சம்பாகம் முதல் - சமக்காளம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சம்மதித்தல் உடன்படுதல் ; நன்குமதித்தல் .
சம்மாரம் அழிவு .
சம்மான் தோணி .
சம்மானம் உபசாரச்சொல் ; வெகுமதி ; இறையிலியாக விடப்பட்ட நிலம் .
சம்மியஞானம் பேரறிவு .
சம்மியம் கூத்தின் விகற்பம் .
சம்மியாகம் கொன்றைமரம் .
சம்மெனல் கம்பீரக்குறிப்பு .
சம்மேளனம் கலப்பு ; கூட்டம் .
சம்மோகம் கவர்ச்சி .
சம்மோகனம் கவர்ச்சி .
சம்யோகம் புணர்ச்சி ; சேர்க்கை ; இரண்டு பொருள்கள் கூடியிருத்தலாகிய சம்பந்தம் .
சம்ரட்சணம் காப்பாற்றுகை .
சம்ரட்சணை காப்பாற்றுகை .
சம்வரை நவ பதார்த்தங்களுள் உயிரைக் கன்மம் அணுகாமல் தடுப்பது .
சம்வாகம் நெல்லும் புல்லும் நிறைந்த மலையூர் .
சம்வாதம் சொற்போர் , தருக்கம் ; உரையாடல் .
சம்வித்து அறிவு .
சம்வேகம் அறத்திலும் அதன் பயனிலும் விருப்பமுடைமை .
சமக்காளம் விரிப்புவகை .
சம்பாதித்தல் தேடிப்பெறுதல் .
சம்பாபதி சம்பாபதியின் இருப்பிடமான காவிரிப்பூம்பட்டினம் ; சம்புத்தீவைக் காவல் செய்யும் தேவதை .
சம்பாரங்கூட்டுதல் கறிக்குக் கூட்டுவர்க்கஞ் சேர்த்தல் .
சம்பாரப்பொடி கறிக்கூட்டுவர்க்கம்
சம்பாரம் கூட்டுவர்க்கம் ; நீர்மோர் ; கைமரந்தாங்கி
சம்பாரி சம்பன் என்ற அசுரனைக் கொன்ற இந்திரன் ; அக்கினி தேவன் .
சம்பால் ஒரு பச்சடிவகை .
சம்பாலம் ஆட்டுக்கடா
சம்பாவனை வெகுமானம் ; மரியாதை
சம்பாவிதம் நிகழக்கூடியது .
சம்பான் தோணி , படகு .
சம்பானோட்டி தோணி வலிப்போன்
சம்பிரதம் விளைவு ; கலம்பக உறுப்புள் ஒன்று , இந்திரசாலம் .
சம்பிரதாயம் குரு பரம்பரையில் வந்த உபதேசம் ; தொன்றுதொட்ட வழக்கம் ; திறமை .
சம்பிரதாரணை ஆராய்ந்து செய்யும் தீர்மானம்
சம்பிரதானம் கொடை ; நான்காம் வேற்றுமைப் பொருள்
சம்பிரதி தலைமைக் கணக்கன் ; ஊர்க்கணக்கனுக்கு உதவி செய்யும் எழுத்தர் ; வட்டத் தலைமைக் கணக்கர்
சம்பிரமம் மகிழ்ச்சி ; பரபரப்பு ; மனக்களிப்பு ; சிறப்பு ; நிறைவு
சம்பிராத்தி பேறு .
சம்பிரேட்சியம் ஆராய்ந்தறிகை .
சம்பிளி காண்க : சம்பளி .
சம்பீரம் எலுமிச்சைமரம் ; கிச்சிலிமரம் .
சம்பு இன்பத்தைத் தருபவனான சிவன் ; திருமால் ; பிரமன் ; அருகன் ; சூரியன் ; நாவல்மரம் ; நாவலந்தீவு ; நாவலந்தீவைக் காக்கும் தேவதை ; சம்புநதி ; செய்யுளும் உரைநடையும் விரவிவரும் நூல்வகை ; எலுமிச்சைமரம் ; வச்சிரப்படை ; நரி ; சம்பங்கோரை ; நெட்டி ;
சம்புகம் நரி .
சம்புகன் நரி .
சம்புகேச்சுரம் திருவானைக்கா என்னுந் தலம்
சம்புச்சயனம் திருமாலின் படுக்கையாகிய ஆலிலை ;
சம்புடம் சிறுசெப்பு ; புத்தகப் பகுதி ; இருக்கை ஒன்பதனுள் ஒன்று .
சம்புத்தி ஒருமை விளி ; நற்புத்தி .
சம்புத்தீவு ஏழு தீவுகளுள் ஒன்றாகிய நாவலந்தீவு .
சம்புபட்சம் சுத்தமாயைப் பிரபஞ்சத்தில் தொழில் புரியும் சிவ பேதங்கள் .
சம்புரோட்சனம் தூய்மைக்காக கோயிலகளில் செய்யுஞ் சடங்கு .
சம்புரோட்சணை தூய்மைக்காக கோயிலகளில் செய்யுஞ் சடங்கு .
சம்புளி காண்க : சம்பளி .
சம்பூகம் கிளிஞ்சில் வகை .
சம்பூரணம் நிறைவு ; முடிவு ; மிகுதி ; சம்பூரண ராகம் ; பல பெண்குழந்தைகளைப் பெற்றுச் சலித்தோர் மேலும் பெறுதலில் வெறுப்புற்று இதுவே கடைப்பெண்ணாகுக என்று பிறந்த பெண்குழந்தைக்கு இடும் பெயர் .
சம்பூரணராகம் எல்லாச் சுரங்களும் அமைந்த பண் .
சம்பை சம்பங்கோரைப்புல் ; மட்டச் சரக்கு ; எளிதில் அழியக்கூடிய பண்டங்கள் ; மீன் ; மின்னல் ; எழுவகைத்தாளத்துள் ஒன்று ; செழிப்பு .
சம்பைச்சரக்கு மட்டச்சரக்கு ; எளிதில் அழியக்கூடிய பண்டங்கள் .
சம்பைதாளம் எழுவகைத்தாளத்துள் ஒன்று .
சம்போக்கு கப்பற் கூட்டம் .
சம்போகம் புணர்ச்சி .
சம்போதனம் பன்மை விளி .
சம்போதனை விளிவேற்றுமை .
சம்போர் பூதம் .
சம்மட்டி குதிரையோட்டுங்கருவி ; சுத்தியல் வகை ; ஒரு பூண்டுவகை .
சம்மணம் காண்க : சப்பணம் .
சம்மதம் உடன்பாடு ; நட்பு ; கொள்கை .
சம்மதன் நண்பன் ; மைத்துனன் .
சம்மதி உடன்பாடு .
சம்பாகம் நாடு ; நன்றாய்ச் சமைத்தது .
சம்பாடணை உரையாடல் .
சம்பாத்தியம் பொருள் ஈட்டுகை .
சம்பாதனம் பொருள் ஈட்டுகை .
சம்பாதனை பொருள் ஈட்டுகை .