சந்தானவிரதம் முதல் - சந்திராதித்தம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சந்திரகாந்தி ஒரு பூச்செடிவகை .
சந்திரகாம்புயம் வெண்டாமரை .
சந்திரகாவி செங்காவிமண் ; சிவப்புச் சாயவகை ; ஒரு புடைவைவகை .
சந்திரகாவிச்சேலை ஒரு புடைவைவகை .
சந்திரகி மயில் .
சந்திரகிரகணம் சூரியன் , பூமி , சந்திரன் மூன்றும் நேர்கோட்டில் வரும் நிறைநிலாக்காலத்து இரவில் பூமியின் நிழல்பட்டுச் சந்திரன் இருளுதல் ; இராகுவால் சந்திரன் பிடிக்கப்படுதல் .
சந்திரகுரு வெண்முத்து ; வெண்ணிறமுடைய அசுரகுரு ; சுக்கிரன் .
சந்திரகுலம் சந்திரனைக் குலமுதல்வனாகக் கொண்ட அரசகுலம் .
சந்திரசம்பவன் சந்திரனிடம் தோன்றியவனான புதன் .
சந்திரசாலிகை நிலாமுற்றம் .
சந்திரசாலை நிலாமுற்றம் .
சந்திரசூடன் சந்திரனை முடியில்கொண்ட சிவன் .
சந்திரசேகரன் சந்திரனை முடியில்கொண்ட சிவன் .
சந்திரஞானம் ஒரு சைவாகமம் .
சந்திரதரிசனம் குழந்தைக்கு நல்ல வேளையில் சந்திரனை முதன்முதலாக் காட்டுஞ் சடங்கு ; வளர்பிறையில் சந்திரன் முதன்முதலில் தெரிதல் .
சந்திரதிசை குபேரனது திசையாகிய வடக்கு .
சந்திரதிலகம் சந்தனம் ; சந்தனப்பொட்டு .
சந்திரநாடி பெண்குறிவாயினிற் படிந்திருக்கும் சவ்வு .
சந்திரநாதம் இராகு ; ஒரு மருந்துச்சரக்கு .
சந்திரப்பிரபை நிலவு ; மகளிர் தலையணிகளுள் ஒன்று ; சந்திரன் வடிவாய் அமைந்த ஊர்தி வகை .
சந்திரப்பிறை மகளிர் அணியும் பிறைபோன்ற கழுத்தணி ; மகளிர் தலையணிகளுள் ஒன்று .
சந்திரபாணி வயிரக்கல் .
சந்திரபூரம் பச்சைக் கருப்பூரம் .
சந்திரம் கருப்பூரம் ; பொன் ; இரவின் 15 முகூர்த்தங்களுள் ஒன்பதாவது ; மிருகசீரிடம் ; நீர் .
சந்திரமண்டலம் சந்திரனது வட்டம் ; சூரிய மண்டலத்திற்கு மேலுள்ளதும் புவர் உலகத்தைச் சார்ந்ததுமாகிய உலகம் .
சந்திரமணி சந்திரன் ஒளியில் நீர் சுரப்பதாகிய கல் .
சந்திரமானம் சந்திரன் சஞ்சரிக்கும் அளவு .
சந்திரமுருகு மகளிர் காதணிகளுள் ஒன்று .
சந்திரமௌலி சந்திரனை முடியில் கொண்ட சிவன் .
சந்திரரோகம் பெருநோய்வகை ; பைத்தியம் .
சந்திரலக்கினம் சாதகன் பிறந்த காலத்தில் சந்திரனிருக்கும் இராசி .
சந்திரலோகம் காண்க : சந்திரமண்டலம் .
சந்திரவட்டக்குடை அரசச் சின்னங்களுள் ஒன்றாகிய வெண்கொற்றக்குடை .
சந்திரவட்டம் அரசச் சின்னங்களுள் ஒன்றாகிய வெண்கொற்றக்குடை .
சந்திரவலயம் சிலம்பு வடிவாயமைந்த வாச்சியவகை .
சந்திரவளையம் ஒரு விளையாட்டுக் கருவி ; தோற்கருவிவகை ; சந்திரவலயம் ; தொட்டில் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கு மேலிடத்து மாட்டுவதற்குரிய வளையவகை ; கிணற்றுள் வட்டமாக அமைத்து இறக்கப்படும் நெல்லிக்கட்டை .
சந்திரவாதி சந்திரலோகம் அடைவதே முத்தியென்று வாதிப்போன் .
சந்திரவாள் காண்க : சந்திரகாசம் .
சந்திரன் திங்கள் ; குபேரன் ; இடைகலை நாடி .
சந்திரன்சிப்பி முத்துச்சிப்பி .
சந்திரனாள் திங்கட்கிழமை .
சந்திராதபம் நிலவு .
சந்திராதித்தம் அருகன் முக்குடைகளுள் ஒன்று .
சந்தானவிரதம் மகப்பேறடைய நோற்கும் நோன்பு .
சந்தானி வெண்காரம் .
சந்தி இசைப்பு ; கூடுகை ; பல தெருக்கள் கூடுமிடம் ; எழுத்து சொற்களின் புணர்ச்சி ; நட்பாக்குகை ; தறுவாய் ; மூங்கில்மரம் ; ஒரு பெரும்பண்வகை ; நாடகச்சந்தி ; வரிக்கூத்துவகை ; காலைமாலை நியமம் ; மாலைநேரம் ; சந்தியாவந்தனம் ; வணக்கம் ; திருவிழா ; கோயிற்கட்டளை ; பாடை ; தக்க சமயம் ; கோயில் கால பூசை .
சந்திக்கரை சாலை , ஆறு முதலியன கூடுமிடம் .
சந்திக்காப்பு மாலையில் குழந்தைகளுக்குச் செய்யப்படும் ஒரு சடங்குவகை .
சந்திக்கூத்து திருவிழாவில் பெண்கள் கோயிலின் முன்பு ஆடும் கூத்துவகை .
சந்திக்கோணம் தேர் உறுப்புகளுள் ஒன்று .
சந்திகம் சன்னிநோய்வகை .
சந்திகை சிற்றுண்டிவகை .
சந்தித்தம் ஐயுறப்பட்டது .
சந்தித்தல் சேர்த்தல் ; எதிர்தல் ; தெரிந்து கொள்ளுதல் .
சந்திப்பு எதிர்கை ; இசைவு ; ஆறு , தெரு முதலியன கூடுமிடம் ; காணிக்கை .
சந்திபண்ணுதல் சந்தியாவந்தனஞ் செய்தல் .
சந்திமிதித்தல் நான்காம் மாதத்தில் நல்ல வேளையில் குழந்தையைத் தெருச்சந்திக்கு தூக்கிச் செல்லுதல் .
சந்திமுடித்தல் நியமநிட்டைகளை நிறைவேற்றுதல் .
சந்தியாகாலம் சாயங்காலம் ; மாலைநேரம் .
சந்தியாமடம் அன்றாடம் வழிபாடு செய்தற்குரிய நீர்க்கரை மண்டபம் .
சந்தியாராகம் செவ்வானம் .
சந்தியாவந்தனம் காலை , உச்சி , மாலைகளில் வேத மந்திரங்களால் செய்யும் வழிபாடு .
சந்தியாவந்தனை காலை , உச்சி , மாலைகளில் வேத மந்திரங்களால் செய்யும் வழிபாடு .
சந்தியில் இழுத்தல் பழிப்பிற்கிடமாக்குதல் ; ஒருவன் குற்றங்குறைகளை வெளிப்படுத்தி நிந்தைக்கிடமாக்குதல் .
சந்தியில்நிற்றல் ஆதரவின்றி இருத்தல் ; தெருச்சந்தியில் நிற்றல் .
சந்தியை காலை , மாலை எனப்படும் நாட் பிரிவுள் ஒன்று ; மல்லிகை .
சந்திரகணம் நூலின் முதற் செய்யுளின் முதலில் அமையும்படி புளிமாங்காய் என்னும் வாய்பாடு பற்றி வரும் நற்கணச் சீர்வகை .
சந்திரகம் மயிற்றோகைக் கண் ; மயிற்றோகை ; ஓலையின் உறைச்சுருள் ; வெள்ளைமிளகு ; நகம் .
சந்திரகலை சந்திரன்கூறு ; சந்திரிகை ; பெண்களின் கொண்டையிலணியும் அணிவகை ; இடைகலை .
சந்திரகாசம் சிவன் இராவணனுக்குக் கொடுத்த வாள் ; காண்க : சந்திரகாசரசம் .
சந்திரகாசரசம் நீர்வடிவமான ஒரு மருந்துவகை .
சந்திரகாந்தக்கல் காண்க :சந்திரமணி ; வெள்ளாம்பல் .
சந்திரகாந்தச்சிலை காண்க :சந்திரமணி ; வெள்ளாம்பல் .
சந்திரகாந்தம் காண்க :சந்திரமணி ; வெள்ளாம்பல் .
சந்திரகாந்தமணி காண்க :சந்திரமணி ; வெள்ளாம்பல் .