சப்புதல் முதல் - சம்பா வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சபிண்டர் பிதிர்ப்பிண்டம் இடுதற்குரியோர்
சபிண்டி பிதிர்பூசை ; இறந்த பன்னிரண்டாம்நாள் செய்யப்படும் சிராத்தம்
சபிண்டீகரணம் பிதிர்பூசை ; இறந்த பன்னிரண்டாம்நாள் செய்யப்படும் சிராத்தம்
சபித்தல் சாபமிடல் ; மந்திரத்தை உச்சரித்தல்
சபினம் காண்க : வசம்பு
சபீனம் காண்க : வசம்பு
சபை சபைகூடும் மண்டபம் ; அவை : கூட்டம் ; சிதம்பரத்தில் சிவ பெருமான் நடனமாடும் சபை ; அம்பலம் ; திருச்சபை .
சபைகூட்டுதல் கூட்டங்கூட்டுதல்
சபையார் சங்கத்தினர் ; திருச்சபையார் ; வடமப் பிராமணருள் ஒரு சாரார்
சபையேறுதல் சபைக்குமுன் வருதல் ; அரங்கேறுதல் ; திருட்டு முதலிய தீய வழியிற் பேரெடுத்தல் .
சம்சாரம் உலக வாழ்க்கை ; குடும்பம் ; மனைவி .
சம்சாரி மணமானவன் ; பெரிய குடும்பம் நடத்துபவன் ; குடியானவன் ; வினைத்தொடர்புடையவன் .
சம்பகம் காண்க : சண்பகம் ; தற்பெருமை
சம்பங்கி சண்பகமரம் ; கொடிச்சம்பங்கி
சம்பங்கூடு சம்பங்கோரையாலோ தென்னையோலையாலோ செய்த கூடு .
சம்பங்கூடை சம்பம்புல்லாற் செய்த கூடை ; சம்பங்கோரையாற் செய்த கொங்கணி .
சம்பங்கோரை ஒரு கோரை வகை
சம்பங்கோழி காண்க : காட்டுக்கோழி
சம்படம் கூறை ; ஒரு பழைய வரி ; சோம்பல் ; சிறு செப்பு
சம்பத்தி செல்வம் ; பொன் ; பேறு .
சம்பத்து செல்வம் ; பொன் ; பேறு .
சம்பத்துவேட்டம் தாளம் ஐந்தனுள் ஒன்று .
சம்பந்தக்காரர் சம்பந்திகள் .
சம்பந்தக்குடியார் சம்பந்திகள் .
சம்பந்தங்கலத்தல் பிள்ளைகள் திருமணத்தால் பெற்றோர் உறவு கொள்ளுதல்
சம்பந்தம் தொடர்பு ; கலப்பு ; இணக்கம் ; திருமண உறவு .
சம்பந்தம்பேசுதல் மணம்பேசுதல் .
சம்பந்தி மணமக்களின் பெற்றோர்கள் ; சம்பந்தமுடையோன் ; ஒற்றுமையானவன் ; துவையல்வகை .
சம்பந்தித்தல் சேர்த்தல் ; உறவாதல் .
சம்பம் வச்சிரப்படை ; இடி ; மரவயிரம் ; எலுமிச்சை ; வீண்பெருமை ; அங்கநாடு
சம்பர்க்கம் சேர்க்கை .
சம்பரசூதனன் சம்பரனைக் கொன்ற காமன் ; தசரதன்
சம்பரம் நீர் ; சரபம் என்னும் எண்காற்பறவை ; ஆடை ; பரபரப்பு ; களிப்பு ; சிறப்பு .
சம்பரன் காமனாற் கொலையுண்ட அசுரன் .
சம்பராரி சம்பரனது பகைவனாகிய மன்மதன் ; தசரதன் .
சம்பரி நேர்வாளமரம் .
சம்பவம் பிறப்பு ; நிகழ்ச்சி ; ஓரளவை .
சம்பவித்தல் நிகழ்தல் .
சம்பவை பார்வதிதேவி .
சம்பளக்காரன் சம்பளம் பெறுபவன் .
சம்பளத்துக்கிருத்தல் மாதச் சம்பளத்திற்கு வேலை செய்தல்
சம்பளப்பிடித்தம் உரியசம்பளத்தைக் கொடாது நிறுத்திக்கொள்ளுகை ; சம்பளக்குறைவு .
சம்பளம் வழியுணவு ; வழிப்பொருள் ; மாத உழைப்பிற்குக் கிடைக்கும் ஊதியம் ; கரை ; எலுமிச்சை மரம் ; பள்ளிக்கூடச் சம்பளம் .
சம்பளி வெற்றிலைப் பை ; பொருள் வைக்கும் பை .
சம்பன்னம் நிறைவு
சம்பன்னன் செல்வமுள்ளவன் ; நிறைந்தவன் .
சம்பா ஓர் உயர்ந்த நெல் வகை ; மிளகு , சீரகங் கலந்து சுவாமிக்குப் படைக்கும் அன்னம் ; ஒரு விளையாட்டு ; தாயவகை ; நால் விரலளவு .
சப்புதல் மெல்லுதல் ; குதப்புதல் ; உறிஞ்சிக்குடித்தல் ; அதுங்குதல் ; சுருங்குதல் .
சப்பெனல் சாரமின்மைக் குறிப்பு .
சப்பை தட்டையானது ; சுவையற்றது ; வலியின்மை ; பயனற்றது ; தாழ்ந்தது ; இடுப்பு , தோள் இவற்றின் சந்து ; தேரின் சக்கரத்திற்கு அடியில் கொடுக்கப்படும் கட்டை ; வீட்டின் கூரைக் கைம்மரம் ; மரத்திற் பிளந்த துண்டு ; முத்திரை .
சப்பையெலும்பு இடுப்புப்புறமுள்ள எலும்பு .
சபக்கரம் துணியப்பட்ட பொருள் இருக்கும் இடம் .
சபட்சம் துணியப்பட்ட பொருள் இருக்கும் இடம் .
சபதக்காரன் சூளுறவு செய்வோன் .
சபதம் சூளுறவு ; பந்தயம் .
சபதமாயிருத்தல் இறுமாந்திருத்தல் .
சபதரித்தல் சம்பாதித்தல் ; ஆதரித்தல் .
சபம் கடவுளைத் துதித்தல் ; குதிரைக்குளம்பு ; ஆலமரம் முதலியவற்றின் விழுது ; மூங்கில் மரம் ; பிணம் .
சபர் கடற்பயணம் ; பொறுத்தற்குறிப்பு ; அரபி ஆண்டில் இரண்டாம் மாதம் .
சபரணை முழுமை ; ஆதரவு ; ஆயத்தம் ; ஒழுங்கு .
சபரம் கெண்டைமீன் .
சபரன் வேடன் .
சபரியை பூசை .
சபலங்கெட்டவன் பயனற்றவன் .
சபலம் நிலையற்ற உள்ளம் ; ஆசை ; சாறு ; மின்னல் ; மெலிவு ; பயனுள்ளது சித்தி .
சபலா திப்பிலி .
சபலை மின்னல் ; மனத்திட்பமற்றவள் ; நிலையற்றவளாகிய திருமகள் ; திப்பிலி ; விலைமகள்
சபாகம்பம் அவைக்கு அஞ்சுகை
சபாகுசுமம் செம்பரத்தம்பூ
சபாநாதன் அவைத்தலைவன் ; சிதம்பர சபையின் தலைவனாகிய நடராச மூர்த்தி
சபாநாயகன் அவைத்தலைவன் ; சிதம்பர சபையின் தலைவனாகிய நடராச மூர்த்தி
சபாபதி அவைத்தலைவன் ; சிதம்பர சபையின் தலைவனாகிய நடராச மூர்த்தி
சபாமண்டபம் அவை கூடுமிடம்
சபாரஞ்சகம் அவையிலுள்ளோர் மனத்தைக் கவர்வது .
சபாரஞ்சிதம் அவையிலுள்ளோர் மனத்தைக் கவர்வது .