சிலுவல் முதல் - சிவப்பிராமணர் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சிலுவல் கந்தை ; எளிமை ; அழகின்மை ; ஒழுங்கின்மை ; மரியாதையின்மை .
சிலுவலி சீர்கெட்டவள் .
சிலுவாணம் செலவுக்குக் கொடுத்ததில் மிகுத்து வைக்கும் பணம் .
சிலுவை கழுமரம் ; கிறித்து அறையப்பட்ட மரம் ; கிறித்தவ சமய சின்னத்துள் ஒன்று .
சிலேட்டர் செட்டிகள் , வணிகர் .
சிலேட்டி செட்டி .
சிலேட்டுமம் உடலிலுள்ள கபக்கூறு .
சிலேடித்தல் இருபொருள்படப் பேசுதல் .
சிலேடை பல பொருள் தரும் பாட்டு ; ஒரு வடிவாய் நின்ற சொற்றொடர் பல பொருளுடையதாக வரும் அணி ; இனிய சொற்றொடர் .
சிலேதம் செம்முருங்கைமரம் .
சிலேபணம் உடலிலுள்ள கபக்கூறு ; இறக்குந்தறுவாயில் தோன்றம் மூச்சு .
சிலேபி ஓர் இனிப்புப் பண்டம் .
சிலேற்பனை காண்க : சிலேபணம் .
சிலை கல்லிற் செதுக்கிய உருவம் ; முழக்கம் ; வில் ; தனுராசி ; மார்கழி மாதம் ; மூல நாள் ; வானவில் ; ஒளி ; வால் ; மருந்து அரைக்கும் குழி அம்மி ; மலை ; அம்மி ; ஒரு மரம் ; சூதகபாடாணம் .
சிலைக்கல் ஈரக்கல் .
சிலைத்தல் ஒலித்தல் ; முழங்குதல் ; யாழொலித்தல் ; கொட்டுதல் ; சினங்கொள்ளுதல் ; பின்னிடுதல் .
சிலைநாகம் சூடாலைக்கல் .
சிலைநார் கல்நார் .
சிலைநிறக்கல் மாமிசச்சிலை .
சிலைபாரித்தல் வில் வளைத்தல் .
சிலைமா மாக்கல் .
சிலையடித்தல் கல்லில் உருவம் செதுக்குதல் .
சிலையாவி காண்க : சிலைநார் .
சிலையிராசன் இரத்தினங்களுள் அரசாகிய வயிரம் .
சிலையுடம்பு புண்கட்டிகள் அடிக்கடி புறப்படுதற்குரிய உடற்கூறு .
சிலையோடுதல் புரையோடுதல் ; எதிரொலித்தல் .
சிலைவயிரம் வயிரக்கல் .
சிலைவிந்து காண்க : சிலைநார் .
சிலோச்சயம் மலை .
சிவ்வல் கடற்பாசி .
சிவ்வெனல் சிவத்தற்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; இறுகற்குறிப்பு .
சிவக்குறி சிவலிங்கம் .
சிவகணம் சிவச்சேவைப் பரிவாரம் .
சிவகணமுதல் சிவகணத்தின் தலைவராகிய நந்திதேவர் .
சிவகதி வீடு , முத்தி .
சிவகதிக்கிறை சிவகதிக்குத் தலைவனான அருகன் .
சிவகம் சாதிக்காய் ; நாய்ச்சீரகம் .
சிவகரந்தை ஒரு பூண்டுவகை .
சிவகாமி சிதம்பரத்து அம்பிகை .
சிவங்கரன் மங்களத்தைச் செய்பவனாகிய சிவபெருமான் .
சிவங்கரி மங்களத்தைச் செய்பவளாகிய பார்வதி .
சிவச்சி சாதிக்காய் .
சிவசக்தி சிவனிற் பிரியாத சக்தி .
சிவசத்தி ஐந்துவகைச் சத்தி ; துரிசு .
சிவசமயம் சைவமதம் .
சிவசன் சிவனிடம் பிறந்தவனாகிய சுக்கிரன் .
சிவசாதனம் உருத்திராக்கம் , திருநீறு முதலிய சைவசமயத்திற்குரிய சின்னங்கள் ; உருத்திராக்கம் .
சிவசாதாக்கியம் அருட்சக்தியால் தியான மூர்த்தியாய் நின்ற சிவம் .
சிவசித்தர் சைவ சமயத்திற் கூறிய பரமுத்தியை அடைந்தவர் .
சிவசிவ ஓர் இரக்கக்குறிப்பு .
சிவசின்னம் காண்க : சிவசாதனம் .
சிவஞானம் இறையுணர்வு , தெய்வ அறிவு .
சிவஞானி சிவஞானம் பெற்றோன் .
சிவண உவமைச்சொல் .
சிவணுதல் நட்புக்கொள்ளுதல் ; பொருந்துதல் ; அளவளாவுதல் ; அணுகுதல் ; ஒத்தல் ; பெறுதல் ;
சிவத்ததாசி செடிவகை ; செம்பருத்தி ; செம்பரத்தை .
சிவத்தம் செம்முருங்கைமரம் .
சிவத்தல் சிவக்குதல் ; கோபித்தல் ; சினக்குறிப்பு .
சிவத்துருமம் வில்வமரம் .
சிவதடி வெள்ளரி .
சிவதரம் அதிக மங்களமானது .
சிவதலம் சிவபிரான் கோயில்கொண்ட இடம் .
சிவதாரம் தேவதாரு என்னும் மரவகை .
சிவதுளசி திருநீற்றுப்பச்சை .
சிவதூதி துர்க்கை .
சிவதை கொடிவகை .
சிவந்தசோறு தீயந்துபோன சோறு .
சிவந்தவேசை செமபரத்தைச்செடி .
சிவந்தி பாலைவகை ; பூச்செடிவகை ; கடுக்காய்வகை .
சிவந்திரம் கைம்மாறு ; வேலையில் இருப்பவர்க்கு அம் முறையில் கொடுக்கும் சுதந்தரம் .
சிவநாபம் ஒருவகை இலிங்கம் .
சிவநிசி சிவராத்திரி .
சிவப்பன் செந்நிறமுள்ளவன் .
சிவப்பி செந்நிறமுள்ளவள் ; செந்தெங்கு .
சிவப்பிராமணர் காண்க : ஆதிசைவர் .