சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சுட்டிசுரண்டுதல் | சட்டியைண் சுரண்டிக் கழுவுதல் ; இழிதொழில் செய்தல் . |
சட்டித்தலை | பெருந்தலை . |
சட்டிபானை | சமையல் முதலியவற்றிற்கு உதவும் மட்பாண்டங்கள் . |
சட்டிபூர்த்தி | அறுபதாம் ஆண்டு நிறைவு ; அறுபதாம் ஆண்டில் செய்யுமொரு சடங்கு . |
சட்டிபூர்த்திசாந்தி | அறுபதாம் ஆண்டு நிறைவு ; அறுபதாம் ஆண்டில் செய்யுமொரு சடங்கு . |
சட்டியுருட்டுதல் | சூதாடுதல் ; வாயால் உருட்டுதல் ; மட்பாண்டங்களில் வைத்திருக்கும் பொருள்கைளைத் திருடி உண்ணுதல் ; காண்க : சட்டிசுரண்டுதல் . |
சட்டியெடுத்தல் | இரத்தல் , பிச்சையெடுத்தல் . |
சட்டிரசவர்க்கம் | அறுசுவைத் தொகுதி . |
சட்டினி | ஒரு துவையல்வகை . |
சட்டு | ஆறு ; அழிவு ; சிக்கனம் . |
சட்டுப்பண்ணுதல் | அழித்தல் ; செட்டாயிருத்தல் . |
சட்டுப்பார்த்தல் | அழித்தல் ; விழுங்குதல் . |
சட்டுபுட்டெனல் | விரைவுக்குறிப்பு . |
சட்டுவஞ்செலுத்துதல் | உணவு பரிமாறுதல் ; விருந்தோம்புதல் . |
சட்டுவம் | அகப்பை ; தோசைதிருப்பி . |
சட்டுவர்க்கம் | இலக்கினத்திலிருந்து பிரியும் ஆறு வருக்கம் ; அறுசுவை . |
சட்டெனல் | விரைவுக்குறிப்பு ; திடீரெனல் ; குறிப்பு . |
சஞ்சீவகரணி | புளியமரம் ; மூர்ச்சை தெளிவித்து உயிர்தரும் மருந்து . |
சஞ்சீவன் | மாமரம் . |
சஞ்சீவனம் | உயிர்ப்பித்தல் . |
சஞ்சீவனி | காண்க : சஞ்சீவி . |
சஞ்சீவனை | காண்க : சஞ்சீவி ; நாங்கூழ் . |
சஞ்சீவி | மூர்ச்சை தீர்த்து உயிர்தரும் மருந்து அல்லது மூலிகை ; சீந்திற்கொடி . |
சஞ்சீவிமூலிகை | உயிர்தரும் ஒரு மருந்துப் பச்சிலைவகை . |
சஞ்சீவினி | காண்க : சஞ்சீவி . |
சஞ்சு | பறவைமூக்கு ; ஆமணக்கஞ்செடி ; குலதருமம் ; சாயல் . |
சஞ்சுபம் | அரசர்க்குரிய விருதுகள் ; ஆயத்தம் . |
சஞ்சுபவம் | அரசர்க்குரிய விருதுகள் ; ஆயத்தம் . |
சஞ்சேபம் | சுருக்கம் . |
சஞ்சை | பெருங்காற்று ; பேரொலி ; பெருமழை ; சூரியன் மனைவி . |
சட்சட்டெனல் | விரைவுக்குறிப்பு . |
சட்சம் | முத்திரைத் துளைக்கு அடுத்த துளை . |
சட்சமயம் | அறுசமயம் , ஆறு வகையான மதம் . |
சட்சு | கண் . |
சட்ட | செவ்விதாக ; நன்றாக ; முழுதும் ; விரைவாக . |
சட்டக்கதவு | சட்டங்களைக் கோத்து உள்ளே மெல்லிய துண்டுப் பலகைகளால் அமைக்கப் பட்ட கதவு . |
சட்டக்கல்லி | வீண்பேச்சு . |
சட்டக்கால் | கடைத்தட்டியைத் தூக்கி நிறுத்துங் கால் . |
சட்டகப்பை | தட்டகப்பை , தோசைதிருப்பி எண்ணும் கருவி . |
சட்டகம் | சட்டம் ; மக்கட்படுக்கை ; வடிவு ; உடல் ; பிணம் . |
சட்டகல்லி | காண்க : சட்டக்கல்லி . |
சட்டங்கட்டுதல் | ஒழுங்குபடுத்தல் ; ஏற்பாடு செய்தல் ; படங்களுக்குச் சட்டம்போடுதல் . |
சட்டசபை | சட்டதிட்டங்களை உருவாக்கும் அவை , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகள் கொண்ட அவை . |
சட்டதிட்டம் | சட்ட ஒழுங்கு ; நிருணயம் . |
சட்டந்தட்டுதல் | புனுகு வழித்தல் . |
சட்டந்தைத்தல் | படம் முதலியவற்றிற்குச் சட்டஞ் சேர்த்தல் ; வரிச்சலடித்தல் . |
சட்டநிர்மாணசபை | காண்க : சட்டசபை . |
சட்டப்பரம்பு | வயல் திருத்தும் பலகைவகை . |
சட்டப்பலகை | மரச்சட்டம் ; எழுதுங் கற்பலகை ; வரியிழுக்குஞ் சட்டம் . |
சட்டம் | மரச்சட்டம் ; கம்பியிழுக்குங் கருவி ; நகையின் உம்மச்சு ; மேல்வரிச் சட்டம் ; நியாய ஏற்பாடு ; செப்பம் ; நேர்மை ; ஆயத்தம் ; புனுகுபூனையிடமிருந்து எடுக்கப்படும் நீர்மப் பொருள் ; மாணிக்கவகை . |
சட்டம்பி | ஆசிரியர் ; தலைவன் . |
சட்டம்பிப்பிள்ளை | காண்க : சட்டாம்பிள்ளை . |
சட்டம்பியார் | காண்க : சட்டம்பி . |
சட்டமழித்தல் | ஆணை மீறுதல் . |
சட்டமன்றம் | சட்டங்களை உருவாக்கி நிறைவேற்றும் சட்டசபை . |
சட்டமிடுதல் | செய்யவேண்டிய கட்டளையைப் பணித்தல் . |
சட்டவட்டம் | திட்டம் . |
சட்டவளை | குறுக்குச் சட்டம் . |
சட்டவாள் | பிடிவைத்த பெரிய இரம்பம் . |
சட்டவிளக்கு | கோயிலில் சட்டத்தில் அமைத்து இடும் விளக்குவரிசை . |
சட்டன் | மாணாக்கன் . |
சட்டாட்டம் | இராசிப் பொருத்தத்தில் சாதகனுடய இராசி பெண்ணின் இராசிக்கு ஆறாவதாகவும் பெண்ணின் இராசி சாதகன் இராசிக்கு எட்டாவதாகவும் இருக்கை ; இராசிச் சக்கரத்தில் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்திற்கு எட்டாமிடத்தில் இருக்கை ; வாதாட்டம் . |
சட்டாம்பிள்ளை | பள்ளிக்கூட வகுப்பில் தலைமை ஏற்கும் மாணவன் . |
சட்டால் | வில்வம் . |
சட்டி | மட்பாண்டம் ; ஆறாந் திதி ; அறுபது ; தாமரை . |
சட்டிசுரண்டி | சட்டிசுரண்டுங் கருவி ; சட்டி சுரண்டுபவன்(ள்) . |
சஞ்சாரன் | உயிர் . |
சஞ்சாரி | திரிபவன் ; சங்கீத வர்ணபேதம் ; குடியானவன் ; பெரிய குடும்பமுடையவன் . |
சஞ்சாரிகன் | தூதன் . |
சஞ்சாரிகை | தூதி . |
சஞ்சாலி | பெரிய துப்பாக்கி . |
சஞ்சாலிகம் | காண்க : சஞ்சரிகம் . |
சஞ்சாளிகம் | காண்க : சஞ்சரிகம் . |
சஞ்சிகை | புத்தகப் பகுதி ; பத்திரிகைப் பகுதி . |
சஞ்சிதம் | ஈட்டியது , திரட்டியது ; நுகர்ந்தது போக எஞ்சியுள்ள வினை . |
![]() |
![]() |
![]() |