சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| சப்பரம் | தெய்வத்திருமேனி தாங்கி ; ஒருவகைச் சிறுதேர் ; ஒருவகைச் சித்திர இருக்கை ; யானை மேற் றவிசு ; அம்பாரி . |
| சப்பரமஞ்சம் | மேற்கட்டமைந்த அலங்காரக்கட்டில் . |
| சப்பரை | மூடன் . |
| சப்பல் | தட்டை ; தட்டையானது ; சப்புதல் ; உணவின் எச்சல் . |
| சப்பளாக்கட்டை | தாளக்கட்டை . |
| சப்பளாத்தி | பருத்தவுடலர் ; திறமையற்றவர் . |
| சப்பளிதல் | தட்டையாதல் . |
| சப்பன் | பயனற்றவன் ; ஒரு மரவகை . |
| சப்பன்னம் | ஐம்பத்தாறு . |
| சப்பாணி | கைசேர்த்துக் கொட்டுதல் ; அட்டணங்கா லிடுகை ; நொண்டி . |
| சப்பாணிகொட்டுதல் | கைசேர்த்துக் கொட்டுதல் . |
| சப்பாணிப்பருவம் | பிள்ளைத்தமிழ்ப் பருவங்களுள் குழந்தையைக் கைகொட்டி விளையாடுமாறு வேண்டும் பருவம் . |
| சப்பாத்தி | ஒரு கள்ளிவகை ; ரொட்டிவகை . |
| சப்பாத்து | செம்பரத்தைச்செடி ; சப்பாத்திக்கள்ளி ; மிதியடி . |
| சப்பாத்துக்கள்ளி | கள்ளிவகை . |
| சப்பி | பதர் ; சப்புகிறவன் . |
| சப்பிக்கொடுத்தல் | வாயிலிட்டுப் பதப்படுத்திக் குழந்தைக்குக் கொடுத்தல் . |
| சப்பிட்டுப்போதல் | சுவையற்றுப் போதல் ; ஊக்கமற்றுப் போதல் . |
| சப்பியம் | சபைக்கேற்ற சொல் ; நெறிப்பட்ட பேச்சு . |
| சப்பிரம் | சப்பரத்தேர் ; யானைமேற் றவிசு ; ஒருவகை சித்திரவிருக்கை . |
| சப்பிரமஞ்சம் | காண்க : சப்பரமஞ்சம் . |
| சப்பு | சவர்க்காரம் ; காரணம் . |
| சப்புச்சவறு | கழிக்கப்பட்ட பொருள் . |
| சந்திரிகம் | ஓலையின் உறைச்சுருள் . |
| சந்திரிகை | நிலவு ; பேரேலம் ; ஓலைச்சுருள் . |
| சந்திரேகம் | கார்போக அரிசிவிதை . |
| சந்திரோதயம் | நிலவினுதயம் ; குளிர்ச்சியைத் தரும் ஒருவகை மாத்திரை . |
| சந்திரோபாலம்பனம் | காதலருள் பிரிந்தோர் விரக வேதனையால் சந்திரனைப் பழித்துக் கூறுதல் . |
| சந்தில் | சனி ; மூங்கில் . |
| சந்திவந்தனம் | காண்க : சந்தியாவந்தனம் . |
| சந்திவந்தனை | காண்க : சந்தியாவந்தனம் . |
| சந்திவழு | எழுத்திலக்கணத்திற்குரிய புணர்ச்சிக்கு வழுவாய்த் தொடுப்பது . |
| சந்திவிக்கிரகம் | அடுத்துக்கெடுத்தல் ; நட்புக் கொண்டு கெடுத்தல் . |
| சந்திவிளக்கு | கோயிலில் மாலைக்காலத்து ஏற்றும் விளக்கு . |
| சந்திவேளை | சாயங்காலம் . |
| சந்து | பொருத்து ; உடற்பொருத்து ; இடுப்பு ; பலவழிகள் கூடுமிடம் ; முடுக்கு ; தூதன் ; சமாதானம் ; சந்தனமரம் ; இசை ; உயிர் . |
| சந்துக்கட்டு | செயல் செய்யும் காலம் ; நெருக்கடியான சமயம் . |
| சந்துக்காறை | ஒருவகைக் கைவளை . |
| சந்துசெய்தல் | பொருத்தல் ; துளைசெய்தல் ; சமாதானஞ்செய்தல் . |
| சந்துசொல்லுதல் | தூதராகிச் செய்தி அறிவித்தல் . |
| சந்துட்டி | மகிழ்ச்சி ; மனநிறைவு . |
| சந்துநயத்தான் | தூதுளைக்கொடி . |
| சந்துபார்த்தல் | சமயம்பார்த்தல் . |
| சந்துபூசுதல் | சுவரில் கல்லுக்கிடையே சுண்ணாம்பு முதலியன பூசுதல் ; சிறு துளைகளை அடைத்தல் . |
| சந்துபொந்து | மூலைமுடுக்கு ; பொந்துபுடைகள் . |
| சந்துமந்து | குழப்பம் ; தாறுமாறு ; முடுக்கு . |
| சந்துமுட்டு | காலம் தவறிவரும் மாதவிடாய் . |
| சந்துமுந்து | காண்க : சந்துமந்து . |
| சந்துயிர் | எலும்பு . |
| சந்துவாசல் | திட்டிவாசல் . |
| சந்துவாதம் | இடுப்பு தொடைகளில் வரும் கீல் வாயு நோய்வகை . |
| சந்துவாய் | மூட்டுவாய் ; இடைப்பிளவு . |
| சந்துவிடுதல் | இடைவெளிவிடுதல் ; நெக்கு விடுதல் . |
| சந்தேகம் | ஐயம் ; கைகூடாமை ; குற்றமுள்ளதென்ற ஐயம் ; இல்லாமை ; கேடு . |
| சந்தேகாலங்காரம் | ஐயவணி . |
| சந்தேகி | எதனிடத்தும் ஐயம் கொண்டவன்(ள்) . |
| சந்தேகித்தல் | ஐயப்படல் ; துணிவுகொள்ளாதிருத்தல் . |
| சந்தேசம் | தூது . |
| சந்தை | பலவிடத்திருந்து ஓரிடத்தில் கொள்ளல் விற்றற்குக் கூடுமிடம் ; குறித்த காலத்தில் கூடும் கடைகள் ; கடைவீதி ; கூட்டம் ; புருவங்களின் நடுவிடம் ; வேதம் ; வேதம் முதலியவற்றை ஆசான் சொல்ல மாணவன் இருமுறை மும்முறை திரும்பச் சொல்லுதல் ; செய்யுளில் திரும்பத்திரும்ப வருஞ்சொல் ; செய்யுள் ; பெரியோர் கூற்று . |
| சந்தைக்காரன் | சந்தையில் சரக்கு விற்பவன் . |
| சந்தைக்கூட்டம் | பெருங்கூட்டம் . |
| சந்தைச்சரக்கு | சந்தையிலுள்ள விற்பனைப் பொருட்கள் . |
| சந்தையிரைச்சல் | அதிக இரைச்சல் ; பேரொலி . |
| சந்தைவெளி | சந்தை கூடும் வெளியிடம் . |
| சந்தோடம் | பூரிப்பு ; மகிழ்ச்சி ; இனாம் . |
| சப்பட்டை | தட்டை ; தட்டையானது ,உள்ளீடின்மை ; பதர் ; மடையன் ; கெட்டவன் ; சப்பை ; சிறகு . |
| சப்பட்டைவாக்கு | அவையில் கூறத்தகாத சொல் . |
| சப்படி | தட்டையானது ; வயிரக் குற்றங்களுள் ஒன்று . |
| சப்பணங்க்டுதல் | அட்டணங்கால் இடுதல் . |
| சப்பணங்கூட்டுதல் | அட்டணங்கால் இடுதல் . |
| சப்பணம் | அட்டணங்கால் இடுதல் . |
| சந்திராயுதம் | பிறைவடிவான அம்பு . |
| சந்திராதித்தவரை | சந்திரர் சூரியர் உள்ள வரையில் . |
| சந்திராதித்தவல் | சந்திரர் சூரியர் உள்ள வரையில் . |
| சந்திராபீடன் | சந்திரனை முடியில் கொண்ட சிவன் . |
|
|
|