சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| சமவேதம் | மற்றவற்றோடு நீக்கமின்றி இருக்கும் பொருள் . |
| சமழ்த்தல் | வருந்துதல் ; நாணுதல் ; தாழ்தல் . |
| சமழ்ப்பு | வருத்தம் ; இழிவு ; வெட்கம் . |
| சமழ்மை | இழிவு . |
| சமற்காரம் | பேச்சுத்திறம் ; செய்யுள் நயம் ; தோற்றம் . |
| சமன் | ஏற்றத்தாழ்வின்மை ; இசை நூலில் வரும் தானநிலை மூன்றனுள் ஒன்று ; ஆண்மை ; யமன் ; நீதிமன்ற அதிகாரியின் அழைப்புக்கட்டளை . |
| சமனம் | தணியச் செய்கை ; ஆடுதின்னாப்பாளை ; வசம்பு ; ஐந்து செயல்களுள் ஒன்றாய் ஆன்மா தன் கன்மம் முடியும் வரையில் உலகானுபவங்களில் உழன்று மயங்கும்படி உண்மையை மறைத்தலைச் செய்யும் சிவபெருமானது அருட்செயல் . |
| சமனாகத்தாக்குதல் | யாழில் பண்களை வலியவும் மெலியவும் தாக்காது அளவொத்த ஓசையெழும்படி செய்தல் . |
| சமனாதம் | உவர்மண் . |
| சமனிகை | இடுதிரை . |
| சமனிசை | ஒத்த இசை ; அமைதி என்னும் சுவை . |
| சமனியகரணி | புண்ணையும் , தழும்புகளையும் போக்கும் மருந்து . |
| சமனியம் | பொதுவானது ; முழுமை ; சாதி என்னும் பொருள் ; பெறுதற்கு எளியது . |
| சமாசம் | சபை ; தொகைமொழி ; இலிங்கபாடாணம் . |
| சமாசாரம் | செய்தி . |
| சமாதானம் | அமைதி ; இன்பதுன்பங்களைப் பொருட்படுத்தாத மனநிலை ; சம்மதம் ; இணக்கம் ; மனவொருமைப்பாடு . |
| சமாதி | மனத்தைப் பரம்பொருளோடு ஒன்று படுத்தி நிறுத்துகை ; சங்கற்பம் ; ஓர் அணி வகை ; கல்லறை . |
| சமாதிக்கல் | கல்லறையை மூடுங்கல் . |
| சமாதிக்குழி | நிமிர்ந்து உட்கார்ந்த நிலையிலேயே இறந்தவர்களைப் புதைக்குங்குழி ; கல்லறை . |
| சமாதியடைதல் | யோகநிலையில் அமர்தல் ; சித்தி பெறுதல் . |
| சமாதியில்வைத்தல் | இறந்தவர்களை இருக்க வைத்துப் புதைத்தல் ; நாசஞ்செய்தல் . |
| சமாது | ஊமத்தைச்செடி ; காண்க : சமாதிக்குழி . |
| சமாப்தி | முடிவு . |
| சமாபந்தி | ஆண்டின் நிலவரித் தணிக்கை . |
| சமாராதனை | அந்தணருக்கு உணவளித்தல் . |
| சமாலம் | மயிற்றோகை விசிறி . |
| சமாலி | பூச்செண்டு . |
| சமாலுகம் | குறிஞ்சாக்கொடி . |
| சமாலேபனம் | சாணத்தால் மெழுகுகை . |
| சமாவர்த்தனம் | பிரமசரியவிரதம் நீங்குவதற்குச் செய்யும் சடங்கு . |
| சமாவருத்தனம் | பிரமசரியவிரதம் நீங்குவதற்குச் செய்யும் சடங்கு . |
| சமாளம் | களிப்பு . |
| சமாளித்தல் | சரிக்கட்டி நடத்துதல் ; பெரும் முயற்சியோடு ஒன்றை நிறைவேற்றுதல் . |
| சமானகரணி | காண்க : சமனியகரணி . |
| சமானதை | ஒப்பு . |
| சமானம் | ஒப்பு ; ஒத்துள்ளது . |
| சமானரகிதம் | ஒப்பில்லாதது . |
| சமானன் | பத்து வாயுக்களுள் ஒன்றும் உண்ட உணவைச் செரிக்கச் செய்வதுமான ஒரு வாயு வகை ; ஒத்தவன் . |
| சமானார்த்தபதம் | ஒருபொருட்பன்மொழி . |
| சமானி | ஒப்பானவன் . |
| சமானித்தல் | ஒப்பிடுதல் . |
| சமானோதகன் | பிதிர்களுக்கு நீர் விடுதற்குரியோன் . |
| சமி | அருகன் ; வன்னிமரம் ; தணக்குமரம் ; வாழைமரம் . |
| சமிக்கை | குறி ; செரிக்கை ; சைகை ; சங்கேதப்பெயர் . |
| சமிஞ்ஞை | சைகை ; பெயர் . |
| சமித்தம் | வேள்விமண்டபம் . |
| சமித்தல் | அழிதல் ; செரித்தல் ; சுவறுதல் ; நடத்தல் ; பொறுத்தல் ; அடக்குதல் ; மனங்கலங்கிப் போதல் . |
| சமித்து | காண்க : சமிதை ; கஞ்சாச்செடி . |
| சமிதம் | அமைதி . |
| சமயி | மதத்தைச் சார்ந்தோன் ; சமயவாதி ; சமயதீட்சை பெற்றவன் . |
| சமயோசிதம் | தருணத்திற்குரிய பொருத்தம் . |
| சமர் | போர் ; முள்ளம்பன்றி . |
| சமர்ச்சனம் | வழிபடுதல் . |
| சமர்த்தல் | பொருதல் . |
| சமர்த்தன் | வல்லவன் . |
| சமர்த்தாளி | வல்லவன் . |
| சமர்த்தி | நிறைவு ; வல்லவள் ; பக்குவமடைந்த பெண் . |
| சமர்த்து | திறமை ; திறமையுள்ளவர் . |
| சமர்ப்பணம் | கடவுள் , பெரியோர்களுக்குக் காணிக்கை முதலியன அளிக்கை . |
| சமர்ப்பணை | கடவுள் , பெரியோர்களுக்குக் காணிக்கை முதலியன அளிக்கை . |
| சமர்ப்பித்தல் | கடவுள் , பெரியோர்களுக்குக் காணிக்கை முதலியன அளிக்கை . |
| சமரகேசரி | போரில் அரியேறு போன்ற பெருவீரன் . |
| சமரகோலாகலன் | போரில் விருப்பமுடையவன் . |
| சமரங்கம் | போர்க்களம் . |
| சமரசம் | ஒற்றுமை நடுநிலைமை . |
| சமரதன் | வேறு போர்வீரனோடு சமமாய்ப் போரிட வல்ல தேர்வீரன் . |
| சமரம் | போர் ; முள்ளம்பன்றி ; கவரிமா ; சாமரை . |
| சமரி | போருக்குரிய தெய்வமான கொற்றவை ; பாம்பு . |
| சமரேகை | நிலநடுக்கோடு . |
| சமலம் | மலம் ; அழுக்கு . |
| சமலன் | மலத்தோடுகூடிய ஆன்மா . |
| சமவாசம் | நட்பு . |
| சமவாதசைவம் | முத்தி நிலையில் சிவமும் ஆன்மாவும் ஒக்கும் எனக் கொள்ளும் சைவமதவகை . |
| சமவாயம் | தற்கிழமை . |
| சமவிலை | ஏற்றமில்லாத நடுத்தர விலை . |
|
|
|