கோட்டகம் முதல் - கோடித்தரை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கோடதகம் சுக்கு .
கோடபதி கோடவதி ; உதயணனுடைய யாழ் .
கோடம் பேரொலி ; வெண்கலம் ; எல்லை ; குதிரை ; கோட்டை ; குடில் ; மாமரம் ; வளைவு ; செங்கருங்காலி ; முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று ; ஒருகால் முடம் .
கோடரம் மரக்கொம்பு ; மரம் ; சோலை ; தேரின் மொட்டு ; எட்டிமரம் ; குரங்கு ; மரப்பொந்து ; குதிரை .
கோடரவம் துன்பம் , வருத்தம் .
கோடரி கோடாலி , மரம்வெட்டுங் கருவி .
கோடரிக்காம்பு கோடாலியின் பிடி ; தன்குலத்தை அழிப்பவன் .
கோடல் கொள்ளுகை ; பாடம் கேட்கை ; மனத்துக்கொள்ளுகை ; வளைவு ; முறித்தல் ; வெண்காந்தள் .
கோடாவதி வீணை .
கோடவி துர்க்கை .
கோடா சாராய வண்டல் ; கேலி .
கோடாகோடி காண்க : கோடானுகோடி .
கோடாங்கி வரிக்கூத்துவகை ; மாதராடை ; உடுக்கை .
கோடாசலம் பேதியைக் கட்டும் மருந்துவகை .
கோடாசுழி கோடகசாலைப்பூண்டு .
கோடாஞ்சி பெரிய மரவகை .
கோடாய் செவிலித்தாய் .
கோடாரி காண்க : கோடரி .
கோடாலம் பிறைபோல் வளைந்த மாலைவகை .
கோடாலி காண்க : கோடரி .
கோடாலிக்காம்பு காண்க : கோடரிக்காம்பு .
கோடானுகோடி பலகோடி ; அளவில்லாமை .
கோடி நூறு நூறாயிரம் , நூறு லட்சம் ; சீலை ; புதுச்சீலை ; புதுமை ; வளைவு ; முடிமாலை ; தொகுதி ; அறுபத்துநான்க அக்குரோணி கொண்ட படை ; இருபது ; வரிசை ; நுனி ; கடலுட் செல்லும் தரைமுனை ; மூலை ; வீட்டின் புறக்கோடி ; விளிம்பு ; படையின் பிற்கூழை ; தேவைக்கு அதிகமான தண்ணீர் ; குறிப்பு: வயிரக் குணங்களுள் ஒன்று ; எல்லை .
கோடிக்கரை தனுக்கோடி முதலிய தீர்த்த கட்டம் .
கோடிக்கரையான்தோணி கள்ளத்தோணி .
கோடிக்கல் கட்டடத்தின் மூலைக்கல் .
கோடிக்காரன் மிக்க செல்வமுடையவன் ; கொடுக்கல்வாங்கல் செய்யும் மார்வாரி ; சீபாதம் தாங்கி .
கோடிக்குத்தல் தெருப்பாய்ச்சல் .
கோடிகம் பூந்தட்டு ; குண்டிகை ; அணிகலச் செப்பு ; ஆடை .
கோடிகர் ஆடை நெய்வோர் .
கோடிகாண்பித்தல் குறிப்புக் காட்டுதல் .
கோடித்தரை விளைநிலமாகப் புதிதாகத் திருத்தப்பட்ட நிலம் .
கோட்டம் வளைவு ; வணக்கம் ; நடுநிலை திறம் புகை ; மனக்கோணல் ; பகைமை ; பொறாமை ; நாடு ; நகரம் ; தோட்டம் ; கரை ; யாழ் ; மாக்கோலம் ; உண்பன ; பசுக்கொட்டில் ; பசுக்கூட்டம் ; குளம் ; வயல் ; நீர்நிலை ; குரங்கு ; வெண்குட்டம் ; அறை ; கோயில் ; ஒரு மணப்பண்டவகை ; மாறுபாடு ; சிறைச்சாலை ; இடம் ; வாசனைச் செடிவகை ; குராமரம் ; பாசறை ; பச்சிலை .
கோட்டரவு மனவருத்தம் ; வாட்டம் ; துன்பம் .
கோட்டலை துன்பம் ; விகடக்கூத்து ; மூடநடத்தை ; சரசம் .
கோட்டான் கூகை ; கொக்குவகை .
கோட்டி துன்பம் ; பைத்தியம் ; பசுடி ; நிந்தை ; சபை ; குழு ; கூட்டம் ; பேச்சு ; அழகு ; ஒருவரோடு கூடியிருக்கை ; கோபுரவாயில் ; மனைவாயில் ; கிட்டிப்புள் ; விகடக்கூத்து .
கோட்டிக்காரன் பைத்தியக்காரன் .
கோட்டிகொள்ளுதல் அவையிற் பேசுதல் ; துன்புறுத்தல் ; இகழ்தல் .
கோட்டித்தல் ஆரவாரித்தல் .
கோட்டிலக்கம் வகுத்த மிச்சம் ; ஒருவகைச் சதுரக்கணக்கு .
கோட்டினம் எருமைக்கூட்டம் .
கோட்டு நெற்கூடு ; சீட்டாட்டத்தில் எல்லாப் பிடிகளையும் பிடித்து வெல்லுதல் .
கோட்டுதல் வளைத்தல் ; ஓவியம் வரைதல் ; முறித்தல் ; கட்டுதல் .
கோட்டுநூறு கிளிஞ்சிற் சுண்ணாம்பு .
கோட்டுப்பூ மரக்கொம்புகளில் தோன்றும் பூ .
கோட்டுமண்கொள்ளுதல் மண்ணைக் கொம்பாற் குத்திக் கிளறுதல் .
கோட்டுமலை கொம்புள்ள மலையாகிய யானை .
கோட்டுமா யானை ; காட்டுப்பன்றி ; எருமைக் கடா .
கோட்டுமீன் சுறாமீன் .
கோட்டுவாத்தியம் வீணைவகை .
கோட்டுவாய் கோடைவாய் ; கொட்டாவி .
கோட்டுவான் கோட்டான் ; ஒரு நீர்ப்பறவை வகை .
கோட்டூர்தி யானைத்தந்தத்தாற் செய்த பல்லக்கு .
கோட்டெங்கு குலைகளையுடைய தெங்கு .
கோட்டை மதிலரண் ; இஞ்சி ; காடு ; பூட்டின் ஓர் உறுப்பு ; வீட்டின் உள்ளிடம் ; இருபத்தொரு மரக்கால் கொண்ட ஓர் அளவை ; நெல்லை உள்ளே பெய்து கட்டிய நெற்கோட்டை ; ஒரு நிலவளவு ; வைக்கோற்போர் ; இலை , புளி முதலியவற்றின் கட்டு ; ஏராளம் ; பரிவேடம் .
கோட்டைகட்டுதல் மதிலரண் எழுப்புதல் ; பெரும்பொருள் திரட்டுதல் ; மனோராச்சியம் செய்தல் ; பொய்க்கதை கட்டுதல் ; பரிவேடம் கொள்ளுதல் ; நெல்விதையைக் கோட்டையாகக் கட்டுதல் .
கோட்டைப்போர் வைக்கோற்போர் .
கோட்டைபிடித்தல் பகைவரது நாட்டைப் பிடித்தல் ; அரிய செயலைச் செய்துமுடித்தல் .
கோட்டைமேடு அகழிககுப் புறம்பேயுள்ள மண்மேடு .
கோட்டைவெளி கோட்டைக்கு வெளியிலுள்ள இடம் .
கோட்படுதல் கொள்ளப்படுதல் , பிடிக்கப்படுதல் ; அறியப்படுதல் ; வலிமை கொள்ளுதல் .
கோட்படுபதம் மாட்டுக்குளம்பு .
கோட்பறை செய்திகளை நகரத்தார்க்குத் தெரிவிக்கும் பறை .
கோட்பாடு கொள்கை ; நடத்தை .
கோட்பு கொள்ளுகை ; வலிமை .
கோட்புகுதல் மரம் முதலியன பயன்கொள்ளும் பருவத்தனவாசல் .
கோடகசாலை ஒரு பூண்டுவகை .
கோடகம் முடியுறுப்புள் ஒன்று , சிகரமாகச் செய்த முடிவகை ; பல தெருக்கள் கூடுமிடம் ; குதிரை ; அசுவதிநாள் ; புதுமை ; குண்டிகை .
கோடங்கி உடுக்கை ; உடுக்கை அடித்து குறிசொல்வோன் .
கோடங்கிழங்கு சிற்றரத்தைச் செடி .
கோடணை ஒலி ; முழக்கம் ; யாழ் வாசித்தல் ; வாச்சியப் பொது ; அலங்காரம் ; கொடுமை .
கோடணைபோக்குதல் பெருமுழக்கம் உண்டாகச் செய்தல் .
கோட்டகம் கரை ; பள்ளம் ; ஆழமான நீர்நிலை .
கோட்டங்காவலர் சிறைக்கூடங் காப்போர் .