சிகைதாடு முதல் - சிசுநாயகம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சிகைதாடு சீயக்காய் ; தலையணிவகை .
சிகைதாடுகுச்சு சீயக்காய் ; தலையணிவகை .
சிகைமாலை தலைமாலை ; வாசிகை .
சிங்கங்கீறுதல் அக்கிநோய்க்குச் செம்மண்ணால் சிங்கவடிவம் எழுதுதல் ; கிட்டிப்புள்ளு விளையாட்டில் எண் குறித்தல் .
சிங்கச்சுவணம் உயர்தரப் பொன் .
சிங்கடியப்பன் சிங்கடி என்னும் பெண்ணுக்குத் தந்தையொத்த சுந்தரமூர்த்திநாயானார் .
சிங்கத்திசை தெற்கு .
சிங்கநகக்கை ஒரு கையின் விரல்களைச் சிங்க நகங்கள்போல் அகற்றி வளைத்தலாகிய அபிநயக்கைவகை .
சிங்கநகம் ஒரு கையின் விரல்களைச் சிங்க நகங்கள்போல் அகற்றி வளைத்தலாகிய அபிநயக்கைவகை .
சிங்கநாதம் அரிமா முழக்கம் ; வீராவேசத்தால் ஆரவாரித்தல் ; ஊதுகொம்பு ; போரில் வீர்ர் செய்யும் முழக்கம் ; தொந்தரவு .
சிங்கநோக்கு சிங்கத்தைப்போல் கழுத்தைத் திருப்பிப் பின்னும் முன்னும் பார்த்தல் , அரிமா நோக்கம் .
சிங்கப்பல் முன்புறம் நீண்டுள்ள துணைப்பல் .
சிங்கப்பிரான் நரசிங்கமூர்த்தி .
சிங்கப்பெருமாள் நரசிங்கமூர்த்தி .
சிங்கம் மிக்க வன்மையுள்ள ஒரு விலங்கு ; சிம்மராசி ; ஆடாதோடை ; கொம்பு ; வாழையின் இளங்கன்று ; ஒரு விளையாட்டு அளவு ; வேளாளரின் பட்டப்பெயர் ; சரகாண்டபாடாணம் ; மணப்பண்டவகை .
சிங்கம்புள் கிட்டிப்புள் என்னும் ஒரு விளையாட்டுக் கருவி .
சிங்கமடங்கல் சிங்கக்குட்டி .
சிங்கமடித்தல் கிட்டியடித்தல் .
சிங்கமதாணி வெற்றிவேந்தன் மார்பில் அணியும் சிங்கமுகப் பதக்கம் .
சிங்கமுகம்வைத்தல் கோபங்கொண்டிருத்தல் .
சிங்கமுகவோடம் சிங்கத்தின் உருவை முகப்பிற் கொண்ட தோணி .
சிங்கல் குறைதல் ; இளைத்தல் .
சிங்கவல்லி தூதுளைக்கொடி .
சிங்கவாகினி துர்க்கை .
சிங்கவாதனம் காண்க : சிங்காசனம் .
சிங்கவிளக்கெரிக்கை பகைவர் தலையிலே சாணத்தையிட்டு விளக்கேற்றி அவமதிக்கை .
சிங்கவேரம் சுக்கு ; இஞ்சி ; ஒரு மருந்துவகை .
சிங்கவேறு ஆண்சிங்கம் ; வீரன் .
சிங்களம் இலங்கை ; சிங்களமொழி ; ஒரு கூத்து .
சிங்களர் ஈழநாட்டிலுள்ள சிங்களமொழி பேசுவோர் .
சிங்கன் குறவன் .
சிங்கன்வாழை ஒரு வாழைவகை .
சிங்காசனம் அரியணை , சிங்கம் தாங்குவது போல் அமைக்கபட்ட இருக்கை ; தவிசு .
சிங்காடி காண்க : சிங்காணி .
சிங்காணம் மூக்குச்சளி .
சிங்காணி உண்டை வைத்து அடிக்கும் ஒரு வில்வகை .
சிங்காதனம் காண்க : சிங்காசனம் .
சிங்காரக்காரன் அலங்கார உடையுள்ளவன் .
சிங்காரத்தோட்டம் பூந்தோட்டம் ; அடிசில் தோட்டம் .
சிங்காரத்தோப்பு பூந்தோட்டம் ; அடிசில் தோட்டம் .
சிங்காரநடை ஒய்யாரநடை , பெருமிதநடை .
சிங்காரப்பாய்ச்சல் குழந்தைகள் முதலியோரின் துள்ளுநடை .
சிங்காரப்பேச்சு வேடிக்கைப்பேச்சு ; சரசப்பேச்சு ; அலங்காரப்பேச்சு .
சிங்காரம் அலங்காரம் ; ஒன்பான் சுவையுள் ஒன்றாகிய இன்பச்சுவை .
சிங்காரி அலங்காரமுடையவன்(ள்) .
சிங்காரித்தல் அலங்கரித்தல் ; அலங்கரித்துரைத்தல் .
சிங்கி நஞ்சு ; ஓர் உலோக நஞ்சுவகை ; பின்னல் ; குறத்தி ; இராகுவின் தாய் ; நாணமற்றவள் ; துணங்கைக்கூத்து ; பெண்சிங்கம் ; மிருதாரசிங்கி ; கற்கடகசிங்கி ; கடுக்காய் ; மீன்வகை ; சிங்கிறால் ; வல்லாரை ; மான்கொம்பு .
சிங்கிகம் சிறுவழுதலை என்னும் செடிவகை .
சிங்கிகை புதல்வன் கேது .
சிங்கிகொள்ளுதல் வயப்படுத்துதல் .
சிங்கிட்டம் குடசப்பாலைக்கொடி .
சிங்கிநாதம் இடம்பம்செய்கை ; வீண் காலங்கழிக்கை ; வீண்பேச்சு .
சிங்கியடித்தல் ஒரு விளையாட்டுவகை ; கூத்தாடுதல் ; வறுமையால் முட்டுப்படுதல் ; பெண்மைக்குணமின்றி ஒழுகுதல் .
சிங்கிரம் காண்க : சிங்கிட்டம் .
சிங்கிலி குன்றிக்கொடி ; காண்க : புலிதொடக்கி ; இண்டஞ்செடி .
சிங்கிவேரம் சுக்கு .
சிங்கினி வில் ; வில்நாண் .
சிங்குதல் குன்றுதல் ; இளைத்தல் ; கழிந்து போதல் ; அழிதல் ; சிக்கிக்கொள்ளுதல் .
சிங்குவம் சுக்கு .
சிங்குவை நாக்கு .
சிங்ஙுவை நாக்கு ; பத்து நாடியுள் ஒன்று .
சிச்சிரம் மீன்கொத்திப்பறவை .
சிச்சிலி மீன்கொத்திப்பறவை .
சிச்சிலிப்பொறி மதிற்பொறிவகை .
சிச்சிலுப்பான் அம்மைநோய்வகை .
சிச்சிலுப்பை அம்மைநோய்வகை .
சிச்சீ இகழ்ச்சிக்குறிப்பு .
சிசம் தமரத்தைமரம் .
சிசிரம் சந்தனம் ; காண்க : சிசிரருது .
சிசிரருது மாசி பங்குனி மாதங்களாகிய பின் பனிக்காலம் .
சிசினம் ஆண்குறி .
சிசு குழந்தை ; நூக்கமரம் ; கருப்ப சிசு .
சிசுகம் ஒரு மரவகை ; கடற்பன்றி ; குழந்தை .
சிசுத்துவம் குழந்தைத்தன்மை .
சிசுநாயகம் சிறுவர் ஆளும் கட்சி .