சரசக்காரன் முதல் - சரவை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சரவிளக்கு ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கித் தொங்கவிடும் கோயில்விளக்கு .
சரவீணை வீணைவகை ; வீணைபோல் ஒலி செய்யும் கருவண்டு .
சரவை மேல்வரிச் சட்டம் ; தெளிவற்ற எழுத்து ; எழுத்துப்பிழை ; மூலத்தோடு ஒத்திடாத படி ; தொந்தரவு .
சரட்டெனல் விரைவுக்குறிப்பு .
சரடம் ஓந்தி ; பச்சோந்தி ; குசும்பாமரம்
சரடு முறுக்குநூல் ; பொன் ; வெள்ளிக் கம்பியினாற் செய்த கழுத்தணிவகை ; தந்திரம் ; மூக்கணாங் கயிறு .
சரடுதிரித்தல் கயிறுதிரித்தல் ; காண்க : சரடு முறுக்குதல் .
சரடுமுறுக்குதல் தீயன செய்யத் தூண்டுதல் ; ஒரு செய்தியைப் பொய்யாகக் கற்பித்து வெளியிடுதல் .
சரடுவிடுதல் மற்றவர் மூலமாகத் தன் கருத்தை வெளியிடுதல் ; தந்திரமாகப் பேசிப் பிறர் கருத்தை அறிய முயலுதல் ; காண்க : சரடு முறுக்குதல் .
சரண் அடைக்கலம் ; பாதம் ; காண்க : அம்மையார்கூந்தல் .
சரண்டம் பல்லி ; பறவைப்பொது .
சரண்புகுதல் அடைக்கலமடைதல் .
சரணம் அடைக்கலம் ; பாதம் ; மருதநிலத்தூர் ; வீடு ; அரசமரம் ; மயிற்றோகை ; மயில் ; பெருங்காயம் ; யானைத்தோட்டி ; வேதப்பகுதி ; கீர்த்தனத்தின் மூன்றாம் உறுப்பு .
சரணம்புகுதல் காண்க : சரண்புகுதல் .
சரணர் வீரசைவப் பெரியோர் .
சரணாகதம் அடைக்கலம் , தஞ்சமடைதல் .
சரணாகதன் அடைக்கலம் புகுந்தோன் .
சரணாகதி அடைக்கலம் புகுகை .
சரணாயுதம் காலை ஆயுதமாக உடைய கோழி .
சரணார்த்தி அடைக்கலம் தேடுபவன் .
சரணி வழி .
சரணியன் காப்பவன் .
சரதம் உண்மை .
சரதலம் கோள்நிலை முதலியவற்றை உணரும் கணக்கு .
சரந்தொடுத்தல் அம்பெய்தல் , மிகுதியாக வைதல் .
சரநட்சத்திரம் புனர்பூசம் , சுவாதி , திருவோணம் , அவிட்டம் , சதயம் என்னும் நல்ல நட்சத்திரங்கள் .
சரப்பணி வயிரம் பதித்த கழுத்தணி .
சரப்பலகை கடைகளின் அடைப்புப் பலகை ; தூண்களுக்கு நடுவில் செல்லும் பலகை .
சரப்பளி காண்க : சரப்பணி .
சரபடி மரபுவழி .
சரபம் சிங்கத்தைக் கொல்லவல்ல எண்காற் பறவை ; ஒட்டகம் ; மலையாடு ; குறும்பாடு ; விட்டில்பூச்சி ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .
சரம் அசைவு ; அசையும் பொருள் ; உயிர் ; நடை ; இயங்குதிணை ; மூச்சு ; காண்க : சரராசி ; சஞ்சலம் ; அம்பு ; ஐந்து ; திப்பிலி ; காண்க : நாணல் ; மணிவிடம் ; மாலை ; கொத்து ; நீர் ; கூரைச்சரம் ; நீர்நிலை ; இசைச்சுரம் ; போர் ; தனிமை ; காண்க :கொறுக்கச்சி கூதிர்காலம் ; அம்புக்கூடு .
சரம்பார்த்தல் மூச்சுப்போக்குப் பார்த்தல் .
சரமகவி இறந்தவரைப்பற்றி இரங்கிப் பாடும் பாட்டு , கையறுநிலை .
சரமண் சுண்ணச்சாந்துமண் .
சரமணி சிறுமணிகள் கட்டிய அரைப்பட்டிகை .
சரமதசை இறக்குந்தறுவாய் .
சரமம் முடிவு ; மேற்கு .
சரமழை அம்புமழை .
சரமாரி அம்புமழை .
சரராசி மங்கலமாகக் கருதப்படும் மேழம் , கடகம் , துலை , சுறவம் என்னும் இராசிகளுள் ஒன்று .
சரலாந்தல் கிளைவிளக்குவகை .
சரவட்டை கீழ்த் தரமானது .
சரவடி காண்க : சரபடி .
சரவணப்பொய்கை இமயமலைச்சாரலில் உள்ளதும் முருகக்கடவுள் பிறந்ததுமான ஒரு நீர்நிலை .
சரவணபவன் சரவணப்பொய்கையில் பிறந்த முருகக்கடவுள் .
சரவணம் கொறுக்கைப்புல் ; நாணற்புல் ; காண்க : சரவணப்பொய்கை .
சரவணோற்பவன் காண்க : சரவணபவன் .
சரவருடம் அம்புமாரி .
சரவன் அம்பெய்வோன் .
சரவாச்சம் கறியுப்பு .
சரவாணி காண்க : சரவன் .
சரவியம் அம்பினால் எய்யும் இலக்கு .
சரட்டுத்தாலி பொன்கயிற்றில் கோத்தணியும் தாலிவகை .
சரசக்காரன் இனிய குணமுடையவன் ; விகடன் .
சரசங்காட்டுதல் உறுப்புகளைத் தொட்டுப் பரிகசித்தல் .
சரசசல்லாபம் காதற்பேச்சு ; வேடிக்கைச் சொல் .
சரசப்பேச்சு காதற்பேச்சு ; வேடிக்கைச் சொல் .
சரசம் இனிய குணம் ; பரிகாசம் ; காம விளையாட்டு ; மலிவு ; தேக்கமரம் ; வெண்ணெய் ; உண்மை ; இனிமை .
சரசரத்தல் சருகு முதலியவை ஒலித்தல் ; தொடுதற்குச் சரசரவென்றிருத்தல் .
சரசரப்பு ஒலிக்கை ; சுரசுரப்பு ; மொருமொரு வென்றிருக்கை .
சரசரெனல் ஓர் ஒலிக்குறிப்பு ; விரைந்து எளிதிற் செல்கைக் குறிப்பு ; சுரசுரப்புக் குறிப்பு .
சரசல¦லை சுரத விளையாட்டு , புணர்ச்சி .
சரசாங்கி இருபத்தேழாவது மேளகர்த்தா .
சரசி பரிகாசக்காரன் ; இனிய குணமுள்ளவன்(ள்) .
சரசிசம் குளத்தில் தோன்றுவதாகிய தாமரை .
சரசு குளம் , நீர்நிலை .
சரசுவதி பிரமன் தேவியாகிய கலைமகள் ; ஓர் ஆறு ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .
சரசுவதிபண்டாரம் கலைமகளின் செல்வமாகிய நூல்நிலையம் .
சரசுவதிபீடம் கல்வி விளங்கும் இடம் ; கல்வி நிரம்பியவன் ; காண்க : சிக்குப்பலகை ; கலைமகள் தங்குமிடம் .
சரசுவதியூர்தி பூரான் .
சரசுவதிவாக்கு கலைமகள் அருளால் இயற்கையாகவே அமைந்த நினைவாற்றல் .
சரசோதி பிரமன் தேவியாகிய கலைமகள் .
சரட்டட்டிகை பொற்கயிற்றில் பதக்கங் கட்டிய கழுத்தணிவகை .
சரட்டடைப்பன் கால்நடை நோய்களுள் ஒன்று .