சமகம் முதல் - சமயாசாரம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சமம் மன அமைதி ; ஒப்பு ; ஒத்த பொருள் ; நடுவு நிலைமை ; இரட்டையான எண் ; போர் ; முதுவேனில் ; ஏற்றத்தாழ்வின்மை ; ஒத்த அடிகளுயுடைய பாடல் ; சமவெடுப்பு .
சமம்பாவித்தல் சமமாதற்கு முயலுதல் .
சமமுகம் முக அபிநயம் பதினான்கனுள் தியானிப்பது போல அசையாதிருத்தல் .
சமயக்கட்டு மதக் கட்டுப்பாடு .
சமயக்கணக்கர் மதவாதிகள் .
சமயக்காட்சியர் மதத்தை உணர்ந்தவர் .
சமயக்காரர் மதத்தைப் பின்பற்றுபவர் .
சமயங்கடத்துதல் வீண்காலம் போக்குதல் ; செயலைச் செய்யாது நாள் கடத்துதல் .
சமயச்சந்துக்கட்டு நெருக்கடியான சமயம் .
சமயசத்திரம் மதவாதத்தில் வெற்றிக்கு அறிகுறியாகக்கொண்ட குடை .
சமயத்தறுவாய் தக்க காலம் .
சமயத்தார் ஒரு மதத்தைச் சார்ந்தவர் .
சமயதத்துவம் மதத்தின் அடிப்படையான உண்மைகள் .
சமயதருமம் மதத்தின் அடிப்படையான உண்மைகள் .
சமயதீட்சை தீட்சை மூன்றனுள் சைவ சமயாசாரத்தை அனுட்டிக்கும்படி முதலாவதாகச் செய்யப்படுவது .
சமயநிந்தை மதப்பூசல் .
சமயநிலை மதக்கொள்கை ; மத அனுட்டானம் .
சமயப்பற்று மத அபிமானம் .
சமயப்போர் மதச் சண்டை .
சமயபேதம் மத வேறுபாடு ; பொருத்தமற்ற காலம் ; துன்பக் காலம் .
சமயபோதனை மதக்கொள்கைகளை உணர்த்துகை ; மதக்கொள்கை .
சமயம் மதம் ; காலம் , தருணம் , அவகாசம் ; நூல் ; உடன்படிக்கை ; மரபு ; சமயதீட்சை .
சமயம்பார்த்தல் தக்க காலத்தை எதிர்பார்த்து இருத்தல் .
சமயமிருத்தல் ஓலக்கமிருத்தல் .
சமயமுதல்வி சக்திமதத்தின் இறைவியாகிய உமை .
சமயலகனம் மதக்கோட்பாட்டை மீறுகை .
சமயவாதம் மதம் பற்றிய தருக்கம் .
சமயவாதி தன் சமயமே உயர்ந்ததென வாதிப்பவன் .
சமயவாற்றல் சொல்லாற்றல் .
சமயவிகற்பம் மதவேறுபாடு .
சமயாசமயம் தக்கதும் தகாததுமான காலங்கள் ; உரிய காலம் .
சமயாசாரம் மத ஒழுக்கம் .
சமகம் சிவபிரானைத் துதிக்கும் ஒரு வேதமந்திரம் .
சமகலி அங்கக் கிரியைகளுள் ஒன்று .
சமகன்னி பூப்படைந்த பெண் .
சமகாலம் ஒரே காலம் .
சமகோணம் ஒத்த கோணங்களையுடைய வடிவம் .
சமங்கை தொட்டாற்சுருங்கி ; ஆடுதின்னாப்பாளை .
சமசத்தமம் வியாழன் நின்ற இராசிக்கு ஏழாம் இராசியிலே சுக்கிரன் நிற்கும் நிலை .
சமசதுரம் ஒத்த அளவுள்ள நாற்கோணம் .
சமசம் வேள்வியில் சோமரசம் வைக்கும் பாத்திரம் .
சமசி நிறைவு ; பாடிமுடிக்கும்படி ஒருவனுக்குக் கொடுக்கும் கவியுறுப்பு .
சமசித்தத்துவம் எல்லாவற்றையும் சமமாகக் கருதும் மனநிலை .
சமசியை காண்க : சமசி .
சமசு கலகக்கூடம் .
சமசை காண்க : சமசி .
சமசோடி சரியான இணை .
சமஞ்சிதன் ஊர்க்கணக்கன் .
சமட்டி தொகுதி .
சமட்டுதல் காலாலே துவைத்தல் .
சமட்டுப்படி வண்டியில் ஏறியிறங்க அமைக்கும் படி .
சமட்டுவண்டி மிதி வண்டி .
சமண் அருகமதம் ; அம்மணம் .
சமணம் அருகமதம் ; அம்மணம் .
சமணர் சைனர் .
சமணி இலவமரம் .
சமத்காரம் பேச்சுத்திறன் ; செய்யுள் நயம் ; தோற்றம் ; வனப்பு .
சமத்தம் எல்லாம் .
சமத்தன் வல்லவன் .
சமத்தானம் இராச்சியம் ; தலைநகரம் .
சமத்து வல்லமை ; திறமை உள்ளவன் ; நாட்டின் உட்பிரிவு .
சமத்துக்காரம் காண்க : சமத்காரம் .
சமத்துக்காரன் திறமையுள்ளவன் .
சமதரிசி பொதுநோக்குடையவன் .
சமதலை புடைவையின் உள்தலைப்பு .
சமதளம் சமமான பூமி ; மக்கள் கூட்டம் .
சமதாளம் ஒன்பது வகைத் தாளத்துள் ஒன்று .
சமதீதம் ஐக்கியம் ; கழிந்தது .
சமதை ஒப்பு ; ஒரு சார்பின்மை ; வன்மை , மென்மை , இடைமை இம்மூன்றும் சமமாகக் கலந்து வரத் தொடுக்கும் செய்யுட்குணம் .
சமநிலை நடுவுநிலைமை ; வன்மை , மென்மை , இடைமை இம்மூன்றும் சமமாகக் கலந்து வரத் தொடுக்கும் செய்யுட்குணம் ; நிறையொத்த நிலை ; சாந்தம் என்னும் சுவை ; ஐவகைப் பாதங்களுள் ஒன்று .
சமநிலைவஞ்சி இருசீரடியால் வரும் வஞ்சிப்பாட்டு .
சமப்பால் வன்பாலும் , மென்பாலுமின்றி இடைத்தரமாய் உள்ள பூமி ; முல்லை நெய்தல் நிலங்கள் .
சமபந்தி ஒரே பந்தியில் உண்ணுமுரிமை ; விருந்தில் ஒரே வரிசை .
சமபூச்சியம் ஒத்த மேம்பாடு .
சமபூமி மேடுபள்ளமில்லாத நிலம் ; போர்க்களம் .