சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சக்கரைக்குத்தி | குத்தூசி , கோணியிலுள்ள பண்டத்தைச் சோதிக்கக் குத்தியெடுக்கும் ஊசி . |
சக்கல் | மக்கல் ; சக்கை ; சாரமற்றது . |
சக்கவாலர் | சக்கரவாள மலையிலிருப்பவரான வியந்திர தேவர்கள் . |
சக்களத்தி | மாற்றாளான மனைவி ; போலிப்பொருள் . |
சக்களத்திச்சண்டை | ஒருவனுடைய மனைவியருக்குள் நிகழும் சண்டை . |
சக்களத்திப் போராட்டம் | ஒருவனுடைய மனைவியருக்குள் நிகழும் சண்டை . |
சக்களமை | சக்களத்திகளுக்குள் பகைமை ; கடும்பகை . |
சக்களவன் | ஒருத்தியைக் காதலிக்கும் பலருள் ஒருவன் . |
சக்களிதல் | தட்டையாதல் . |
சக்களையன் | சோம்பேறித் தடியன் . |
சக்காத்து | இலவசம் , விலையின்றிப் பெறுகை . |
சக்காந்தம் | ஏளனம் , பரிகாசம் . |
சக்காரம் | தேமாமரம் . |
சக்கி | துண்டுச்சட்டம் . |
சக்கிமுக்கி | நெருப்புண்டாக்கப் பயன்படும் கல் , தீத்தட்டிக் கல் . |
சக்கிமுக்கிக்கல் | நெருப்புண்டாக்கப் பயன்படும் கல் , தீத்தட்டிக் கல் . |
சக்கியம் | நட்பு ; சிநேகம் ; இயன்றது . |
சக்கியன் | திறனுடையன் ; தோழன் . |
சக்கியார்த்தம் | சொல்லாற்றலால் உணரும் பொருள் . |
சக்கிரநாயகம் | ஓமாலிகைகளுள் ஒன்றாகிய புலி நகம் . |
சக்கிரபாதம் | உருளைகளைக் காலாக உடைய வண்டி ; வட்டவடிவுள்ள கால்களை உடைய யானை . |
சக்கிரம் | வட்டம் . |
சக்கிரமுகம் | பன்றி . |
சக்கிரயானம் | வண்டி . |
சக்கிரலேகை | ஒருவனது நற்பேற்றைக் காட்ட வட்டவடிவாகக் கையில் அமைந்த கோடு . |
சக்கிரவாதம் | சுழல்காற்று . |
சக்கிரன் | இந்திரன் . |
சக்கிராதம் | பன்றி . |
சக்கிரி | சக்கரத்தை உடையவன் ; அரசன் ; திருமால் ; இந்திரன் ; குயவன் ; செக்கான் ; பாம்பு ; |
சக்கிரிகை | முழந்தாள் . |
சக்கட்டையாள் | வலியற்றவன் , ஆற்றலற்றவன் . |
சக்கடி | ஒரு கூத்துவகை . |
சக்கடிணி | ஒரு கூத்துவகை . |
சக்கத்து | முத்துவகை . |
சக்கதேவி | காண்க : சக்கம்மா . |
சக்கந்தம் | நிந்தை . |
சக்கப்பிரதமன் | பலாப்பழங்கொண்டு செய்யப்படும் பாயசவகை . |
சக்கம்மா | ஒரு பெண்தேவதை . |
சக்கரக்கல் | திருமால்கோயில்களுக்கு இறையிலியாக விடப்பட்ட நிலங்களின் எல்லை குறிக்கும் திருவாழிக்கல் . |
சக்கரக்கவி | வண்டிச் சக்கரம் போன்ற சித்திரத்தில் அமையுமாறு பாடும் மிறைக்கவி . |
சக்கரக்கள்ளன் | உலோபி , ஒன்றுங்கொடாதவன் . |
சக்கரக்காரன் | செல்வன் . |
சக்கரச்செல்வம் | இந்திரனது செல்வம் ; பெருஞ்செல்வம் . |
சக்கரஞ்சுற்றுதல் | சுற்றி விளையாடுதல் ; சுழலுதல் ; பெரிதும் துன்புறுதல் . |
சக்கரத்தீவட்டி | வட்டத் தீவட்டி . |
சக்கரத்தேமல் | நற்பேற்றைக் குறிப்பதாகக் கருதப்படும் வட்டமாக உள்ள தேமல் . |
சக்கரத்தேர் | இழுப்புத்தேர் . |
சக்கரதரன் | சக்கரத்தைத் தரித்த திருமால் ; படத்தோடு கூடிய பாம்பு . |
சக்கரதாரி | திருமால் . |
சக்கரப்பொறி | வைணவத்தைப் பெறுதற்கு அடையாளமாக ஞானகுருவால் வலத்தோளில் பொறிக்கப்படும் சக்கரமுத்திரை ; இயந்திரப் பொறி . |
சக்கரபதி | தகரச்செடி . |
சக்கரபந்தம் | காண்க : சக்கரக்கவி . |
சக்கரபரிபாலனம் | அரசாட்சிசெய்கை . |
சக்கரபாணி | சக்கரப்பட்டையைக் கையிலுடைய திருமால் ; துர்க்கை . |
சக்கரம் | வட்டம் ; உருளை ; குயவன் சக்கரம் ; சக்கரப்படை ; கிரகச் சக்கரம் ; சக்கரபந்தம் ; சக்கரமாற்று ; பழைய நாணயவகை ; சக்கரவாகப் புள் ; சக்கர எந்திரம் ; செக்கு ; பூமி ; மதில் ; கடல் ; மலை ; பிறப்பு ; 60 ஆண்டுக்காலம் ; வட்டவடிவு ; பெருமை ; மலை மல்லிகை ; பீர்க்கு . |
சக்கரமாற்று | சீகாழியின் பன்னிரு பெயர்களையும் செய்யுள்தோறும் அமைத்து ஒரு பாடலின் இறுதியிற் கூறிய பெயரை அடுத்த பாடலின் முதலிற்கொண்டு கூறும் சம்பந்தர் தேவாரப் பதிகம் . |
சக்கரயூகம் | ஒரு படையணி , சக்கர வடிவாக அமைத்த படைவகுப்பு . |
சக்கரரேகை | ஒருவனது நற்பேற்றைக் காட்ட வட்டவடிவாகக் கையில் அமைந்த கோடு . |
சக்கரவர்த்தி | மன்னர்மன்னன் , அரசர்க்கரசன் , பேரரசன் : திகிரி மன்னவர் . |
சக்கரவர்த்தித்திருமகன் | தசரதச் சக்கரவர்த்தியின் மகனான இராமபிரான் . |
சக்கரவர்த்தினி | பேரரசி ; சடாமாஞ்சில் ; செம்பஞ்சு . |
சக்கரவாகம் | சக்கரவாளம் , இரவில் இணை பிரிந்து வருந்துவதாகக் கூறப்படும் ஒரு பறவைவகை ; ஒரு பண்வகை . |
சக்கரவாணம் | சக்கரம்போலச் சுழன்று தீப்பொறிகளைச் சிதறும் வாணம் . |
சக்கரவாளக்கோட்டம் | காவிரிப்பூம்பட்டினத்தில் சுடுகாட்டுப் பகுதியில் உள்ள கோயில் . |
சக்கரவாளம் | உட்புறம் ஒளியும் வெளிப்புறம் இருளுங்கொண்டு நிலவுலகத்தைச் சூழ்ந்துள்ளதாகக் கருதப்படும் மலை ; மேருமலையின் மூன்றாந் தாழ்வரை ; சக்கரவாளக்கோட்டம் ; சக்கரவாகம் ; வட்டவடிவு . |
சக்கரவிருத்தி | வட்டிக்கு வட்டி . |
சக்கரன் | திருமால் ; இந்திரன் ; பன்னிரு கதிரவருள் ஒருவன் . |
சக்கராகாரம் | வட்டவடிவு . |
சக்கராயுதன் | சக்கரப்படையை உடைய திருமால் . |
சக்கராயுதி | கொற்றவை . |
ச | ஓர் உயிர்மெய்யெழுத்து (ச்+அ) . |
சஃகுல்லி | சிற்றுண்டிவகை . |
சக்கட்டம் | பரிகாசம் ; நிந்தை . |
சக்கட்டிசக்கட்டியெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
சக்கட்டை | திறமையின்மை ; இளப்பம் ; மடையன் . |
![]() |
![]() |