும்பு .
கொடிக்கவி கொடியைப்பற்றிய் பாட்டு ; கொடியேறும்படி பாடிய பாட்டு ; சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்று .
கொடிக்கழல் கழற்சிக்கொடி .
கொடிக்கள்ளி கொடிவகை ; கள்ளிச்செடிவகை .
கொடிக்கால் வெற்றிலை ; வெற்றிலைத் தோட்டம் ; காய்கறித் தோட்டம் ; வெற்றிலைக்கொடி ; படருங்கொம்பு ; கொடிக்கம்பம் .
கொடிக்கால்மூலை ஊரின் வடமேற்கு மூலை .
கொடிக்கூடை நாணற்கூடை .
கொடிகட்டிநிற்றல் கொடிகட்டுதல் ; உறுதிப்பாட்டுடன் முயற்சியை மேற்கொள்ளுதல் ; நோயாளி முதலியோர் கயிற்றைப் பிடித்துக் கொண்டு நிற்றல் .
கொடிகட்டிவாழ்தல் மிகுந்த செல்வ வாழ்க்கையில் இருத்தல் .
கொடிகட்டுதல் கொடியெடுத்தல் ; போருக்கு வருதல் ; கொடியேற்றுதல் .
கொடிச்சி குறிஞ்சிநிலப் பெண் ; கொடிவேலி ; காமாட்சிப்புல் ; கன்னம் ; புற்றாங்சோறு .
கொடிச்சிவால் நுனி வெளுத்த பசுவின் வால் .
கொடிசுற்றிப்பிறத்தல் பெற்றோர்க்கும் தாய் மாமனுக்கும் தீங்கு விளைதற்கு அறிகுறியாகக் கொப்பூழ்க்கொடி சுற்றிக்கொண்டு குழந்தை பிறத்தல் .
கொடிஞ்சி கைக்குதவியாகத் தேர்த்தட்டின் முன்னே உள்ள அலங்கார உறுப்பு ; தேர் .
கொடிஞ்சில் எருதுகளைக்கொண்டு ஆற்றுக்கால் தோண்டும் பலகை .
கொட்டணை ஒரு பூண்டுவகை .
கொட்டம் இறுமாப்பு ; சேட்டை ; கடுகடுப்பு ; முழக்கம் ; நீர் முதலியன ஒழுகுகை ; மாடுகளுக்கு மருந்து கொடுக்கும மூங்கிற் குழாய் ; நூற்குங் கொட்டை ; சிறிய ஓலைப்பெட்டி ; மாட்டுத்தொழுவம் ; ஒரு மணப்பண்டவகை ; வீடு .
கொட்டமடித்தல் மனம் போனபடி அரட்டையடித்தல் .
கொட்டறை காண்க : கொட்டடி .
கொட்டன் கொட்டாப்புளி ; பருத்தவன் ; பருத்தது ; தேங்காய் .
கொட்டாப்பிடி உளிமேல் அடிக்கும் ஆயுதம் , மரச்சுத்தியல் .
கொட்டாப்புளி உளிமேல் அடிக்கும் ஆயுதம் , மரச்சுத்தியல் .
கொட்டாய் காண்க : கொட்டகை .
கொட்டாரம் தானியக்களஞ்சியம் ; நெல் முதலிய தானியங் குற்றும் இடம் ; யானைக்கூடம் ; அரண்மனை ; அரண்மனை முதலியவற்றின் தலைவாயில் .
கொட்டாவி வாயைத் திறந்து வெளிவிடும் நெட்டுயிர்ப்பு .
கொட்டாவிவிடுதல் வாயால் நெட்டுயிர்த்தல் ; இறத்தல் ; களைத்துப்போதல் .
கொட்டாறு உப்பளம் .
கொட்டி நீர்க்கொடிவகை ; கொடுகொட்டி ; தாளம் ; வாயில் ; கூட்டம் ; கோயில்வாசல் .
கொட்டிக்கொடுத்தல் அதிகமாகக் கொடுத்தல் ; அதிகமாக கண்டித்தல் .
கொட்டிக்கொள்ளுதல் நிரம்ப உண்ணுதல் ; மேற்போட்டுக் கொள்ளுதல் .
கொட்டிச்சேதம் பதினோர் ஆடல்களுள் திரிபுரம் எரித்த காலை சிவனாடிய கூத்து .
கொட்டிப்பேசுதல் குத்திப்பேசுதல் .
கொட்டிமத்தளம் பெரிய மத்தளம் .
கொட்டியம் எருது ; பொதிமாட்டுத் திரள் .
கொட்டியான் சுமைகாரன் ; பயிரில் விழும் நோய்வகை ; கெடுதியை உண்டுபண்ணுவது .
கொட்டில் மாட்டுத்தொழுவம் ; வில்வித்தை பயிற்றுமிடம் ; கொட்டகை ; சிறு குடில் .
கொட்டு அடி ; வாத்திய அடிப்பு ; வாத்தியம் ; தாளத்தில் அரைமாத்திரைக் காலம் ; தேள் முதலியன கொட்டுகை ; தோண்டு கருவிவகை ; மண்வெட்டி ; கொட்டுகை ; உடல் ; நெற்கூடு ; பிரம்புக்கூடை ; பனந்துண்டு ; மலடி .
கொட்டுக்காரன் மத்தளம் முதலியன வாசிப்பவன் ; மேளகாரச் சாதி .
கொட்டுக்கிடாரம் பெரிய கொப்பரை .
கொட்டுக்கிணறு பனந்துண்டுகளை வைத்துக்கட்டிய கிணறு .
கொட்டுக்குடவை உடுக்கைபோல் வடிவமைந்த பாத்திரம் .
கொட்டுக்கூடை கிண்ண வடிவமான கூடை ; கூடைபோன்ற வடிவுள்ள உலோக பாத்திரம் .
கொட்டுதல் வாத்தியம் முழக்குதல் ; சம்மட்டியால் அடித்தல் ; கையால் தட்டுதல் ; பஞ்சரைத்தல் ; நெற்குற்றுதல் ; அடித்தல் ; தேள் , குளவி முதலியன கொட்டல் ; சொரிதல் ; கூடை முதலியவற்றில் இருந்து பண்டங்களைக் கொட்டுதல் ; அப்புதல் ; அறைந்துகொள்ளுதல் ; பல்லி சொல்லுதல் ; உதிர்தல் ; கண் இமைத்தல் .
கொட்டுப்பிடி கொட்டாப்புளி , உளியடிக்கும் ஆயுதம் .
கொட்டுமுழக்கு விழாக்காலங்களில் முழக்கும் மேளதாளம் முதலிய வாத்திய இசை .
கொட்டுமுறி உயர்ந்த பித்தளைவகை .
கொட்டுமேளம் மேளவாத்தியம் .
கொட்டுரசம் பருப்பிடாத இரசம் .
கொட்டுவாய் தேள் முதலியன கொட்டின இடம் ; நெருக்கடியான சமயம் .
கொட்டுவான் தேள் ; கொட்டாப்புள்ளி ; கொட்டு வேலை செய்யுங் கன்னான் .
கொட்டுவேலை கொட்டுக் கன்னார் வேலை .