கோடித்தல் முதல் - கோத்தை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கோத்திரசம் ஒரு குலத்தில் தோன்றியது .
கோத்திரசன் ஒரு குலத்தில் பிறந்தவன் .
கோத்திரப்பெயர் குடிப்பெயர் .
கோத்திரம் குலம் ; பூமி ; வரகு ; நெட்டிப்புல் .
கோத்திரமின்மை மறுபிறப்புக்குரிய கருமம் இல்லாமையாகிய அருகன் எண்குணத்துள் ஒன்று .
கோத்திரவம் வரகு .
கோத்திரி நற்குலத்தோன் ; மலை ; முந்திரிகை மரம் ; சிறுபந்தம் .
கோத்திரிகை முந்திரிகைமரம் .
கோத்திரை பூமி .
கோத்திழைத்தல் பாய் ; கூடை ; முதலியவற்றைப் பழுதுபார்த்தல் .
கோத்து பட்டாளந் தங்குமிடம் .
கோத்துக்கொடுத்தல் பிறருக்கு ஊசியில் நூலைக் கோத்துக்கொடுத்தல் ; இருவருக்குள் பகையுண்டாகும்படி ஒருவர் பேச்சை மற்றவர்க்கு மாற்றி உரைத்தல் .
கோத்தும்பி அரசவண்டு ; கோத்தும்பி என்னும் தொடரை ஈற்றில் கொண்டுவரும் பாடல்களையுடைய திருவாசகப் பதிகம் .
கோத்துவாங்குதல் ஆடைக்கரையை வேறு நூலில் தனியாக நெய்தல் ; கோணி முதலின தைத்தல் .
கோத்துவிடுதல் துன்பத்துக்கு உள்ளாக்குதல் ; பகைமூட்டுதல் .
கோத்தை பழுது .
கோடு வளைவு ; நடுநிலை நீங்குகை ; யானையின் தந்தம் ; விலங்குகளின் கொம்பு ; ஊதுகொம்பு ; நீர்வீசுங் கொம்பு ; மரக்கொம்பு ; யாழ்த்தண்டு ; 'கெ' , 'கே' முதலிவற்றின் தலைப்பிலுள்ள கொம்புக் குறியீடு ; பிறைமதி ; சங்கு ; குலை ; மயிர்முடி ; மலையுச்சி ; மலை ; மேட்டு நிலம் ; வரி ; ஆட்டம் முதலியவற்றிற்கு வகுத்த இடம் ; நீர்க்கரை ; குளம் ; காலவட்டம் ; வரம்பு ; ஆடைக்கரை ; முனை ; பக்கம் ; அரணிருக்கை ; கொடுமை ; நீதிமன்றம் .
கோடுகீறுதல் குறிப்பிட்டுக் காண்பித்தல் .
கோடுதல் வளைதல் ; நெறிதவறுதல் ; நடுவுநிலைமை தவறுதல் ; வெறுப்புறுதல் .
கோடை மேல்காற்று ; வேனிற்காலம் ; வெயில் ; கோடைப்பயிர் ; கோடைக்கானல் ; குதிரை ; வெண்காந்தள் ; செங்காந்தள் .
கோடைக்கிழங்கு சிற்றரத்தை .
கோடைக்கொட்டை நிலக்கடலை .
கோடைச்சவுக்கு ஆற்றுச்சவுக்கு .
கோடைப்பூசணி கோடைக்காலத்தில் காய்க்கும் பூசணிவகை .
கோடைப்போகம் கோடைக்காலத்துப் பயிர் .
கோடையிடி கோடைப்பருவத்து மழையிடி .
கோண் வளைவு ; மாறுபாடு ; கொடுங்கோன்மை ; கோடம் ; நுண்ணிய பகுதி ; பாத்திரத்தின் மூக்கு .
கோண்டம் குறிஞ்சாக்கொடி ; நெருஞ்சில் .
கோண்டன் கீழ்மகன் ; பெருங்கொப்பூழன் .
கோண்டை இலந்தைப்பழம் ; கமுகு .
கோண்மா புலி , சிங்கம் முதலிய கொடிய வன விலங்குகள் .
கோண்மீன் கிரகம் .
கோண்விழுதல் கோணலாதல் .
கோணக்களிகிண்டுதல் குழப்பம் உண்டாக்குதல் .
கோணக்கொம்பு வாங்கல் என்னும் ஊதுகருவி ; வளைவான கொம்பு .
கோணங்கி கோமாளி ; உடுக்கையடித்துக் குறி சொல்வோன் .
கோணங்கிக்கூத்து கோமாளிக்கூத்து ; ஒழுங்கற்ற நடையுடைகள் .
கோணங்கித்தாசரி உடலைக் கோணலாக வளைத்து நடிக்கும் ஒர் இனத்தவன் .
கோணம் வளைவு ; வளைந்த வாள் ; யானைத் தோட்டி ; சிறு தெரு ; குதிரை ; மூக்கு ; மூலை ; ஒதுக்குப்புறமான இடம் ; வயற்காடு ,
கோணல் வளைவு ; கூன் ; மாறுபாடு ; மனவுளைச்சல் .
கோணல்மாணல் தாறுமாறு .
கோணல்மூஞ்சி வெறுப்பு , சிரிப்பு முதலியவற்றை காட்டும் முகம் .
கோணவட்டம் காண்க : கோணாவட்டம் .
கோணவாய் கோணலாயுள்ள வாய் .
கோணன் கூனன் ; நீதிக்கேடன் .
கோணாமுகம் சூழ அகழியிருக்கை .
கோணாய் ஓநாய் ; ஆண்நரி .
கோணாவட்டம் கோணத்துள் வட்டம் ; அரச விருதுகளுள் ஒன்று .
கோணி சாக்குப்பை ; எட்டு மரக்கால்கொண்ட ஓர் அளவு ; பன்றி ; அத்திமரம் .
கோணிக்கயிறு சாக்குத் தைக்கும் சணல்நூல் .
கோணிப்பை சாக்கு .
கோணியல் காண்க : கோணிப்பை .
கோணியலூசி சாக்குத் தைக்கும் ஊசி .
கோணயூசி சாக்குத் தைக்கும் ஊசி .
கோணுதல் வளைதல் ; கோணலாயிருத்தல் ; நெறிபிறழ்தல் ; மாறுபடுதல் ; வெறுப்புக் கொள்ளுதல் .
கோணை கோணல் ; வளைவு ; கொடுமை ; தொல்லை ; வலிமை ; அழிவின்மை ; பீடை .
கோணைமாதம் பீடைமாதமாகிய மார்கழி .
கோணையன் வக்கிரகுண முள்ளவன் .
கோத்தணிகை காண்க : கொடிமுந்திரிகை .
கோத்தல் மணி முதலியவற்றினோடு நூலைப் புகுத்தியிணைத்தல் ; ஒழுங்குபடுத்துதல் ; முறையாகக் கூறுதல் ; தொகுத்துரைத்தல் ; தொடுத்தல் ; திறமையாகக் கதை முதலியன புனைந்து கூறுதல் ; உடுத்துதல் ; கைபிணைத்தல் ; ஒன்றுசேர்த்தல் ; கலந்துகொள்ளுதல் ; எதிர்த்தல் .
கோத்தனி காண்க : கோத்தணிகை .
கோடித்தல் அலங்கரித்தல் ; ஒலித்தல் ; அமைத்தல் ; மனோரதஞ் செய்தல் ; வேண்டுதல் .
கோடிதீர்த்தம் தனக்கோடி முதலிய கோடிக்கரை .
கோடிப்பருவம் இளையப் பருவம் .
கோடிப்பாம்பு பழக்கப்படாத பாம்பு .
கோடிப்பாலை பாலைவகை ; ஒரு பண்வகை .
கோடிபோடுதல் கணவன் இறந்தவுடன் கைம்பெண்ணுக்கு உற்றார் புதுப்புடவை இடுதல் .
கோடிமுரிதல் வயிரக் குற்றம் பன்னிரண்டனுள் ஒன்று .
கோடியர் கூத்தர் ; பல்லக்குத் தூக்குவோர் .
கோடியலூர்தி யானைத் தந்தத்தாற் செய்யப்பட்ட வாகனம் .
கோடியில்லாமை காண்க : கோடிமுரிதல் .
கோடியோடுதல் ஏரி நீர்நிரம்பி வழிதல் .
கோடிரம் கீரி ; இந்திரகோபம் .
கோடீசுவரன் பெருஞ்செல்வன் .
கோடீரம் முடி ; சடை ; இந்திரன் வில் .