சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| சண்டு | கூளம் : பயிரில் விழும் வண்டுவகை ; புகைபிடிக்கும் அபினியுருண்டை ; எல்லைக் கோல் . |
| சண்டுதல் | நிறைய உண்ணல் . |
| சண்டை | சச்சரவு ; போர் ; பிணக்கு ; வாத்தியவகை . |
| சண்டைக்காரன் | சண்டையிடுங் குணமுடையவன் ; பகைவன் . |
| சண்டைக்குநிற்றல் | போராடுதல் . |
| சண்டைபிடித்தல் | போரிடுதல் ; கடிந்து கூறுதல் . |
| சண்ணக்கடா | தின்று கொழுத்த கடா . |
| சண்ணம் | ஆண்குறி . |
| சண்ணித்தல் | பூசுதல் ; சார்ந்திருத்தல் . |
| சண்ணுதல் | தாக்குதல் ; நீக்குதல் ; நிறைய உண்ணுதல் ; புணர்தல் ; செய்துமுடித்தல் . |
| சண்பகம் | ஒரு பூமரவகை . |
| சண்பங்காறை | தாலியின் உருவகை . |
| சண்பங்கோரை | ஒரு கோரைவகை . |
| சண்பனி | யோகினி . |
| சண்பு | கோரைவகை ; நெட்டி . |
| சண்பை | சீகாழிநகர் . |
| சடை | பின்னலாய் அமைந்த மயிர்முடி ; பின்னிய கூந்தல் ; அடர்ந்த மயிர் ; வேர் ; விழுது ; இலாமிச்சை ; வெட்டிவேர் ; சடாமாஞ்சில் ; திருவாதிரைநாள் ; மிதுனராசி ; வேதமோதும் முறைகளுள் ஒன்று ; கற்றை ; ஆணியின் கொண்டை ; நெட்டி ; அடைப்பு . |
| சடைக்குச்சு | தலைமயிரோடு பின்னித் தொங்க விடுவதாய் இரண்டு மூன்று குச்சுகளையுடைய அணி . |
| சடைக்குழல் | இரட்டை எருதுகளால் இழுக்கப் படும் ஏர்வகை . |
| சடைகந்தம் | வசம்பு . |
| சடைச்சி | நெட்டிப்புல் ; கீரிப்பூண்டு ; புளியாரை ; பாசி ; பொன்னிமிளை ; மரவகை . |
| சடைத்தல் | கிளைத்து நெருங்குதல் ; சோர் வடைதல் . |
| சடைதல் | சோர்வடைதல் ; உள்ளடங்குதல் ; பயிர் முதலியன குன்றிப்போதல் ; ஆணி முதலியன அறைதல் ; தடுத்தல் . |
| சடைநாகம் | நாகம்போலச் செய்த மகளிர் தலையணி . |
| சடைநாய் | உடலில் மயிர் அடர்ந்துள்ள நாய் வகை . |
| சடைப்பயறு | ஒரு பயறுவகை . |
| சடைப்பாசி | சடைபோல் படித்திருக்கும் ஒரு பாசிவகை . |
| சடைப்பில்லை | பெண்கள் தலைப் பின்னலில் செருகியணியும் தலையணிவகை . |
| சடைபற்றுதல் | சடைவிழுதல் ; அடர்த்தியாதல் . |
| சடைபி | காண்க : சடைப்பில்லை . |
| சடைபோட்டுக்கொள்ளுதல் | முடியைச் சடையாக்கிக் கொள்ளுதல் ; தலைபின்னிக்கொள்ளுதல் |
| சடைமாரியாயி | அம்மைநோய்க்குரிய தேவதை . |
| சடைமுடி | அடர்ந்ததும் பின்னிமுடிக்கப்பட்டது மான மயிர் ; சரக்கொன்றை . |
| சடைமுடியோர் | சடைமுடியை உடைய முனிவர் . |
| சடையப்பன் | சடைமுடியையுடைய சிவன் ; கம்பனை ஆதரித்த வள்ளல் . |
| சடையன் | சிவன் ; சடையையுடையவன் ; அறுபத்து மூவருள் ஒருவரான சடைய நாயனார் ; சடையப்பவள்ளல் . |
| சடையோன் | சடையையுடையவன் ; சிவன் ; வீரபத்திரன் . |
| சடைவாறுதல் | இளைப்பாறுதல் . |
| சடைவில்லை | காண்க : சடைப்பில்லை . |
| சடைவிழுதல் | மயிர் சடையாகப் பற்றுதல் ; பயன்படாதுபோதல் . |
| சடைவு | மனத்தளர்வு ; ஆணி முதலியன அறைகை . |
| சண்டகோபி | கடுஞ்சினமுடையவன் . |
| சண்டகோலாகலம் | ஒரு நரகவகை . |
| சண்டகோலாலம் | ஒரு நரகவகை . |
| சண்டதரம் | ஒரு நரகவகை . |
| சண்டதாண்டவம் | காளியோடு சிவன் ஆடியகூத்து . |
| சண்டப்பிரசண்டம் | மிகு கடுமை ; ஆர்ப்பாட்டம் . |
| சண்டப்பை | கருப்பை . |
| சண்டம் | கொடுமை ; கோபம் ; வேகம் ; வலிமை ; ஒரு நரகவகை ; அலி ; பெருமை . |
| சண்டமாருதம் | பெருங்காற்று . |
| சண்டவேகம் | மிகு விரைவு . |
| சண்டன் | கடுஞ்சினமுடையவன் ; யமன் , காலன் ; சூரியன் ; சண்டேசுர நாயனார் ; உருத்திரருள் , ஒருவர் ; சிவன் ; அலி . |
| சண்டாளத்துரோகி | கொடுமை செய்தவன் ; கயமைத் தன்மையுள்ளவன் . |
| சண்டாளப்பாவி | கொடுமை செய்தவன் ; கயமைத் தன்மையுள்ளவன் . |
| சண்டாளம் | கயமைத்தன்னமை ; பேய் . |
| சண்டாளர் | தீயவர் ; கொலைஞர் . |
| சண்டாளன் | இழிஞன் ; கொடியவன் ; புலையன் . |
| சண்டாளி | கொடியவள் ; புலைச்சி . |
| சண்டி | கொடியவன்(ள்) ; இடக்குச் செய்பவன் ; சண்டேசுர நாயனார் , துர்க்கை ; காளி ; மானமற்றவன் ; இலச்சைகெட்டமரம் . |
| சண்டிக்கடா | முரட்டு எருமைக்கடா ; பிடிவாதச் சோம்பேறி . |
| சண்டிகை | துர்க்கை . |
| சண்டித்தனம் | பிடிவாதம் . |
| சண்டிலன் | சிவன் ; நாவிதன் . |
| சண்டிவாளம் | ஒப்பந்தத்தை நீக்கவோ ஒன்றை மீட்கவோ கொடுக்கும் பணம் ; கால்விலங்கு . |
| சண்டீனம் | பறவை ; பறக்கும் வகையினுள் ஒன்று . |
| சடுத்தம் | போட்டி ; போராட்டம் ; வீரவாதம் ; வற்புறுத்தல் . |
| சடுத்தாசனம் | பூசையில் சிவனது இலிங்கம் அமைவதற்குரிய அனந்தர் , தன்மம் , ஞானம் , வைராக்கியம் , ஐசுவரியம் , பதுமம் என்ற அறுவகை இருக்கை . |
| சடுத்தி | சோதனை . |
| சடுதி | விரைவு ; சோதனை . |
| சடுரசம் | அறுசுவை . |
| சடுலம் | நடுக்கம் ; மின்னல் . |
| சடுலவாரவம் | தீக்கொழுந்து முதலியவற்றால் எழும் ஒலி . |
| சடுலவோசை | தீக்கொழுந்து முதலியவற்றால் எழும் ஒலி . |
| சடுலை | மின்னல் . |
| சடுவர்க்கம் | சாதகக் கணிப்பின் ஆறுவர்க்கம் . |
|
|
|