சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சச்சாரம் | யானைக்கூடம் . |
சச்சிதம் | அலங்கரித்துவைக்கை . |
சச்சிதானந்தம் | உண்மை , அறிவு , இன்பம் என்னும் பரம்பொருட்குரிய முக்குணங்கள் . |
சச்சிதானந்தன் | சச்சிதானந்தம் உடையவன் , கடவுள் . |
சச்சிதானந்தை | உண்மை , அறிவு , இன்பம் என்னும் முக்குணங்களையுடைய சக்தி வடிவம் . |
சச்சு | மட்டமான புகையிலை ; சிறுமை ; பதர் ; சந்தடி ; தொந்தரவு ; பறவைமூக்கு ; கொஞ்சம் ; நீர்ச்சுண்டிச்செடி . |
சச்சை | ஆராய்ச்சி ; பலமுறை ஓதுதல் . |
சச்சையன் | உண்மைப் பொருளானவன் . |
சசகதி | குதிரைநடை ஐந்துனுள் முயலின் ஓட்டம் போன்ற நடை . |
சசகம் | காண்க : சசம் . |
சசசசவெனல் | காற்றின் ஒலிக்குறிப்பு . |
சசம் | முயல் . |
சசம்பரி | ஆமணக்கஞ்செடி . |
சசமதம் | கத்தூரி . |
சசன் | முயற்சாதி ஆடவன் . |
சசாபம் | சிறு நன்னாரிப்பூடு . |
சசி | கற்பூரம் ; முயற்கறை உடைய சந்திரன் ; இந்திராணி ; இந்துப்பு ; கடல் ; மழை . |
சசிகன்னம் | பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவு . |
சசிகேந்திரம் | சந்திரன் இலக்கினத்துக்கும் ஒன்று , நான்கு , ஏழு , பத்தாமிடங்களில் இருக்கை ; சந்திர மந்தோச்சத்துக்கும் அப்போதப்போ தமைந்த அதன் மத்திய நிலைக்குமுள்ள வேறுபாடு . |
சசிசேகரன் | சந்திரனைத் தலையில் தரித்த சிவன் . |
சசிதரன் | சந்திரனைத் தலையில் தரித்த சிவன் . |
சசிதேகம் | சந்திரவட்டம் . |
சசிமணாளன் | சசியின் கணவனான இந்தரன் . |
சசியம் | பயிர் ; தானியம் ; காய்கனி முதலிய விளைபொருள் ; மராமரம் ; இந்துப்பு ; கஞ்சாச் செடி ; நிலப் பனங்கிழங்கு . |
சசிவல்லவன் | காண்க : சசிமணாளன் . |
சசிவன் | மந்திரி ; நண்பன் . |
சசுபம் | அசோகமரம் , நெட்டிலிங்கம் . |
சஞ்சடி | காண்க : சச்சடி . |
சஞ்சத்தகர் | சூளுரை தவறாது நடக்கும் அரசவீரக் கூட்டத்தார் . |
சஞ்சம் | பூணூல் ; கச்சு . |
சஞ்சயம் | கூட்டம் ; ஐயம் . |
சஞ்சயனம் | பால் தெளித்தலாகிய ஈமச்சடங்கு . |
சஞ்சரம் | சஞ்சலம் ; விரைந்து அசைகை ; உடல் ; வழி . |
சஞ்சரிகம் | ஒரு வண்டுவகை . |
சஞ்சரித்தல் | நடமாடுதல் ; வாழ்தல் ; திரிதல் ; நெறிதப்பி ஒழுகுதல் . |
சஞ்சலம் | நிலையில்லாமை ; அசைவு ; விரைந்து அசைகை ; நடுக்கம் ; மனக்கவலை , துன்பம் ; நோய் . |
சஞ்சலரகிதன் | மனக்கலக்கமற்றவன் . |
சஞ்சலை | மின்னல் ; திருமகள் ; திப்பிலி . |
சஞ்சாயம் | குடிவாரம் ; நாட்கூலி ; குத்தகைக்கு விடாமல் நிலச்சொந்தக்காரரே நிலத்தைப் பயிரிடுதல் ; இலவசம் ; அதிக இலாபம் , |
சஞ்சாரபிரேதம் | நடைப்பிணம் ; பயன்றறவன் . |
சஞ்சாரம் | யாத்திரை ; நடமாட்டம் ; சஞ்சரித்தல் ; நெறிதப்பிய ஒழுக்கம் ; நடனத்துக்குரிய பாத வைப்புவகை ஐந்தனுள் ஒன்று ; ஏற்ற இறக்கக் கலப்பு . |
சச்சரை | கலகம் ; பிளந்த துண்டு ; ஒரு வாத்திய வகை . |
சச்சற்புடம் | எட்டு மாத்திரைகொண்ட தாள வகை . |
சச்சனம் | காவல் . |
சங்குத்திரி | சங்கின் உட்சுழி . |
சங்குதல் | பல்லாங்குழியில் ஆட்டமுறை இலாபமின்றி நின்றுவிடுதல் ; ஊக்கங்கெடுதல் . |
சங்குதிருகி | சங்கறுக்குங் கருவி ; அடைத்த நெட்டித் தக்கையை இழுத்து வாங்கும் கருவி . |
சங்குநிதி | வட்டக் கிலுகிலுப்பைச்செடி . |
சங்குப்புரி | காண்க : சங்குச்சுரி . |
சங்குபுட்பம் | ஞாழற்செடி . |
சங்குமணி | சங்குகளாற் செய்த மணி . |
சங்குமதம் | புனுகு . |
சங்குமரு | வேப்பமரம் . |
சங்குமூர்த்தினி | உச்சி . |
சங்குருளை | ஆமை . |
சங்குலம் | கூட்டம் ; போர் . |
சங்குவடம் | பரிசல் என்னும் ஒரு தோணிவகை . |
சங்குவளை | சங்கினாற் செய்த வளையல் . |
சங்கூதுதல் | கோயில் முதலியவற்றில் சங்கை ஊதுதல் ; வேலைக்களத்துக்கு ஆள்களை அழைக்க இயந்திரத்தல் ஒலி எழுப்புதல் . |
சங்கேதம் | குறி ; உடன்பாடு ; குழூஉக்குறி ; உறுதிமொழி ; கோயிலுக்கு இறையிலியாக விடப்பட்ட நிலம் ; சாதிசமயங்களால் உண்டாகும் ஒற்றுமையுணர்ச்சி . |
சங்கேபம் | சுருக்கம் . |
சங்கை | எண்ணம் ; வழக்கம் ; வறட்சுண்டி ; சுக்கு ; எண் ; அளவு ; கனம் ; கணைக்கால் ; ஐயம் ; அச்சம் ; பகை ; பூத பிசாசு முதலியன . |
சங்கைக்கேடு | இகழ்ச்சி , அவமரியாதை . |
சங்கைமான் | மதிக்கத்தக்கவன் . |
சங்கைவான் | மதிக்கத்தக்கவன் . |
சங்கோசபரிவாரம் | தக்கோரைப் போற்றுவதற் கென்று அரசனால் அமர்த்தப்பட்ட சிறு கூட்டத்தார் . |
சங்கோசபிசுனம் | குங்குமம் . |
சங்கோசம் | குங்குமம் ; மஞ்சள் ; சுருங்குதல் ; கூச்சம் . |
சங்கோபனம் | கமுக்கம் , இரகசியம் , மறைவு . |
சச்சடம் | தாமரை . |
சச்சடி | சந்தடி ; மக்கள் திரண்டு கூடுதல் . |
சச்சம் | உண்மை . |
சச்சம்பிரதாயம் | நல்ல வரன்முறை . |
சச்சரவு | கலகம் . |
சச்சரி | வாத்தியவகை . |
![]() |
![]() |
![]() |