சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| சமைதல் | ஆயத்தமாதல் ; அமைதல் ; பொருத்தமாதல் ; தொடங்குதல் ; நிரம்புதல் ; புழுங்குதல் ; அழிதல் ; முடித்தல் ; பூப்படைதல் . |
| சமைப்பு | முயற்சி . |
| சமையல் | உணவு ஆக்குதல் ; ஆக்கிய உணவு . |
| சமையற்கட்டு | சமையலறை . |
| சமையற்கூடம் | சமையலறை . |
| சமைவு | நிலைமை ; அழிவு ; மனஅமைதி . |
| சய | அறுபதாண்டுக் கணக்கில் இருபத்தெட்டாம் ஆண்டு . |
| சயகண்டி | கோல்கொண்டு அடிக்கும் ஒரு வட்ட மணிவகை . |
| சயகண்டை | கோல்கொண்டு அடிக்கும் ஒரு வட்ட மணிவகை . |
| சயகம் | பூவரும்பு . |
| சயசய | போற்றிபோற்றி , வெற்றி குறித்த வாழ்த்துமொழி . |
| சயசீலன் | வெற்றியாளன் . |
| சயத்தம்பம் | வெற்றித்தூண் . |
| சயதாளம் | தாளம் ஒன்பதனுள் ஒன்று . |
| சயந்தன் | இந்திரன் மகன் . |
| சயந்தனம் | தேர் . |
| சயந்தி | பிறந்தநாள் விழா ; காண்க : வாதமடக்கி ; சிற்றகத்தி ; இந்திரன் மகள் . |
| சயபாளம் | நேர்வாளமரம் . |
| சயபேரிகை | வெற்றிமுரசு . |
| சயம் | வெற்றி ; சூரியன் ; காண்க : காசநோய் ; சிதைவு ; சருக்கரை ; ஆம்பல் . |
| சயம்பு | தானே உண்டானது ; சிவன் ; பிரமன் ; அருகன் . |
| சயமகள் | வெற்றிக்குரிய கொற்றவை ; மிதுனராசி . |
| சமிதை | அத்தி , அரசு , ஆல் , இத்தி , கருங்காலி , நாயுருவி , பலாசு , மா ,வன்னி என ஒன்பதுவிதம் கூடிய வேள்விக்குரிய சுள்ளிவிறகு , ஓமவிறகு . |
| சமிப்பாகம் | கொன்றைமரம் . |
| சமிபாகம் | கொன்றைமரம் . |
| சமிபாடு | செரிக்குங்காலம் ; செரித்தல் . |
| சமிர்த்தி | நிறைவு . |
| சமிரணன் | வாயு . |
| சமிலாகி | திப்பிலி . |
| சமீகம் | போர் . |
| சமீபம் | அண்மை . |
| சமீபித்தல் | கிட்டுதல் , அணுகுதல் . |
| சமீரணம் | கிடாரைமரம் ; எலுமிச்சை . |
| சமீரணன் | காற்று . |
| சமீரணி | வீமன் . |
| சமீரன் | காற்று , வாயுதேவன் . |
| சமு | 729 தேரும் , 729 யானையும் , 2187 குதிரையும் , 3685 காலாளுங் கொண்ட படை . |
| சமுக்கா | தொலைநோக்காடி ; திசையறிகருவி . |
| சமுக்காளம் | காண்க : சமக்காளம் . |
| சமுகம் | சன்னிதானம் ; நேர்காணல் ; முன்னிலை ; திரள் ; மரியாதைச்சொல் . |
| சமுச்சயம் | தொகுதி ; ஐயம் . |
| சமுசயம் | ஐயம் . |
| சமுசாரக்காரன் | பெரிய குடும்பத்தை உடையவன் . |
| சமுசாரம் | காண்க : சம்சாரம் ; செய்தி . |
| சமுசாரி | திருமணமானவன் ; குடியானவன் ; குடும்பி ; வினைத்தொடர்பு உடையவன் . |
| சமுசாரித்தொழில் | வேளாண்மைத்தொழில் . |
| சமுசாரிமகன் | நல்ல குடும்பத்தில் பிறந்தவன் . |
| சமுசு | கலகக் கூட்டம் ; தீய ஆலோசனை . |
| சமுத்திரசுண்டி | கிளிஞ்சில் . |
| சமுத்திரசோகி | ஒரு மருந்துக்கொடிவகை . |
| சமுத்திரப்பச்சை | ஒரு மருந்துக்கொடிவகை . |
| சமுத்திரபகவான் | கடலுக்குரிய கடவுளான வருணன் . |
| சமுத்திரம் | கடல் ; ஒரு பேரெண் ; படையிலொரு தொகை ; மிகுதி ; முடக்கொற்றான் பூண்டு . |
| சமுத்திரராசன் | காண்க : சமுத்திரபகவான் . |
| சமுத்திரவிலாசம் | பிரிந்திருக்கும் தலைவனைக் குறித்துத் தலைவி கடற்கரையிலிருந்து புலம்புவதாகப் பாடும் நூல் வகை . |
| சமுத்திராந்தம் | சிறுகாஞ்சொறிக்கொடி ; பருத்திச்செடி ; சாதிக்காய் . |
| சமுத்திராப்பழம் | குந்தளப்பழம் . |
| சமுதாயகாரியம் | பொதுச்செயல் . |
| சமுதாயச்சீர்திருத்தம் | மக்களின் தொன்றுதொட்டு வரும் பழக்கவழக்கங்களை முன்னேற்றத்தின் பொருட்டுத் திருத்துகை . |
| சமுதாயசோபை | உறுப்புகள் தனித்தனியாக வன்றி ஒருங்குகூடுதலால் தோன்றும் அழகு . |
| சமுதாயநிலம் | ஊர்ப் பொதுவாக இருந்து அனுபவிக்கப்படும் நிலம் . |
| சமுதாயம் | மன்பதை , மக்களின் திரள் ; பொருளின் திரள் ; கோயில் நிருவாக அதிகாரிகளின் கூட்டம் ; பொதுவானது ; உடன்படிக்கை ; ஊர்ப் பொதுச்சொத்து . |
| சமுதாயவாதி | மக்கள் நலனுக்காக உழைப்பவன் ; மனம் புத்தி முதலிய அகச் சமுதாயத்தாலும் , நிலம் நீர் முதலிய புறச் சமுதாயத்தாலும் உலகம் தோன்றுமென வாதிக்கும் பௌத்த மதப் பிரிவினனாகிய சௌத்திராந்திகனும் வைபாடிகனும் . |
| சமுதாய விண்ணப்பம் | பலர் ஒன்றுகூடிச் செய்து கொள்ளும் மனு . |
| சமுதாயிகம் | ஒன்றுகூடுவது . |
| சமுப்பவம் | தைவேளைப்பூண்டு . |
| சமுன்னதி | அகந்தை . |
| சமூகம் | காண்க : சமுகம் . |
| சமூலம் | வேர்முதல் இலையீறாகவுள்ள எல்லாம் ; முழுவதும் . |
| சமேதம் | உடனிருத்தல் , கூடியிருத்தல் . |
| சமேதன் | கூடியயிருப்பவன் . |
| சமை | ஆண்டு ; மன அமைதி ; பொறுமை . |
| சமைகடை | முடிவு . |
| சமைத்தல் | படைத்தல் ; செய்தல் ; சித்தம் செய்தல் ; அழித்தல் ; உணவு ஆக்குதல் . |
| சமிதி | சபைக்கூட்டம் ; போர் . |
|
|
|