சட்டை முதல் - சடுகுடு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சடங்குகழித்தல் பெண்ணின் முதல் பூப்பில் உரிய சடங்கு செய்தல் ; சில செயல்களுக்குரிய முறைகளைச் செயதல் .
சடசடவெனல் ஓர் ஒலிக்குறிப்பு .
சடசடெனல் ஓர் ஒலிக்குறிப்பு .
சடசீதிமுகம் ஆனி , புரட்டாசி , மார்கழி , பங்குனி மாதங்கள் பிறக்கும் நாள் ; சூரியன் தனுசு 26ஆம் பாகையிலும் ,மீனம் 22 ஆம் பாகையிலும் ; மிதுனம் 18ஆம் பாகையிலும் , கன்னி 14ஆம் பாகையிலும் செல்லும் காலம் .
சடப்பால் முலைப்பால் .
சடபதார்த்தம் அறிவில்பொருள் .
சடபுடெனல் ஓர் ஒலிக்குறிப்பு ; விரைவுக் குறிப்பு .
சடம் அறிவில்பொருள் ; அறியாமை ; உடல் ; பொய் ; வஞ்சகம் ; கொடுமை ; சோம்பல் ; பிறக்கும்போது ஆன்மாவில் மோதி அதன் அறிவைக் கெடுக்கும் ஒரு வாயுவகை ; ஆறு என்னும் எண் .
சடம்பு சணல் .
சடரம் வயிறு .
சடராக்கினி வயிற்றுத் தீ , மூலாக்கினி .
சடலபுடலம் பருத்திருப்பது .
சடலம் உடம்பு ; பருத்த உடல் ; அறிவில் பொருள் .
சடலை பருத்திருப்பது ; வீண்செயல் .
சடவுப்பு அமரியுப்பு ; சமாதியுப்பு .
சடன் மூடன் , அறிவற்றவன் .
சடாக்கரம் காண்க : ஆறெழுத்து .
சடாக்கரி காண்க : சடாட்சரி .
சடாகம் அருநெல்லிமரம் .
சடாட்சரம் காண்க : ஆறெழுத்து .
சடாட்சரி உமை .
சடாடவி சடைத்திரள் , அடர்ந்த சடை .
சடாதரம் காண்க : சடாகம் .
சடாதரன் சடைதரித்த சிவன் ; வீரபத்திரன் .
சடாதரி பார்வதி .
சடாதாரம் ஆறு ஆதாரம் ; அவை : மூலாதாரம் , சுவாதிட்டானம் , மணிபூரகம் , அனாகதம் , விசுத்தி , ஆஞ்ஞை .
சடாதாரி சடைதரிதத்வன் , சிவன் ; பார்வதி ; கொடியாள்கூந்தல் ; வரிக்கூத்துவகை .
சடாபாரம் சடைக்கற்றை
சடாமகுடம் சடைமுடி .
சடாமகுடன் சிவன் .
சடாமாஞ்சி செடிவகை ; ஒரு மருந்துவகை .
சடாமாஞ்சில் செடிவகை ; ஒரு மருந்துவகை .
சடாமுடி சடைமுடி , மயிர்த்திரள் .
சடாமுனி பேய்வகை .
சடாய் சடாயு என்னும் கழுகுவேந்தன் ; காற்சோடுவகை .
சடாய்த்தல் துப்பாக்கி கெட்டித்தல் ; பெருமிதமாகப் பேசுதல் ; அதட்டுதல் .
சடாரி கவசம் ; சடகோபன் , நம்மாழ்வார் .
சடாரிடல் ஓர் ஒலிக்குறிப்பு .
சடாரெனல் ஓர் ஒலிக்குறிப்பு .
சடாலம் ஆலமரம் ; தேன்கூடு .
சடாவல்லவன் சடைமுறையில் வேதப் பகுதிகளைச் சொல்வதில் வல்லவன் .
சடானன் ஆறு முகத்தையுடைய முருகன் .
சடிதி விரைவு , சீக்கிரம் ; ஏலத்தோல் .
சடிதிவு ஏலத்தோல் .
சடிலம் செறிவு , நெருக்கம் ; வேர் ; குதிரை ; சடையாக அமைந்த மயிர்முடி .
சடினம் வசம்பு நெட்டிவேர் .
சடுகுடு ஒருவகை விளையாட்டு .
சட்டை மேலாடை ; தைத்த உடை ; பாம்புச் சட்டை ; பாம்பின்தோல் ; உடம்பு ; மதிப்பு ; ஒருவகை நிறை ; பொதி ; தைவேளைப் பூண்டு .
சட்டைக்காரன் ஐரோப்பியருக்கும் இந்தியருக்கும் பிறந்த சாதியான் .
சட்டைகழற்றுதல் பாம்புதோல் உரித்தல் .
சட்டைநாதன் சட்டை அணிந்தவன் ; சிவன் ; வயிரவன் .
சட்டைப்புரை மேலாடையில் அமைக்கப்படும் பை .
சட்டைப்பை மேலாடையில் அமைக்கப்படும் பை .
சட்டைபண்ணுதல் இலட்சியம் செய்தல் .
சட்பதம் அறுகால் வண்டு .
சட்பம் அறுகம்புல் ; இளம்புல் ; ஆண்பெண் குறிகளை அடுத்துள்ள மயிர் .
சட்பாவம் உடலுக்குண்டாகும் இருத்தல் , தோன்றுதல் , உருத்திரிதல் , வளர்தல் , சுருங்குதல் , அழிதல் என்னும் ஆறு நிலைகள் .
சட்பிதாபுத்திரிகம் ஐந்து தாளத்துள் ஒன்று .
சடக்கடை ஒன்பது .
சடக்கரம் காண்க : ஆறெழுத்து .
சடக்கு வேகம் ; செருக்கு ; உடல் .
சடக்குச்சடக்கெனல் ஈரடுக்கு ஒலிக்குறிப்பு .
சடக்கெனல் விரைவுக்குறிப்பு .
சடக்கோதன் வசம்பு .
சடகம் ஊர்க்குருவி ; கரிக்குருவி ; வட்டில் .
சடகோபம் திருமால் கோயில்களில் தரிசிப்போர் முடிமீது வைக்கப்படும் திருமாலின் திருவடிநிலை .
சடகோபன் சடம் என்னும் வாயுவை வென்ற நம்மாழ்வார் .
சடங்கப்படுதல் மூட்டையாகக் கட்டப்படுதல் ; வேலை செய்துகொண்டிருத்தல் .
சடங்கப்பூட்டு குண்டுக்கட்டாய்க் கட்டும் மற்பிடிவகை .
சடங்கம் வேதத்திற்கு அங்கமான அறுவகைச் சாத்திரம் ; அவை : சிட்சை , கற்பம் , வியாகரணம் , நிருத்தம் , சந்தோபிசிதம் , சோதிடம் ; பயணமூட்டை ; வருத்தம் ; வேலை ; பதினாறு தூக்களவு .
சடங்கம்போடுதல் மூட்டையாகக் கட்டுதல் .
சடங்கர் மறைக்குரிய ஆறங்கங்களையும் அறிந்தவன் .
சடங்கவி மறைக்குரிய ஆறங்கங்களையும் அறிந்தவன் .
சடங்காதல் பெண்மகள் பூப்படைதல் .
சடங்கு சாத்திரமும் வழக்கமும்பற்றிய முறையை நடத்தும் கிரியை ; முதற்பூப்புச் சடங்கு ; சாந்திக் கலியாணம் ; குண்டுக் கட்டாய்க் கட்டும் மற்பிடிவகை .