சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சங்கினி | காமசாத்திரம் கூறும் நால்வகைப் பெண்களுள் மூன்றாம் இனத்தவள் ; பத்து நாடியுள் ஒன்று ; சங்கங்குப்பி . |
கங்கீதக்கச்சேரி | பக்கவாத்தியங்களுடன் நிகழும் பாட்டுக் கச்சேரி . |
சங்கீதக்காரன் | இசைவல்லான் . |
சங்கீதம் | இசை ; இசைப்பாட்டு ; வாத்தியத்துடன் பாடுதல் ; இராக சாத்திரம் ; கிச்சிலிக் கிழங்கு . |
சங்கீதலோலன் | இசையில் பெரிதும் ஈடுபட்டவன் . |
சங்கீதவாத்தியம் | இசைக்கருவி . |
சங்கீர்த்தனம் | சொல்லுகை ; புகழ்கை , துதிக்கை ; பாவ அறிக்கை . |
சங்கீர்தம் | ஒன்றுசேர்கை ; புணர்ச்சி . |
சங்கீரணசாதி | ஒன்பது அட்சரகாலங்கொண்ட தாளவளவை . |
சங்கீரணம் | புணர்ச்சி ; கலப்பு ; கலவையணி ; சங்கீரணசாதி ; மத்தளவகை . |
சங்கு | வலம்புரி , இடம்புரி , சலஞ்சலம் , பாஞ்சசன்னியம் என்னும் நான்கு வகைப்படும் நீர்வாழ் சங்கு ; ஐம்படை என்னும் அணியின் ஓர் உரு ; சங்கரேகை ; சங்கினாற் செய்தகைவளை ; குரல் என்னும் இசை ; மிடறு ; ஒரு பேரெண் ; படையிலொரு தொகை ; பெருவிரல் நிமிர மற்ற நான்கு விரல்களும் வளைந்து நிற்கும் இணையாவினைக்கைவகை ; கோழி ; கடுகுரோகிணி ; சங்கஞ்செடி ; முளை ; மட்டிப் படைக்கலம் . |
சங்குகர்ணம் | சங்குபோன்ற செவிகளையுடைய ஒட்டகம் ; கழுதை . |
சங்குச்சுரி | சங்கின் உட்பக்கத்துச் சுழி ; புரியாணி . |
சங்குசிதம் | சுருக்கமானது . |
சங்குட்டம் | எதிரொலி . |
சங்குத்தாலி | சங்குருவமுள்ள தாலி ; சங்கினாற் செய்யப்பட்டு மகளிர் அணியும் தாலி . |
சங்காரகாலம் | ஊழிக்காலம் . |
சங்காரதூதன் | அழித்தல் தொழிலுக்குரிய தேவதூதன் . |
சங்காரம் | அழித்தல் ; ஒடுக்குகை ; மூலகாரணத்தில் அனைத்தும் ஒடுங்கும் உலகவழிவு ; ஏழுவகை மேகங்களுள் பூவைப் பொழியும் மேகம் ; அடக்குகை . |
சங்காரமுத்திரை | கட்டைவிரல் நிற்க மற்ற நான்கு விரல்களையும் வளைத்துச் செய்யும் சிவபூசைக்குரிய முத்திரைவகை . |
சங்காரமூர்த்தி | அழித்தல்தொழிலைச் செய்யும் சிவன் . |
சங்காரன் | அழிப்பவன் . |
சங்காரி | குதிரைவாலிப் பயிர் . |
சங்காரித்தம் | ஏழுவகை மேகத்துள் பூப்பொழியும் மேகம் . |
சங்காவியம் | அச்சத்தால் நிகழும் அவசரநிலை . |
சங்காளர் | காமுகர் , புணர்ச்சியை நாடுபவர் . |
சங்கி | தொடர்புடையது . |
சங்கித்தல் | ஐயுறுதல் ; கனப்படுத்துதல் ; மனந்தடுமாறுதல் . |
சங்கிதம் | ஐயுறப்பட்டது . |
சங்கிதை | செய்தித் தொகுப்பு ; வேதத்தின் ஒருபகுதி ; வரலாறு . |
சங்கியை | எண் ; எண்ணிக்கை ; புத்தி ; ஆராய்வு . |
சங்கிரக்கூர்மை | கடலுப்பு . |
சங்கிரகணம் | ஏற்றுக்கொள்ளல் . |
சங்கிரகம் | சுருக்கம் ; திரட்டல் . |
சங்கிரகித்தல் | சுருக்கித் திரட்டல் . |
சங்கிரந்தனன் | இந்திரன் . |
சங்கிரம் | காடு |
சங்கிரமணம் | கோள்களிடன் நடை , கோள் ஓர் இராசியிலிருந்து அடுத்த இராசிக்குச் செல்லுகை ; சூரியன் ஓர் இராசியிலிருந்து அடுத்த இராசிக்குச் செல்லுகை ; சூரியன் வேறு இராசிக்குச் செல்லுங் காலம் . |
சங்கிரமம் | கோள்களிடன் நடை , கோள் ஓர் இராசியிலிருந்து அடுத்த இராசிக்குச் செல்லுகை ; சூரியன் ஓர் இராசியிலிருந்து அடுத்த இராசிக்குச் செல்லுகை ; சூரியன் வேறு இராசிக்குச் செல்லுங் காலம் . |
சங்கிரமித்தல் | இராசி மாறுதல் ; நோய் தொற்றுதல் ; சேர்தல் . |
சங்கிராந்தசமவாதம் | பாசுபதமதம் . |
சங்கிராந்தம் | ஒன்றிலிருந்து வேறொன்றிற்குப் போதல் ; தொடர்பு ; மாதப்பிறப்பு . |
சங்கிராந்தவாதசைவன் | காண்க : சங்கிராந்த வாதி . |
சங்கிராந்தவாதம் | மலம் நீங்கிய ஆன்மாவின்கண் திருவருள் பிரதிபலித்து அதனை அருள்வடிவமாக்கும் என்று கூறும் சமயம் . |
சங்கிராந்தவாதி | பாசுபத மதத்தைச் சார்ந்தவன் . |
சங்கிராந்தி | தைமாதப் பிறப்பு ; சூரியன் மகரராசியில் புகும் நாள் ; பொங்கல்விழாக் கொண்டாடும் தைமாதம் முதல் தேதி . |
சங்கிராந்தித்தல் | சம்பந்தப்படுதல் . |
சங்கிராமசூரன் | போர்வீரன் . |
சங்கிராமம் | போர் ; மலைமேல் வழி . |
சங்கிராமவிலக்கணம் | அறுபத்து நான்கு கலையுள் ஒன்றாகிய போர்த்தொழில் . |
சங்கிருதம் | வடமொழி ; கலப்பு . |
சங்கிலி | தொடர் ; இரும்பு முதலியவற்றால் வளையமாகச் செய்து ஒன்றோடொன்று சேர்க்கப்பட்டிருக்கும் கோவை ; ஒரு நிலவளவு ; வயிரச்சங்கிலி என்னும் அணி ; விலங்கு ; சுந்தரமூர்த்தி நாயனார் மனைவியருள் ஒருத்தி . |
சங்கிலிக்கோவை | தொடர்ச்சியானது . |
சங்கிலிப்பூட்டு | சங்கிலியின் பின்னல் ; சங்கிலிமாட்டும் அணி ; ஒருவகை மல்லுப்பிடி ; பெருஞ்சிக்கல் . |
சங்கிலிவடம் | சங்கிலிவடிவா யமைந்த கழுத்தணி ; தேரிழுக்குஞ் சங்கிலி . |
சங்கின்குடியோன் | நாகரவண்டு . |
சங்காரகர்த்தா | காண்க : சங்காரமூர்த்தி . |
சங்களை | மணற்கேணியில் கட்டுக்கட்டாக அமைக்கப்படும் பலகை . |
சங்களைக்கிணறு | பலகைக் கட்டுக்கிணறு . |
சங்கற்பஞானம் | மூவகை அறிவு ; அவை : அறிபவன் , அறிவு , அன்பு . |
சங்கற்பம் | மனத்திட்பம் ; மனக் கற்பனை ; ஒரு பொருளை இன்னதென்று உணரும் துணிவு ; கருத்து ; சித்தவிருத்தி ; விருப்பம் ; நியமம் ; எண்ணம் , கொள்கை . |
சங்கற்பமாசம் | சாந்திரமான மாதம் ; இரண்டு அமாவாசைகளைக் கொண்ட மாதம் . |
சங்கற்பனை | காண்க : சங்கற்பம் . |
சங்கற்பனைஞானம் | காண்க : சங்கற்பஞானம் . |
சங்கற்பித்தல் | உறுதிசெய்துகொள்ளுதல் . |
சங்கற்பிதம் | முன்னமே உறுதிசெய்யப்பட்டது . |
சங்கறுப்போர் | வளைபோழ்நர் , சங்குகளை அறுத்து வளை முதலியன செய்வோர் . |
சங்கனனம் | நரம்பு . |
சங்காசம் | உவமை , ஒப்புமை . |
சங்காட்டம் | சேர்க்கை . |
சங்காத்தம் | இணக்கம் , நட்பு ; வாழிடம் . |
சங்காத்தி | தோழன் . |
சங்காதம் | கூட்டம் ; அழித்தல் ; ஒரு நரகம் ; பாதங்களைக் கூட்டி ஐந்தடி எடுத்து வைக்கும் நடிப்புவகை . |
சங்காதமரணம் | எதிர்பாராத நிகழ்ச்சியால் மக்கள் பலர் ஒருசேர மடிகை . |
சங்காயம் | கரும்புத்தோகைச் சருகு ; வயலில் களையோடு முளைக்கும் ஆனைப்புல் ; உழுந்து , துவரை முதலியவற்றின் முற்றாத மணி . |
![]() |
![]() |
![]() |