சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| சால்கட்டுதல் | தலைச்சால் உழுதல் ; சாலில் விதைத்துச் செல்லுதல் . |
| சால்பு | மேன்மை ; நற்குணம் ; சான்றாண்மை ; தன்மை ; மனவமைதி ; கல்வி . |
| சால்புமுல்லை | சான்றோருடைய அமைதிகூறும் புறத்துறை . |
| சால்புளி | முறைப்படி . |
| சால்வயிறு | பெருவயிறு . |
| சால்வளைத்தல் | ஏர்ச்சால் உழுதல் . |
| சால்வை | மயிர்க்கம்பளம் ; பொன்னாடை . |
| சால | மிகவும் . |
| சாலக்காரன் | மாயவித்தைக்காரன் ; வஞ்சகன் . |
| சாலக்கிராமம் | காண்க : சாளக்கிராமம் . |
| சாலக்கு | சூழ்ச்சி ; போலி நடிப்பு ; திறமை . |
| சாலகபங்கடர் | இராக்கதர் . |
| சாலகம் | வலை ; சிலந்திவலை ; யாகபத்தினியின் நெற்றியிலணியும் அணி ; பறவைக்கூடு ; பலகணி ; அரும்பு ; சாக்கடை ; சிறுகுறிஞ்சா ; மாயவித்தை . |
| சாலகராகம் | ஒரு பண்வகை . |
| சாலகன் | விரிவாகப் பேசுகிறவன் ; சகலன் . |
| சாலகிரி | அழுக்ககற்றுமிடம் ; அரண்மனையின் ஒதுக்குப் புரை . |
| சாலடித்தல் | சால்பட உழுதல் . |
| சாலபஞ்சிகை | மரப்பாவை . |
| சாலம் | கூட்டம் ; மதில் ; ஆச்சா ; பலகணி ; வலை ; பூவரும்பு ; கல்வி ; தாழ்வாரம் ; பெருமை ; வஞ்சகம் ; மாயவித்தை ; நடிப்பு ; சபை ; அகலம் ; குறளை ; மருத்துவநூல் ; கொடிமரம் ; வகை . |
| சாலம்பம் | பற்றுக்கோடுள்ளது . |
| சாலமாலம் | வஞ்சகம் . |
| சாலர் | அலங்காரத் தொங்கல்கள் ; நெய்தல் நில மக்கள் ; கைத்தாளவகை . |
| சாலரி | ஒரு வாத்தியவகை . |
| சாலாதார் | பெருமையற்றவர் . |
| சாலாபோகம் | அறச்சாலைகளுக்கு விடப்படும் இறையிலி நிலம் . |
| சாலாரம் | ஏணி ; பறவைக்கூடு ; படி . |
| சாலி | செந்நெல் ; நெற்பயிர்ப் பொது ; கள் ; புழுகுசட்டம் ; அருந்ததி ; கவசம் ; மராமரம் ; வேலமரம் . |
| சாலிகன் | நெசவுத்தொழில் செய்பவன் ; சாலியன் நெய்த ஆடை . |
| சாலிகை | கவசம் ; சுங்கவரி . |
| சாலியன் | துணி நெய்வோன் ; இலவங்கப்பட்டையை உரிக்கும் யாழ்ப்பாணத்துச் சாதியான் ; ஆடை . |
| சாலிவாகனசகாப்தம் | கி .பி . 78 ஆம் ஆண்டு சித்திரை மாதத்தில் தொடங்கிச் சாலிவாகனன் பேரால் வழங்கும் ஆண்டு . |
| சாலினி | அருந்ததி ; தேவராட்டி ; பேய்ப்பீர்க்கங்கொடி ; கள்வாணிச்சி . |
| சாலுகம் | சாதிக்காய் ; தாமரை முதலியவற்றின் கிழங்கு . |
| சாலுதல் | நிறைதல் ; பொருந்துதல் ; முற்றுதல் ; மாட்சிபெறுதல் . |
| சாலூகம் | காண்க : சாலுகம் . |
| சாலூரம் | தவளை ; மேன்மை . |
| சாலேகம் | சாளரம் ; பூவரும்பு ; சந்தனம் ; சிந்தூரம் ; சலதாரை . |
| சாலேசரம் | வெள்ளெழுத்து . |
| சாலேயம் | செந்நெல் விளையும் நிலம் ; சிறுதேக்கு . |
| சாலை | உணவளிக்கும் அறச்சாலை ; பள்ளிக்கூடம் ; குதிரை , யானை முதலியவற்றின் கூடம் ; பசுக்கொட்டில் ; பொதுமண்டபம் ; வீடு ; வேள்விக்கூடம் ; இருபக்கமும் மரம் செறிந்த பாதை . |
| சாலோக்கியம் | கடவுளுடன் ஓரிடத்தில் உறைகை . |
| சாலோகம் | கடவுளுடன் ஓரிடத்தில் உறைகை . |
| சாவகக்குறிஞ்சி | குறிஞ்சி யாழ்த்திறவகை . |
| சாவகநோன்பி | இல்லறத்திலிருந்து நோன்பு காப்போன் . |
| சாவகம் | ஒரு தீவு ; ஒரு மொழி . |
| சாவகன் | சாவகத் தீவினன் ; மாணாக்கன் ; சனி ; காண்க : சாவகநோன்பி . |
| சாவகாசம் | விரைவின்மை ; வசதி , சௌகரிய சமயம் . |
| சாவட்டை | ஈர் ; பயிர்ச்சாவி ; மெலிந்தவன்(ள்) ; உலர்ந்த வெற்றிலை ; தட்டாரப்பூச்சி ; சிறு வட்டத் தலையணை . |
| சாவட்டைப்பயிர் | சாவியான பயிர் . |
| சாவடி | வழிப்போக்கர் தங்குமிடம் , ஊர்ச் சாவடி , கச்சேரி , ஊர்ப் பொதுவிடம் , இறப்பு விளைக்கத்தக்க அடி |
| சாவணம் | கம்மியர் கருவியுள் ஒன்று , மூக்குமயிர் பிடுங்குங் கருவி , நாணல் , நாளம் . |
| சாவதானம் | எச்சரிக்கை , விரைவின்மை . |
| சாவம் | சாத்தீட்டு , சாபம் . |
| சாவயம் | உறுப்புகளோடு கூடியது . |
| சாவரம் | பாவம் , குற்றம் . |
| சாவல் | சேவல் . |
| சாவற்கட்டு | கோழிப்போர் . |
| சாவற்பண்ணை | படர்செடிவகை |
| சாவறுதி | இறக்குந்தறுவாய் , வலுவின்மை . |
| சாவாக்கிழங்கு | கருடன்கிழங்கு . |
| சாவாஞ்செத்தவன் | வலுவற்றவன் . |
| சாவாமூலி | மயிற்சிகைப்பூண்டு , வேப்பமரம் . |
| சாவாவரம் | இறவாதபடி கடவுளிடம் பெறும் வரம் . |
| சாவாவுடம்பு | புகழ் . |
| சாவி | மணிபிடிக்காமல் பதராய்ப்போன கதிர் , திறவுகோல் , அச்சாணி . |
| சாவிகொடுத்தல் | கடிகாரம் முதலியவை ஓடுவதற்காக அவற்றின் சாவியை முறுக்குதல் , தூண்டுதல் . |
| சாவித்தல் | திட்டுதல் |
| சாவித்திரம் | பூணூல் |
| சாவித்திரி | கலைமகள் , பிரமன் மனைவியருள் ஒருத்தி , சத்தியவானின் மனைவி , இரவு 15 முகூர்த்தத்துள் 13ஆவது , காயத்திரி மந்திரம் , நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
| சாவிபோதல் | பயிர் பட்டுப்போதல் . |
| சாவிவைக்கோல் | சாவியாய்ப்போன பயிரின் வைக்கோல் . |
| சாவீடு | இழவுநேர்ந்த வீடு . |
| சாவு | இறப்பு , பிசாசம் . |
| சாவெடி | பிணநாற்றம் . |
| சாவெழுத்து | நச்செழுத்து |
|
|
|