சதைப்பற்று முதல் - சந்தானலட்சுமி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சந்தானகரணி முரிந்த வுறுப்புகளை இணைக்கும் மருந்து ; இலுப்பைமரம் ; அறுகம்புல் ; பெருமருந்து
சந்தானகுரவர் சைவசித்தாந்தத்தைப் பரவச் செய்த பின்வந்த மெய்கண்டதேவர் , அருணந்தி சிவாசாரியார் , மறைஞான சம்பந்தர் , உமாபதி சிவாசாரியார் எனும் நால்வர் .
சந்தானகுரு மரபுவழிக் குரு .
சந்தானபரம்பரை சந்தான குரவரான சைவாசாரிய பரம்பரை .
சந்தானம் மரபு , சந்ததி ; குருபரம்பரை ; தொடர்பு ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று ; அம்பு எய்கை .
சந்தானலட்சுமி எண்வகை இலட்சுமி வடிவங்களுள் ஒன்று ; மக்கட்பேறு .
சந்தசு யாப்புவகை ; வேதாங்கங்களுள் ஒன்றாய் யாப்பிலக்கணம் கூறும் நூல் ; வேதம் .
சந்தஞ்சம் நாட்டியத்தில் காட்டும் ஆண்மக்கட்குரிய கைவகைகளுள் ஒன்று .
சந்தடி இரைச்சல் ; ஆரவாரம் ; கூட்டம் .
சந்தடைப்பன் மாட்டுநோய்வகை .
சந்தணி சந்தனம் .
சந்தணுகி இடுகிய சந்துகளில் வாழும் பாம்பு .
சந்தத்தாண்டகம் சந்தவடியும் தாண்டகவடியும விரவி ஓசைகொண்டு வருஞ் செய்யுள் .
சந்ததம் எப்பொழுதும் .
சந்ததி வழித்தோன்றல் ; மகன் ; மரபு .
சந்தப்பா நான்கெழுத்து முதல் இருபத்தாறெழுத்து வரையுள்ள அடிகள் நான்கு கொண்ட பாவகை .
சந்தப்பாட்டு நான்கெழுத்து முதல் இருபத்தாறெழுத்து வரையுள்ள அடிகள் நான்கு கொண்ட பாவகை .
சந்தப்பாணம் புண்கட்டிக்கு இடும் ஒரு கலவை மருந்து .
சந்தம் அழகு ; நிறம் ; செய்யுள்வண்ணம் ; வடிவு ; சுகம் ; பழக்கம் ; வேதத்தில் வரும் யாப்பைப் பற்றிக்கூறும் நூல் ; சந்தப்பாட்டு ; சந்தனம் ; துளை ; கருத்து .
சந்தமாமா சந்திரன் ; கூத்தில் கோமாளி தன்னோடு பேசுபவரைக் குறித்தற்கு கூறுஞ் சொல் .
சந்தயம் ஐயம் ; ஐயவணி .
சந்தர்ப்பணம் நிறைவுசெய்தல் ; மகிழ்வித்தல் .
சந்தர்ப்பம் வாய்ப்பு ; சமயம் ; முன்பின்னமைவு .
சந்தரி துளசி .
சந்தவடி நான்கு முதல் இருபத்தாறு வரையுள்ள எழுத்துக்களால் இயன்ற விருத்தத்தின் அடி .
சந்தவாக்கு இயற்கைக்குணம் ; இழிந்த பழக்கம் .
சந்தவிருத்தம் இனிய ஓசையுடைய பாடல் .
சந்தனக்கட்டை உரைத்தற்குரிய சந்தனமரக்கட்டை .
சந்தனக்கல் சந்தனம் உரைக்குங் கல் .
சந்தனக்காப்பு சந்தனத்தை கடவுளின் திருமேனியில் அப்புகை .
சந்தனக்குடம் முகமதியரின் ஒரு திருவிழா .
சந்தனக்குழம்பு இழைத்த சந்தனம் ; கலவைச்சாந்து .
சந்தனக்குறை கலவைச்சாந்தில் பயன்படுத்தும் சந்தனக் கட்டைத் துண்டு .
சந்தனக்கூட்டு கலவைச்சந்தனம் .
சந்தனச்சாந்து கலவைச்சந்தனம் .
சந்தனச்சாரல் சந்தனமரங்கள் நிறைந்த மலைச்சரிவு .
சந்தனச்சேறு காண்க : சந்தனக்குழம்பு .
சந்தனஞ்சாத்துதல் சந்தனக்காப்பிடுதல் .
சந்தனத்திரணை சந்தனக்கட்டி .
சந்தனத்திரி ஊதுவத்தி .
சந்தனத்தேய்வை காண்க : சந்தனக்குழம்பு .
சந்தனநறுநீர் சந்தனங் கலந்த பனிநீர் .
சந்தனப்பில்லை மாடுகளில் காணப்படும் ஒருவகை மஞ்சள்நிறம் .
சந்தனப்பீடிகை சந்தனமரத்தாலான மணைப்பலகை .
சந்தனப்பூச்சு உடலிற் சந்தனம் பூசுகை .
சந்தனம் சந்தனமரம் ; அரைத்த சந்தனம் ; தேர் .
சந்தனமிழைத்தல் சந்தனம் உரைத்தல் .
சந்தனவெற்பு சந்தனமரம் உண்டாகும் மலை ; பொதியமலை .
சந்தனவேங்கை சந்தனமரவகை .
சந்தனாசலம் காண்க : சந்தனவெற்பு .
சந்தனாத்திரி காண்க : சந்தனவெற்பு .
சந்தனாதி வேங்கைமரம் ; சந்தனாதித்தைலம் .
சந்தனாதித்தைலம் சந்தனம் முதலிய பொருள்களினின்று வடிக்கும் தைலம் .
சந்தா கட்டணம்
சந்தாபம் சுடுதல் ; மனத்துன்பம் ; செய்த பாவத்திற்கு இரங்குகை .
சந்தாயம் நிலச் சொந்தக்காரர் குத்தகைக்கு நிலம் விடாமல் தாமே பார்த்தல் ; ஊர்ப் பொதுச்சொத்தைப் பங்கிட்டு அனுபவித்தல் .
சதைப்பற்று பழத்தின் தசை ; உடைமை ; ஊன் .
சதைப்புற்று வெள்விழியிற் காணும் நோய் வகை .
சதையம் காண்க : சதயம் .
சதையல் மூங்கில் பிளப்பு .
சதைவலி சதையில் வலி உண்டாக்கும் நோய் வகை .
சதைவளர்ச்சி சதைவளரும் நோய்வகை .
சதைவுகாயம் நசுங்கலால் உண்டாகும் காயம் .
சதைவைத்தவள் மலடானவள் .
சதோகரு இலவங்கப்பட்டை .
சதோகுரு இலவங்கப்பட்டை .
சதோடம் குற்றத்துடன் கூடியது .
சந்தக்கவி காண்க :சந்தப்பா .
சந்தக்குழம்பு மணமூட்டிக் குழைத்த சந்தனம் .
சந்தக்கேடு மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று .
சந்தகபுட்பம் கிராம்பு .
சந்தகம் இடியப்பம் ; மகிழ்ச்சி .
சந்தகன் சந்திரன் .
சந்தகை இடியப்பக்குழல் .
சந்தகைப்பலகை இடியப்பக்குழல் .