சிலமம் முதல் - சிலுவட்டை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சிலமம் காண்க : சிலம்பம் .
சிலமன் சாடை .
சிலமான்கல் ஒரு உயர்ந்த கல்வகை .
சிலமி சிலம்பவித்தையில் வல்லவன் ; பிடிவாதக்காரன் .
சிலர் சிலபேர் .
சிலவங்கம் மீன் எலும்பு .
சிலவர் சிலபேர் ; பாலைநில மக்கள் ; வேடர் ; பாலைநிலத் தலைவர் .
சிலாக்கியம் புகழத்தக்கது , மெச்சத்தக்கது ; சிறந்தது ; புகழ் ; உரிமை .
சிலாக்கியன் புகழ்தற்குரியவன் .
சிலாகித்தல் புகழ்தல் .
சிலாகை புகழ்ச்சி ; துப்பாக்கிச் சலாகை ; நீலக்கல் .
சிலாசத்து உலோகவகை ; மண்தைலம் ; ஒருவகை மருந்துக் கல் ; கற்பூரச்சிலை .
சிலாசம் இரும்பு , தாமிரம் முதலிய உலோகங்கள் ; மலையிற் பிறப்பன ; கருப்பூரச்சிலை .
சிலாசாசனம் கல்வெட்டு , கல்லிற் செதுக்கப்பட்ட சாசனம் .
சிலாசாதனம் கல்வெட்டு , கல்லிற் செதுக்கப்பட்ட சாசனம் .
சிலாசாரம் கல்லைப்போன்ற வன்மையுடைய இரும்பு .
சிலாஞ்சனம் நீல மணிவகை .
சிலாத்துமசம் கல்லில் பிறந்த இரும்பு .
சிலாதலம் பாறை ; கல் பரப்பிய இடம் ; கற்பாவிய ஆசன மேடை .
சிலாதைலம் பாறையில் உண்டாகும் மண்நெய் .
சிலாந்தி சீந்திற்கொடி .
சிலாநாகம் காண்க : சிலைநாகம் .
சிலாப்பி சோம்பேறி .
சிலாப்புட்டி நீர் இறைக்க உதவும் தோற்பை அல்லது நீர்ச்சால் .
சிலாப்புதல் வீண்பொழுதுபோக்கல் ; நடித்தல் .
சிலாபம் முத்துக்குளிப்பு .
சிலாபேசி சிவப்பு நெருஞ்சிப்பூண்டு .
சிலாம்பு மீன்செதிள் ; மரப்பொருக்கு ; சிறாம்பு .
சிலாமணி கருப்பூரச்சிலாசத்து ; எங்கும் செல்லக்கூடியது .
சிலாமதம் கன்மதம் ; பிறவிப் பாடாணவகை .
சிலாமனா மனோசிலை .
சிலாயுதன் ஆமை .
சிலார் குழப்பம் ; இனாம் .
சிலாரு குழப்பம் ; இனாம் .
சிலாலேகை கல்வெட்டு .
சிலாவங்கம் ஈயக்கல் .
சிலாவட்டம் சந்தனக்கல் ; சாணைக்கல் ; கற்பீடம் .
சிலாவருடம் கல்மழை ; கல்மாரி மேகம் .
சிலாவி கூரையைத் தாங்கும் வளைவு ; கல்நார் ; சிற்பி .
சிலாவிந்து கல்நார் .
சிலாவுதல் சுழலுதல் ; வட்டமாய் வார்த்தல் .
சிலிங்காரம் அலங்காரம் .
சிலிட்டம் செறிவு ; சிலேடைப் பொருளுள்ளது .
சிலியானை முடக்கொற்றான் பூண்டு .
சிலிர் மரவகை .
சிலிர்சிலிர்த்தல் உடல் புளகித்தல் .
சிலிர்த்தல் மயிர் நெறிக்கச் செய்தல் ; தளிர்த்தல் ; உடல் புளகித்தல் ; சில்லிடுதல் .
சில¦பதம் யானைக்கால்நோய் .
சில¦முகம் அம்பு ; வண்டு ; முலைக்கண் ; போர் .
சில¦ர்சில¦ரெனல் காண்க : சில¦ரெனல் .
சில¦ரிடுதல் குளிருதல் .
சில¦ரெனல் குளிரால் உண்டாகும் உணர்ச்சிக் குறிப்பு ; புளகித்தற் குறிப்பு .
சிலுக்கன் கலகக்காரன் ; தொந்தரவு செய்பவன் .
சிலுக்கு இரும்புவளையம் ; வாள் முதலியவற்றின் பல் ; சிலும்பு ; சிறுதுண்டு ; தொந்தரவு ; சிறுகாயம் .
சிலுக்குவெட்டு சிறுகாயம் .
சிலுகன் காண்க : சிலுக்கன் .
சிலுகி கலகக்காரி .
சிலுகிடுதல் நிலைகுலைதல் ; சண்டையிடுதல் ; கூச்சலிடுதல் .
சிலுகு சண்டை ; துன்பம் ; குழப்பம் ; கூச்சல் ; குறும்பு ; தடை ; கிட்டாமை .
சிலுகுசிலுகெனல் விரைவுக்குறிப்பு .
சிலுகுபாக்கி கையிருப்பு .
சிலுகை கஞ்சாக்குடுக்கை .
சிலுசிலுத்தல் ஒலித்தல் ; படபடவென்று பேசுதல் ; கோபித்தல் ; குளிர்வருதல் ; குளிர்ந்திருத்தல் ; தூறுதல் .
சிலுசிலுப்பு குளிர்ச்சி ; சிறுகோபம் ; குறும்பு .
சிலுசிலெனல் ஓர் ஒலிக்குறிப்பு ; குளிரால் நடுங்குதல் குறிப்பு .
சிலுத்தல் பதமாதல் ; சோறு பதனிழிதல் , சோறளிதல் ; கோபித்தல் ; குலுங்கக் காய்த்தல் ; கொஞ்சமாய்ச் சொரிதல் .
சிலுநீர் இலையில் தங்கி விழும் மழைத்துளி .
சிலுப்பட்டை அலப்புகிறவன் ; குறும்பு செய்யுஞ்சிறுவன் .
சிலுப்பல் காண்க : சிலும்பல் .
சிலுப்பு நடுக்கம் ; கோபங்காட்டுகை ; அடங்காநடை .
சிலுப்புதல் தயிர்கடைதல் ; கலக்குதல் ; அசைத்தல் ; சுழற்றுதல் ; மயிர்நெறிக்கச் செய்தல் .
சிலும்பல் சிலிர்த்திருக்கை ; சீலை முதலியவற்றின் கரடு ; துணி முதலியவற்றின் பீறல் .
சிலும்பு மரச்சிறாம்பு ; களிம்பு .
சிலும்புதல் மயிர் முதலியன சிலிர்த்தல் ; கட்டை முதலியவற்றில் தும்பு முதலியன வெளிப்பட்டு நிற்றல் ; பெருகிவருதல் ; ஒலித்தல் ; கலங்குதல் ; அசைதல் .
சிலுவட்டை கீழோர் , கயவர் .