சது முதல் - சதைப்படர்த்தி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சதுரச்சிரம் நிருத்தக்கைவகை ; தாளத்தின் சாதி ஐந்தனுள் ஒன்று .
சதுரசிரசாதி தாளத்தின் சாதி ஐந்தனுள் ஒன்று .
சதுரசிரம் காண்க :சதுரச்சிரம் .
சதுரந்தயானம் சிவிகை ; பல்லக்கு .
சதுரப்பலகை சதுரங்கமாடும் பலகை ; தச்சன் கருவிவகை .
சதுரப்பாடு திறமை ; அறிவுக்கூர்மை ; நேர் கோணமுள்ளதும் அளவொத்த நான்கு எல்லை வரம்புடையதுமான உருவம் ; உடலுழைப்பு .
சதுரப்பாலை பாலை யாழ்த்திறவகை நான்கனுள் ஒன்று .
சதுரம் நேர்கோணமுள்ளதும் அளவொத்த நான்கு எல்லை வரம்புடையதுமான உருவம் ; அகலம் நீளம் ஒத்த நாற்கோணம் ; சதுரக்கள்ளி ; சிறுவிரல் பின்பாக நிமிரப் பெருவிரல் உள்ளே வர மற்றை மூவிரல்களும் தம்முட் சேர்ந்து இறைஞ்சி நிற்கும் இணையா வினைக்கை ; திறமை ; அறிவுக்கூர்மை ; நாகரிகம் ; விரைவு .
சதுரமாடம் நான்குபுறமும் அளவொத்த மாடப்புரை .
சதுரவளவு அகலநீளங்களை பெருக்கிவந்த அளவு .
சதுரன் திறமையுடையவன் ; நகரவாசி ; பேராசைக்காரன் .
சதுரானன் நான்கு முகங்களையுடைய பிரமன் .
சதுரித்தல் சரிசதுரமாக்கல் ; மரம் முதலியவற்றை நான்கு பட்டையாகச் செதுக்குதல் ; கட்டடத்தின் அமைப்பெல்லையைப் பூமியில் வரையறுத்துக் குறித்தல் ; எண்களை வர்க்கமாக்குதல் .
சதுரித்திருத்தல் கவனமாயிருத்தல் .
சதுருபாயம் அரசர்க்கென நீதிநூல்களில் கூறப்பட்டுள்ள சாமம் , தானம் , பேதம் , தண்டம் என்னும் நான்குவகை உபாயங்கள் .
சதுரூடியங்கள் யானை , குதிரை , தேர் , காலாள் என்னும் நால்வகைப் படைகள் .
சதுவகை நால்வகை .
சதுவல் காண்க : சதக்கல் .
சதுனி வௌவால் .
சதேகமுத்தி சீவன்முத்தி .
சதேகரு இலவங்கப்பட்டை .
சதேகை சீவன்முத்தித் தன்மையில் நிட்டை பொருந்தியிருக்கை .
சதேந்திரர் 42 பவணந்திரரும் , 32 வியந்தரேந்திரரும் , 22 கற்பேந்திரரும் , சந்திரன் , சூரியன் , நரேந்திரன் , மிருகேந்திரன் என்னும் நால்வரும் ஆகிய இந்திரர் நூற்றுவர் .
சதேரன் பகைவன் .
சதை ஊன் ; பழத்தின் தசை ; முன்னைமரம் ; பாலைமரம் ; இணை .
சதைக்குந்தம் கருவிழியிற் படரும் நோய்வகை .
சதைக்குவை கடைக்கண்ணில் வரும் நோய் வகை .
சதைக்கொழுப்பு உடம்பு கொழுத்திருக்கை ; தடித்தனம் .
சதைத்தல் சதைப்பற்றுதல் ; நசுக்குதல் ; நெரித்தல் .
சதைதல் நசுங்குதல் ; நெரிதல் .
சதைப்படர்த்தி கணணோய்வகை .
சது நான்கு : சத்தமிடாது இருக்கவேண்டும் என்று குறிக்கும் சொல் .
சதுக்கபூதர் நாற்சந்திக்கண் குடிகொண்டுள்ள பூதங்கள் .
சதுக்கம் நான்கு தெருக்கள் கூடுமிடம் , நாற்சந்தி ; சந்து ; தலையிற் கட்டும் உருமால் .
சதுக்கல் வழுக்கல் .
சதுட்டயம் நான்கு மடங்குகொண்டது ; கேந்திரம் .
சதுட்பாதம் நாற்கால் விலங்கு ; நாய் ; கரணம் பதினொன்றனுள் அமாவாசையின் முற்பகுதியில் நிகழும் காலக்கூறு .
சதுப்பு சேற்றுநிலம் .
சதுப்புநிலம் சேற்றுநிலம் .
சதுப்புயன் நான்கு தோள்களையுடைய திருமால் .
சதுப்பேதி நான்கு வேதங்களிலும் வல்ல பார்ப்பனன் .
சதும்பை செடிவகை .
சதுமணி கழலை .
சதுமுகன் நான்கு முகங்களையுடைய பிரமன் ; அருகன் .
சதுர் நான்கு ; திறமை ; விரகு ; உபாயம் ; மலிவு ; நாட்டியம் .
சதுர்க்கதி ஆமை .
சதுர்க்கோணம் நாற்கோணமுள்ள வடிவம் .
சதுர்காணுதல் விலை மலிவாதல் .
சதுர்கூலி ஆவிரைச்செடி .
சதுர்த்தசம் பதினான்கு .
சதுர்த்தசி பதினான்காம் திதி .
சதுர்த்தம் நான்காவது ; நான்கு சுரமுள்ள பண் .
சதுர்த்தி நான்காம் திதி ; நான்காம் வேற்றுமை ; திருமணத்தில் நான்காம் நாள் இருக்கும் நோன்பு .
சதுர்த்திகை காற்பலம் ; நான்காம் திதி .
சதுர்த்தியறை திருமணத்தில் நான்காம் நாள் இரவு மணமக்கள் கூடி உறையும் அறை .
சதுர்ப்பதம் காண்க : சதுர்ப்பாதம் .
சதுர்ப்பாகம் செலுத்தற்குரிய அரசிறையில் காற்பகுதி செலுத்தி அனுபவிக்கும் மானிய நிலம் ; நிலவரியில் நாலில் ஒரு பாகத்தை அரசிடமிருந்து இனாம் பெறுதல் .
சதுர்ப்பாடு காண்க :சதுரப்பாடு .
சதுர்ப்பாதம் கரணம் பதினொன்றனுள் அமாவாசையின் முற்பகுதியில் நிகழும் காலக்கூறு ; சிவாகமங்களில் கூறப்படும் சரியை , கிரியை , யோகம் , ஞானம் என்னும் நான்கு பகுதிகள் .
சதுர்ப்புயன் நான்கு தோள்களை உடைய திருமால் ; சிவன் .
சதுர்ப்பேதி காண்க : சதுர்வேதி .
சதுர்முகன் நான்குமுகன் ; அருகன் .
சதுர்யுகம் கிரேதாயுகம் ,திரேதாயுகம் ,துவாபரயுகம் , கலியுகம் என்னும் நான்கு யுகங்கள் ; நான்கு யுகங்கூடிய பெருங்காலம் .
சதுர்விதோபாயம் காண்க :சதுருபாயம் .
சதுர்வேதம் இருக்கு ; யசுர் ,சாமம் ; அதர்வணம் என்னும் நான்கு வேதங்கள் .
சதுர்வேதி நான்கு மறைகளிலும் வல்லவன் .
சதுரக்கம்பம் நாற்கோணமாய் அமைந்த தூண் வகை .
சதுரக்கல் சதுரவடிவான கல் .
சதுரக்கள்ளி கள்ளிவகை .
சதுரகராதி பெயரகராதி ,பொருளகராதி , தொகையகராதி ,தொடையகராதி என்று நாற்பிரிவுகள் உடையதாகப் பதினெட்டாம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் இயற்றிய அகராதி .
சதுரங்கசேனை யானை , குதிரை , தேர் , காலாள் சேர்ந்த நால்வகைப் படை .
சதுரங்கபந்தம் சதுரங்கக் கட்டத்தில் எழுத்துகள் முறைப்படி அடையப் பாடப்பெறும் மிறைக்கவிவகை .
சதுரங்கபலம் காண்க :சதுரங்கசேனை .
சதுரங்கம் யானைப்படை , குதிரைப்படை , தேர்ப்படை , காலாட்படை எனும் நால்வகைப்படை ; நால்வகை சேனைகளாகக் காய்களை நிறுத்தி விளையாடும் ஒரு விளையாட்டுவகை ; நாற்கோணம் .
சதுரச்சந்தி நாற்சந்தி .