சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| சர்வஞ்ஞத்துவம் | முற்றும் உணர்ந்தவனாய் இருக்கும் தன்மை . |
| சர்வஞ்ஞன் | எல்லாமறிந்தவன் ; கடவுள் . |
| சருவஞ்ஞன் | எல்லாமறிந்தவன் ; கடவுள் . |
| சர்வத்தியாகம் | முற்றுந் துறக்கை . |
| சர்வதா | எப்போதும் . |
| சர்வதாரி | அறுபதாண்டுக் கணக்கில் இருபத்திரண்டாம் ஆண்டு . |
| சருவதாரி | அறுபதாண்டுக் கணக்கில் இருபத்திரண்டாம் ஆண்டு . |
| சர்வம் | முழுவதும் . |
| சருவம் | முழுவதும் . |
| சர்வமானியம் | வரியின்றி விடப்படும் நிலம் . |
| சர்வமானியம் | வரியின்றி விடப்படும் நிலம் . |
| சருவமுகூர்த்தம் | எல்லா நற்செயல்களுக்கும் உரிய நல்ல வேளை . |
| சர்வவல்லமை | எல்லாம் வல்லனாய் இருக்குந் தன்மை . |
| சர்வவியாபி | எங்கும் நிறைந்தவன் , கடவுள் . |
| சர்வன் | சிவன் . |
| சர்வாதிகாரி | எல்லாச் செயல்களையும் கவனிக்கும் அதிகாரி . |
| சர்வேசன் | எல்லா உயிர்க்கும் தலைவனாகிய கடவுள் . |
| சரக்கறை | பண்டங்கள் வைக்கும் அறை ; பொன் அறை ; அணிகலன்கள் வைக்கும் அறை . |
| சரக்கு | வாணிகப்பொருள் ; பொன் ; கல்வியறிவு முதலியவற்றால் ஏற்படும் தகுதி அல்லது திறமை ; கறிச்சரக்கு ; மருந்துபண்டம்' சாராயம் ; முண்டைரோகம் . |
| சரக்குப்பறித்தல் | பண்டங்களைக் கப்பலினின்று இறக்குதல் . |
| சரக்குப்பிடித்தல் | வாணிகத்துக்குப் பண்டங்களை மொத்தமாக வாங்குதல் . |
| சரக்கொன்றை | சரஞ்சரமாகப் பூக்கும் கொன்றைமரம் . |
| சரகதி | அம்புபோல் செல்லும் குதிரையின் நடை . |
| சரகம் | தேனீ ; வண்டு ; எல்லை ; நாட்டின் பகுதி . |
| சரகாண்டம் | அம்புக்கூடு . |
| சரகு | உலர்ந்து வற்றிய இலை . |
| சரகூடம் | எதிரிகளின் ஆயுதம் தாக்காதவாறு அம்பினாற் கட்டும் பந்தல் . |
| சரங்கட்டல் | பூவால் மாலை கட்டுதல் . |
| சரச்சிறு | குறிஞ்சாக்கொடி . |
| சரச்சுவதி | காண்க : சரசுவதி ; ஓர் ஆறு . |
| சயமடந்தை | வெற்றிக்குரிய கொற்றவை ; மிதுனராசி . |
| சயமரம் | காண்க : சுயம்வரம் ; வெற்றிக்குறியான தோரணம் . |
| சயனக்கிருகம் | படுக்கையறை , பள்ளியறை . |
| சயனம் | படுக்கை ; படுத்திருக்கை ; உறங்குதல் ; புணர்ச்சி . |
| சயனித்தல் | உறங்குதல் ; படுத்தல் ; புணர்தல் . |
| சயா | வாதமடக்கிமரம் ; கடுக்காய் . |
| சயிக்கம் | மென்மை . |
| சயிக்கர் | அரசமரம் . |
| சயிக்கினை | காண்க : சைகை . |
| சயிகை | காண்க : சைகை . |
| சயித்தம் | புத்தர்கோயில் . |
| சயித்தல் | வெல்லுதல் . |
| சயித்தான் | பிசாசு . |
| சயித்தி | அரசமரம் . |
| சயித்தியம் | குளிர்ச்சி ; குளிர்காலம் ; ஒரு நோய் . |
| சயிந்தர் | சிந்து நாட்டினர் . |
| சயிந்தவம் | குதிரை ; இந்துப்பு ; தலை . |
| சயிந்தவ லவணம் | இந்துப்பு . |
| சயிந்தவி | ஒரு பண்வகை . |
| சயிப்பு | பொறுமை ; வெற்றி . |
| சயிரோகம் | மேகவண்ணப் பூவுள்ள மருதோன்றி மரம் |
| சயிலகோபன் | மலைகளின்மீது கோபமுடைய இந்திரன் . |
| சயிலங்கமாலை | வெட்டிவேர் . |
| சயிலம் | மலை . |
| சயிலாதி | மலைகளுள் முதன்மையான கைலாச மலை ; சிலாதனுக்கு மகனான நந்தி . |
| சயிலேகம் | ஒரு மணப்பண்டம் . |
| சயினி | திப்பிலி . |
| சயை | துர்க்கை ; திருதியை , அட்டமி , திரயோதசி என்னும் திதிகள் ; முன்னைமரம் . |
| சர்க்கம் | சருக்கம் , நூற்பிரிவு ; படைப்பு . |
| சர்க்கரை | காண்க : சருக்கரை . |
| சர்க்கரைக்கிழங்கு | சர்க்கரைவள்ளிக்கிழங்கு . |
| சர்க்கரைப்பூசணி | பறங்கிக்காய் . |
| சர்க்கரைப்பொங்கல் | சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து சமைக்கப்படும் உணவுவகை . |
| சர்ச்சரை | சுரசுரப்பு ; சச்சரவு . |
| சர்ச்சை | ஆராய்ச்சி ; சொற்போர் . |
| சர்த்தி | கக்கல் , வாந்தி . |
| சர்ப்பசயனம் | திருமாலின் பாம்பணை . |
| சர்ப்பம் | பாம்பு ; பகற்பொழுது பதினைந்தனுள் இரண்டாவது . |
| சர்ப்பராசி | நாணல்புல் . |
| சர்ப்பனை | வஞ்சனை . |
| சர்மம் | காண்க : சருமம் . |
| சர்வசக்தி | அனைத்து வல்லமையுமுடையவன் . |
| சர்வசங்கநிவர்த்தி | எல்லாப் பொருளிலும் பற்றுவிடுகை . |
| சர்வசித்து | அறுபதாண்டுக் கணக்கில் இருபத்தொன்றாம் ஆண்டு . |
| சர்வசுதந்தரம் | முழு உரிமை . |
|
|
|