சிவப்பிரியம் முதல் - சிற்குணம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சிவப்பிரியம் உருத்திராக்கம் .
சிவப்பிரியை சிவபிரானிடம் அன்புடையாளாகிய பார்வதிதேவி .
சிவப்பு செந்நிறம் ; சிவப்புக்கல் ; சீட்டு முதலிய விளையாட்டுகளில் வென்ற கட்சிக்கு இடும் குறியீடு ; கோபம் ; கறுப்பு .
சிவப்புக்கந்தி கோழித்தலைக் கந்தகம் .
சிவப்புக்கல் ஈரற்கல் ; ஒரு மணிவகை .
சிவப்புச்சிலை கெம்பு .
சிவப்பூர்தல் சிவந்தநிறமடைதல் .
சிவப்பேறு சிவமாம் தன்மையை அடைகை .
சிவபண்டாரி சிவாலயக் கருவூலக்காரன் .
சிவபதம் சிவனடியார்கள் தத்தம் பரிபாகத்திற்கு ஏற்ப அடையும் தான் ஆள் உலகிருத்தல் , தன்பால் இருத்தல் , தான் ஆம் பதம் பெறல் , தான் ஆகுதல் என்னும் நால்வகைச்சிவபதவி .
சிவபாத்தியன் சிவனடியான் .
சிவபீசம் காண்க : சிவவிந்து .
சிவபுரம் சிவலோகம் .
சிவபூசை சிவவழிபாடு .
சிவபோகம் சிவானந்தம் .
சிவம் மங்களம் ; உயர்வு ; களிப்பு ; நன்மை ; குறுணி ; முத்தி ; கடவுளின் அருவுரு நிலை ; சிவத்துவம் .
சிவமது சிறுபுள்ளடிப்பூடு .
சிவமயம் சிவமாந்தன்மை ; மங்கலமொழி .
சிவமரம் வெண்கடப்பமரம் ; சவுக்குமரம் .
சிவமல்லி காண்க : கொக்குமந்தாரை .
சிவயோகி சிவயோகத்தால் முத்தியடைந்தோர் ; காண்க : வசம்பு .
சிவரசம் மூன்றுநாள் ஊறிய கஞ்சி ; பாதரசம் .
சிவராத்திரி சிவனடியார்கள் நாள் முழுதும் பட்டினியிருந்து இரவெல்லாம் கண்விழித்துச் சிவனைப் பலகாலம் அருச்சித்து மாசி மாதத்துக் கிருட்டின சதுர்த்தசியில் கொண்டாடும் மகாசிவராத்திரி விரதம் .
சிவல் கவுதாரி ; காடைவகை ; செந்நிலம் ; பகன்றைக்கொடி .
சிவலை சிவப்பு நிறமுள்ள ஆள் ; சிவப்புநிறமுள்ளது ; செந்நிற விலங்கு .
சிவலோகச்சேவகன் காந்தம் .
சிவலோகம் கைலாசம் .
சிவவல்லபம் எருக்கு ; ஒருவகை நாவல் ; செவந்திச் செடி .
சிவவிந்து இதள் , பாதரசம் .
சிவவெற்பு பழநி .
சிவவேடம் உருத்திராக்கம் முதலிய சிவசின்னம் தரித்த கோலம் .
சிவளிகை தலையணி .
சிவளிகைக்கச்சு உடைமேல் கட்டும் கச்சு .
சிவன் மும்மூர்த்திகளுள் ஒருவரான அழிக்கும் கடவுள் ; சிவனடியார்க்கு வழங்கிய சிறப்புப் பெயர் .
சிவனார்கிழங்கு காண்க : கார்த்திகைக்கிழங்கு .
சிவனார்பாகல் கோவைக்கொடி ; ஐவிரலிக்கொடி .
சிவனார்வேம்பு ஒரு செடிவகை .
சிவனி கழுதை .
சிவா கடுக்காய் ; கீழாநெல்லி ; ஆடுதின்னாப் பாளை ; வன்னிமரம் .
சிவாசாரியர் ஆதிசைவர்களுடைய பட்டப்பெயர் .
சிவாட்சம் உருத்திராக்கமணி .
சிவாதரம் மரக்கொம்பு .
சிவாயநம சைவர்களால் போற்றப்படும் ஐந்தெழுத்து மந்திரம் .
சிவார்ச்சனம் சிவபூசை .
சிவார்ச்சனை சிவபூசை .
சிவாருகம் ஆலமரம் .
சிவாலயம் சிவன்கோயில் .
சிவானுபூதி சிவனோடு இரண்டறக் கலக்கும் அனுபவம் .
சிவிகரம் சாதிக்காய் .
சிவிகை பல்லக்கு ; எருதுபூட்டிய வண்டிவகை .
சிவிகையார் பல்லக்குச் சுமக்கும் சாதியார் .
சிவிங்கி ஒரு விலங்குவகை ; ஒரு பறவைவகை ; சிறுத்தை .
சிவிட்கு கோபம் .
சிவிட்கெனல் பொறுமையின்மைக் குறிப்பு ; விரைவுக்குறிப்பு .
சிவிடு சிறிது ; முந்நூற்றறுபது நெல் பிடிக்கும் அளவு .
சிவிரம் படையெடுத்த அரசன் தங்குமிடம் , பாசறை .
சிவிறி விசிறி ; நீர்வீசும் கருவி .
சிவிறுதல் பரத்தல் ; காண்க : விசிறுதல் .
சிவுகம் மோவாய் .
சிவேதை செடிவகை ; நாணல் .
சிவேரெனல் செந்நிறக்குறிப்பு .
சிவை பார்வதி ; காளி ; நரி ; வேர் ; உலைமூக்கு ; நெல்லிக்காய் .
சிவைக்கியம் சிவனும் உயிரும் ஒன்றாய் இருத்தல் .
சிவோகம்பாவனை சிவனே நான் என்று பாவித்தல் .
சிழகுதல் விம்முதல் .
சிள்வண்டு சுவர்க்கோழி .
சிள்வீடு சுவர்க்கோழி .
சிள்ளீடு சுவர்க்கோழி .
சிள்ளுப்புள்ளெனல் சினக்குறிப்பு .
சிள்ளெனல் விரைவுக்குறிப்பு ; ஆரவாரக் குறிப்பு .
சிளுசிளுத்தல் இரைச்சற்குறிப்பு ; பதனழிவு .
சிளுசிளெனல் ஓர் ஒலிக்குறிப்பு .
சிளுபுளெனல் ஓர் ஒலிக்குறிப்பு .
சிளைத்தல் சோர்தல் .
சிற்குணம் மெய்யறிவு , ஞானமாகிய குணம் .