சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சங்கமம் | கூடுகை ; கலத்தல் ; ஆறு ஆற்றோடேனும் கடலோடேனும் கூடுமிடம் ; சிவனடியார் திருக்கூட்டம் ; கோள்கள் சேருகை ; புணர்ச்சி ; இயங்குதிணைப் பொருள் . |
சங்கமர் | சிவனடியார் ; வீரசைவருள் ஒரு சாரார் . |
சங்கமருவுதல் | பண்டைத் தமிழ்ச் சங்கத்தாரது ஒப்புதல் பெறுதல் . |
சங்கரூபம் | சிவவடிவம் . |
சங்கமன்னர் | நட்பு வேந்தர் . |
சங்கமிருத்தல் | தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராயிருத்தல் . |
சங்கமுகம் | ஆறு கடலுடன் கூடுமிடம் . |
சங்கமுத்திரை | வலக்கைப் பெருவிரல் நுனி சுட்டுவிரல் அடியைத் தொடும் முத்திரை . |
சங்கமேந்தி | சங்கினைத் தரித்தோனாகிய திருமால் . |
சங்கயம் | ஐயம் , சந்தேகம் . |
சங்கரசாதி | கலப்புச்சாதி . |
சங்கரநாராயணன் | சிவனும் திருமாலும் இணைந்த வடிவமான சிவமூர்த்தம் . |
சங்கரம் | கலவை ; சாதிக்கலப்பு ; நஞ்சு ; போர் . |
சங்கரன் | இன்பத்தை அளிப்பவன் ; சிவன் ; பதினோர் உருத்திரருள் ஒருவர் ; கலப்புச் சாதியில் பிறந்தோன் . |
சங்கராதனம் | இரு கால்களையும் மடக்கி இரு படத்தையுங் கூட்டி நேரே ஊன்றி இருகால் முகப்பின்மேல் நிற்பது . |
சங்கராபரணம் | ஒரு பண்வகை . |
சங்கராலங்காரம் | கலவையணி . |
சங்கரி | பார்வதி . |
சங்கரித்தல் | அழித்தல் . |
சங்கரீகரணம் | சாதிக்கலப்பு . |
சங்கருடணம் | இழுத்தல் ; உழுதல் . |
சங்கருடணன் | பலராமன் ; பலபத்திரன் ; திருமாலின் வியூகமூர்த்தங்களுள் ஒன்றான அழிக்கும் சக்தி . |
சங்கரேகை | கையில் இருக்கும் சங்குவடிவான கோடு . |
சங்கலம் | கலப்பு ; ஊன் ; எண்கூட்டுதல் . |
சங்கலனம் | கலப்பு ; எண்கூட்டுகை . |
சங்கலார் | பகைவர் . |
சங்கலிகரணம் | முறையிலாப் புணர்ச்சி ; உயிர்க் கொலையாகிய பாவம் . |
சங்கலிதம் | கலப்பு ; எண் கூட்டுகை ; தொடர்ந்து செல்லும் எண்களின் தொடர் அல்லது கூட்டம் . |
சங்கலேகை | காண்க : சங்கரேகை . |
சங்கவளை | சங்கினால் செய்த வெள்வளையல் . |
சங்கம்வாங்குதல் | கூட்டிக்கொடுத்தல் . |
சகுணம் | குணத்தோடு கூடியது . |
சகுந்தம் | பறவை ; கழுகு ; கமுகு ; பூதம் . |
சகுல்லியன் | உறவன் ; பேரனுக்குப் பேரன் முதலிய தூர தாயாதி . |
சகுலி | அப்பவருக்கம் ; ஒரு மீன்வகை . |
சகுன்மம் | கருணைக்கிழங்கு ; காட்டுக்கருணை . |
சகுனத்தடை | கெட்டகுறி , தீநிமித்தம் . |
சகுனம் | பறவை ; பறவைகள் வலமிடமாதல் முதலிய நன்மைதீமைக் குறி ; நிலாமுகிப்புள் ; ஒரு கால அளவு ; கிழங்கு ; பேரரத்தை . |
சகுனி | பறவை ; கூகை ; துரியோதனன் மாமன் ; சகுனி போன்றவன் ; நிமித்தம் பார்ப்போன் . |
சகுனிமாமன் | சகுனியைப்போல் கெட்ட புத்தி கற்பிப்போன் . |
சகேரா | பண்டசாலை . |
சகோடம் | பதினாறு நரம்புகொண்டயாழ் . |
சகோடயாழ் | பதினாறு நரம்புகொண்டயாழ் . |
சகோத்திரம் | குலம் . |
சகோதரன் | உடன் பிறந்தான் . |
சகோதரி | உடன் பிறந்தாள் . |
சகோரம் | நிலாமுகிப்புள் , சக்கரவாகப் பறவை ; செம்போத்துப் பறவை ; பேராந்தை ; செம்பரத்தை . |
சங்க இலக்கியம் | சங்ககாலத்தில் தோன்றிய பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் . |
சங்கக்காப்பு | மகளிர் கையிலணியும் சங்குவளை . |
சங்கக்குழையான் | சங்கினால் இயன்ற காதணியை உடைய சிவன் . |
சங்கங்குப்பி | பீநாறிச்சங்குச்செடி . |
சங்கச்செய்யுள் | சங்ககாலத்துப் பாடல் . |
சங்கஞ்செடி | செடிவகை . |
சங்கட்ட சதுர்த்தி | விநாயகரைக் குறித்து இருக்கும் ஒரு நோன்பு . |
சங்கட்டம் | வருத்தம் ; நோய் ; இறப்புத்துன்பம் . |
சங்கடப் படலை | இருப்புக் கம்பியாலான தடைவாசல் . |
சங்கடப் படுதல் | வேதனையுறுதல் . |
சங்கடப்பாடு | வேதனையுறும் நிலை . |
சங்கடம் | வருத்தம் ; தடைவாசல் ; இடுக்குவழி ; இரட்டைத் தோணி . |
சங்கடி | கேழ்வரகு களி . |
சங்கடை | இறக்குந்தறுவாய் ; வருத்தம் . |
சங்கத்தமிழ் | சங்ககாலத்து வழங்கிய உயர்ந்த தமிழ் ; சங்கத்தமிழ் நூல்கள் . |
சங்கத்தார் | கூட்டத்தார் , அவையோர் ; பௌத்த சைன சங்கத்தார் ; மதுரைச் சங்கப் புலவர் . |
சங்கதம் | வடமொழி ; பொருத்தம் ; நட்பு ; முறையீடு . |
சங்கதி | செய்தி ; இசைவிகற்பம் ; தொடர்பு . |
சங்கநாதம் | சங்கின் முழக்கம் ; கோயிலில் சங்கு ஊதுதற்கு ஏற்பட்ட இனாம் . |
சங்கநிதி | குபேரனது ஒன்பான் நிதிகளுள் ஒன்று ; வட்டக் கிலுகிலுப்பைச் செடி . |
சங்கப்பலகை | மதுரையில் சங்கப் புலவர் இருந்த இருக்கை , தகுதியுள்ள புலவர்க்கு மட்டும் இடங்கொடுக்கக் கூடியதாய்ச் சிவபிரனால் சங்கத்தார்க்கு அருளபெற்ற ஒரு தெய்வப் பலகை . |
சங்கப்புலவர் | முற்காலத்தே மதுரையிலிருந்த சங்ககாலப் புலவர்கள் . |
சங்கபரணி | சங்கைக் கையிலுடைய திருமால் . |
சங்கபாலன் | எட்டுப் பெரிய நாகத்துள் ஒன்று . |
சங்கபீடம் | நாணல்வகை . |
சங்கபுங்கி | கடுகுரோகிணிவேர் . |
சங்கபுட்பம் | ஞாழல் . |
சங்கம் | சேர்க்கை ; அன்பு ; புணர்ச்சி ; ஈராறுகள் கூடுமிடம் ; ஆறு கடலோடு கூடுமிடம் ; அவை : புலவர் ; கூட்டம் ; பாண்டியர் ஆதரவுடன் விளங்கிய தலைச்சங்கம் , இடைச்சங்கம் , கடைச்சங்கம் என்ற முச்சங்கங்கள் ; சைன பௌத்தர்களின் சங்கம் ; சங்கு ; கைவளையல் ; நெற்றி ; குரல்வளை ; இலட்சங்கோடி ; படையிலொரு தொகை ; குபேரனது ஒன்பது நிதியுள் ஒன்று ; கணைக்கால் ; அழகு ; கைக்குழி . |
![]() |
![]() |
![]() |