சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| சத்திதரன் | முருகன் ; வேற்படையை உடையவன் . |
| சத்திதீட்சை | வேண்டும் சாதனங்களையும் கிரியைகளையும் குரு தமது பாவனையால் செய்துகொள்ளும் ஔத்திரி தீட்சைவகை . |
| சத்திநாதம் | பொன்னிறம் ; பொன்னிமிளை ; ஏமாப்பிரகம் . |
| சத்திநிபாதம் | பக்குவமுடைய ஆன்மாக்களிடம் திருவருள் பொருந்துதல் . |
| சத்திநிபாதன் | திருவருள் பதியப்பெற்றவன் . |
| சத்திப்பு | கக்கல் , வாந்தி . |
| சத்திபீடம் | சத்தியின் நிலைபேறுடைய ஆலயம் . |
| சத்திபூசை | காண்க : சக்திபூசை . |
| சத்தபுரி | மதுரை , அயோத்தி , மாயை ; காசி , காஞ்சி , அவந்தி , துவாரகை என்னும் ஏழு புண்ணிய நகரங்கள் . |
| சத்தம் | ஒலி ; சொல் ; எழுத்து சொற்களைப் பற்றிய நூல் ; சத்தப்பிரமாணம் ; ஏழு ; வாடகை ; வண்டிக்கூலி . |
| சத்தமண்டலம் | வாயு , வருணன் , சந்திரன் , சூரியன் , நட்சத்திரம் , அக்கினி , மேகம் என்னும் ஏழு உலகங்கள் . |
| சத்தமருத்து | கிழக்கு , தெற்கு , மேற்கு , வடக்கு , மேல் , கீழ் , பலயோனியுயிர்கள் இவற்றினின்று வரும் ஏழுவகைக் காற்றுகள் . |
| சத்தமன் | யாவரினுஞ் சிறந்தவன் . |
| சத்தமாங்கிசம் | இராசியை ஏழாகப் பிரித்துக் கோள்களின் நிலையைக் குறிக்குஞ் சக்கரம் ; ஏழில் ஒரு கூறு . |
| சத்தமாதர் | காண்க : சத்தகன்னிகை . |
| சத்தமாதாக்கள் | காண்க : சத்தகன்னிகை . |
| சத்தமி | ஏழாந் திதி ; ஏழாம் வேற்றமை . |
| சத்தமுகில் | சம்வர்த்தம் , ஆவர்த்தம் , துரோணம் , புட்கலாவருத்தம் , காளமுகி , சங்காரித்தம் , நீலவருணம் என்னும் ஏழு மேகங்கள் . |
| சத்தமேகம் | சம்வர்த்தம் , ஆவர்த்தம் , துரோணம் , புட்கலாவருத்தம் , காளமுகி , சங்காரித்தம் , நீலவருணம் என்னும் ஏழு மேகங்கள் . |
| சத்தரிஷிகள் | இருடிகள் எழுவர் ; அகத்தியன் , புலத்தியன் , அங்கிரசு , கௌதமன் , வசிட்டன் , காசிபன் , மார்க்கண்டன் . |
| சத்தலோகம் | பொன் , வெள்ளி , இரும்பு , செம்பு , ஈயம் , தரா , கஞ்சம் என்னும் ஏழு வகை உலோகங்கள் . |
| சத்தவருக்கம் | நெல்லி , வெட்டிவேர் இலாமிச்சைவேர் , சடாமாஞ்சில் , இலவங்கம் , ஏலம் , திராட்சை என்னும் ஏழுவகை மருந்துப் பொருள்கள் . |
| சத்தவிடங்கத்தலம் | தியாகராசர் கோயில் கொண்டுள்ள ஆரூர் , நாகை , நள்ளாறு , மறைக்காடு , காறாயில் , வாய்மூர் , கோளிலி என்னும் ஏழு தலங்கள் . |
| சத்தன் | ஆற்றலுடையவன் ; அருவத் திருமேனி கொண்டசிவன் . |
| சத்தாமாத்திரம் | கேவலம் உள்ளதாயிருக்கை . |
| சத்தாய்த்தல் | தொந்தரவுசெய்தல் ; எள்ளுதல் . |
| சத்தார்த்தம் | சொற்பொருள் . |
| சத்தாவத்தை | சீவான்மாவுக்கு நிகழக்கூடிய அறியாமை , ஆவரணம் , விட்சேபம் , பரோட்சஞானம் , அபரோட்ச ஞானம் , சோகநிவர்த்தி , தடையற்ற ஆனந்தம் என்னும் ஏழுவகை நிலைகள் . |
| சத்தாவரணம் | திருவிழா முடிவில் சுவாமி பிராகாரத்துக்குள்ளேயே ஏழுதரஞ் சுற்றுகை . |
| சத்தி | ஆற்றல் ; பிரபுசத்தி , மந்திரசத்தி , உற்சாக சத்தி ஆகிய மூவகை அரசர் ஆற்றல்கள் ; மூன்று பெருங்கொடி ; கொடி நாட்டுங் குழி ; சிவனது அருள் ; உமை ; சத்திதத்ததுவம் ; ஞானவதி ; வேல் ; சூலம் ; சொல்லாற்றல் ; கந்தகம் ; நெல்லிக்காய்க் கந்தகம் ; நீர்முள்ளி ; வாந்திசெய்கை ; வேம்பு ; கொம்மட்டி ; பேய்ப்புடல் ; விருந்து ; குடை ; இசைச்செய்யுள் . |
| சத்திக்குடம் | மாளிகைமேல் வைக்கப்படும் சூலம் நாட்டிய குடம் . |
| சத்திக்கூற்றோன் | நவச்சாரம் . |
| சத்திக்கொடி | தாடிமஞ்சம் என்னுங் கொடிவகை . |
| சத்திகம் | குதிரை . |
| சத்திகர் | கடவுளருளால் அற்புதஞ் செய்வோர் ; தேவதூத வகையினர் . |
| சத்திகுருநாதன் | கஞ்சா . |
| சத்திகோணம் | பார்வதிதேவியைக் குறிப்பதாக வரையும் கோணம் . |
| சத்திசாரணை | மூக்கிரட்டைக்கொடி . |
| சத்திசெய்தல் | வாந்தியெடுத்தல் . |
| சத்தித்தல் | ஒலித்தல் ; கக்குதல் . |
| சத்திதத்துவம் | சுத்த தத்துவங்களுள் ஒன்றாய்ச் சிவனது வினையாற்றலுக்கு இடமாய்ச் சுத்தமாயை செயற்படுவதாயுள்ள விருத்தி . |
| சண்மதம் | அறுவகைச் சமயம் . |
| சண்முகன் | ஆறுமுகன் , முருகன் . |
| சணகம் | புளியாரைக்கீரை ; கடலை ; சணல் . |
| சணப்பு | சணற்பயிர் ; கஞ்சா . |
| சணப்பை | சணல் . |
| சணப்பொழுது | நொடிநேரம் . |
| சணம் | சணல் ; நொடிநேரம் . |
| சணம்பு | நார் தரும் ஒரு செடிவகை . |
| சணல் | நார் தரும் ஒரு செடிவகை . |
| சணற்பனார் | சணல்நார் . |
| சணாய் | கடலை . |
| சணாய்த்தல் | காமங்கொள்ளல் ; கொழுத்தல் . |
| சணைத்தல் | கொழுத்தல் ; விரிந்துண்டாதல் . |
| சத்தக்கருவி | தோற்கருவி ; துளைக்கருவி , நரம்புக்கருவி , கஞ்சக்கருவி , மிடற்றுக்கருவி என்னும் ஐவகை இசைக்கருவிகள் . |
| சத்தக்கூலி | வண்டிக்கூலி , வண்டிவாடகை . |
| சத்தகம் | ஏழு கூடியது ; சிறுகத்திவகை ; இறுதிக்கடன் . |
| சத்தகன்னிகை | அபிராமி , இந்திராணி , கௌமாரி , காளி , நாராயணி , மயேசுவரி , வராகி என்னும் ஏழு மாதர்கள் . |
| சத்தகுலாசலம் | பூமியைத் தாங்குவனவாகக் கூறப்படும் கைலை , இமயம் , மந்தரம் , விந்தம் , நிடதம் , ஏமகூடம் , நீலகிரி என்னும் ஏழு மலைகள் . |
| சத்தங்காட்டுதல் | ஒலியிடுதல் ; தீங்கிழைக்கும் உயிரினங்கள் விலகும்படி கைதட்டுதல் ; ஆபத்துக்காலம் முதலியவற்றில் முறையிட்டுக் கூவுதல் . |
| சத்தங்கேட்டல் | வண்டிவாடகை பேசுதல் ; ஒலி கேட்டல் . |
| சத்தசமுத்திரம் | உப்பு , நீர் , பால் , தயிர் , நெய் , கருப்பஞ்சாறு , தேன் இவற்றையுடைய ஏழு கடல்கள் . |
| சத்தசிப்பி | கிளிஞ்சில் . |
| சத்தசுரம் | ஏழு சுரம் . |
| சத்ததாது | உடம்பின அமைப்பிலுள்ள இரதம் , குருதி , எலும்பு , தோல் , இறைச்சி , மூளை , சுக்கிலம் என்னும் ஏழுவகைப் பொருள்கள் . |
| சத்ததாளம் | துருவதாளம் , அடதாளம் , ஏகதாளம் , திரிபுடைதாளம் , ரூபகதாளம் , சம்பைதாளம் , மட்டியதாளம் என்னும் ஏழுவகைத் தாளங்கள் . |
| சத்ததீர்த்தம் | காண்க : சத்தநதி . |
| சத்ததீவு | நாவல் , இரவி , குசை , கிரவுஞ்சம் , இலவம் , தெங்கு , புட்கரம் என்னும் ஏழு தீவுகள் . |
| சத்தநதி | கங்கை , யமுனை , சரசுவதி , நருமதை , காவிரி , குமரி , கோதாவரி என்னும் ஏழு தீவுகள் . |
| சத்தப்பிரதி | கேள்விமூலம் தெரிவது . |
| சத்தப்பிரபஞ்சம் | சொல்உலகம் . |
| சத்தப்பிரமம் | ஒலியே தெய்வம் என்னும் நூல் ; அறுபத்துநான்கு கலையுள் சுரபேதம் அறியும் வித்தை . |
| சத்தப்பிரமவாதம் | நாதமே பிரமம் என்னும் கொள்கை . |
| சத்தப்பிரமாணம் | ஆகமப் பிரமாணம் , ஆப்தவசனமான வேதம் முதலியவற்றைக் கொண்டு அறியும் வித்தை . |
| சத்தபருணி | ஏழிலைப்பாலைமரம் . |
|
|
|