சிற்குணன் முதல் - சிறகுகோதுதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சிற்குணன் கடவுள் .
சிற்சத்தி ஐவகை ஆற்றல்களுள் ஒன்று .
சிற்சபை சிதம்பர நடனசபை .
சிற்சிலிர்ப்பான் அம்மைநோய்வகை .
சிற்சுகம் அறிவின்பம் , ஞானானந்தம் .
சிற்பசாத்திரம் சிற்பவித்தை .
சிற்பசாலை சிற்பவேலை செய்யுமிடம் .
சிற்பம் கல்லில் செதுக்கிய உருவம் ; நுண்தொழில் ; சிற்பக்கலை ; சிந்திக்கை ; அற்பம் ; தொழில்திறமை .
சிற்பர் சிற்பிகள் .
சிற்பரக்கூர்மை கந்தகவுப்பு .
சிற்பரம் கடவுள் .
சிற்பரவுப்பு இந்துப்பு .
சிற்பரன் அறிவுக்கு எட்டாத கடவுள் .
சிற்பரை பார்வதி ; சலவைக்கட்டி ; பொன்னிமிளை .
சிற்பன் படைப்புத்தொழிலில் வல்லவனாகிய பிரமன் ; சிற்பத் தொழிலோன் .
சிற்பாசாரி சிற்பக்கலைஞன் ; நுட்பத்தொழில் செய்வோன் ; கம்மியன் .
சிற்பி சிற்பக்கலைஞன் ; நுட்பத்தொழில் செய்வோன் ; கம்மியன் .
சிற்றகத்தி ஒரு மரவகை .
சிற்றஞ்சிறுகால் அதிகாலை , வைகறை .
சிற்றடி சிறிய கால் .
சிற்றடிப்பாடு மனித நடமாட்டம் அதிகம் இல்லாத ஒற்றையடிப்பாதை .
சிற்றடியார் குற்றேவல் செய்வோர் .
சிற்றண்டம் முட்டை .
சிற்றப்பன் சிறிய தகப்பன் ; மாற்றாந் தகப்பன் .
சிற்றம்பலம் சிதம்பரத்து நடனசபை .
சிற்றம்பலவன் சிதம்பரத்தில் நடனமாடுஞ் சிவபெருமான் .
சிற்றரத்தை ஒரு செடிவகை .
சிற்றவை சிறிய தாய் .
சிற்றறிவன் ஆன்மா .
சிற்றறிவு சுருங்கிய அறிவு , புல்லறிவு .
சிற்றாடை சிறுமியர் அணியும் உடை ; சிறிய ஆடை .
சிற்றாத்தாள் சிறிய தாய் .
சிற்றாமணக்கு ஓர் ஆமணக்குவகை .
சிற்றாமல்லி காட்டுமல்லிகை .
சிற்றாமுட்டி ஒரு செடிவகை .
சிற்றால் கல்லத்திமரம் .
சிற்றாலவட்டம் பீலிவட்ட விசிறி .
சிற்றாள் ஏவலாள் ; பையன் ; கொத்தனுக்கு உதவிபுரியுங் கூலியாள் .
சிற்றாறு சிறு ஆறு .
சிற்றி சிறிய தாய் ; பசளைக்கீரை .
சிற்றிதழ் அகவிதழ் ; அழகான பின்னல் .
சிற்றிரு கிலுகிலுப்பைச்செடி .
சிற்றிரை சிற்றுயிர்களின் உணவு ; எளிய உணவு .
சிற்றில் சிறு குடில் ; சிறு வீடு ; சிறுமியர் கட்டி விளையாடும் மணல் வீடு ; காண்க : சிற்றிற்பருவம் ; கந்தை .
சிற்றிலக்கம் கீழ்வாயிலக்கம் .
சிற்றிலிழைத்தல் சிறுமியர் மணல் வீடு கட்டி விளையாடுதல் .
சிற்றிலை கடுக்காய் ; குன்றிமணி ; நெய்ச்சிட்டி .
சிற்றிற்பருவம் சிறுமியர் கட்டிய மணற்சிற்றிலைத் தலைவன் சிதைக்கும் பருவத்தைப் புனைந்து கூறும் ஆண்பாற் பிள்ளைத்தமிழ் .
சிற்றின்பம் இம்மைக்குரிய இன்பம் , காமவின்பம் .
சிற்றினம் அறிவும் ஒழுக்கமும் அற்றோர் கூட்டம் ; நல்லறிவு இல்லாத தாழ்ந்தோர் .
சிற்றுண்டி சிறு அளவான உணவு , எளிய உணவு ; இனிப்பு உணவுவகை ; பலகாரவகை , பண்ணிகாரம் .
சிற்றுணவு சிற்றுண்டி ; கறி முதலியன .
சிற்றுதல் சஞ்சலப்படுதல் .
சிற்றுயிர் குறுகிய காலமே வாழும் உயிர் ; இழிந்த உயிர் .
சிற்றுரு சின்னவுரு ; தாலியுடன் கோக்கும் உரு .
சிற்றுள் சரக்கறை .
சிற்றுளி தச்சுக்கருவி .
சிற்றூண் காண்க : சிற்றுண்டி .
சிற்றூர் சிறிய ஊர் , குக்கிராமம் ; குறிஞ்சி நிலத்தூர் .
சிற்றூறல் சின்ன நீருற்று .
சிற்றெண் கீழெண் ; இருசீர் ஓரடியாய் வரும் அம்போதரங்கவகை ; பரிபாடல் உறுப்புகளுள் ஒன்று .
சிற்றெலி சுண்டெலி .
சிற்றெறும்பு எறும்புவகை .
சிறக்கணித்தல் கண்ணைச் சுருக்கிப் பார்த்தல் ; கடைக்கண்ணாற் பார்த்தல் ; அவமதித்தல் .
சிறகடித்தல் பறத்தற்பொருட்டு இறக்கையடித்தல் .
சிறகர் இறகு .
சிறகறுதல் வலியழிதல் .
சிறகாற்றுதல் சிறகை விரித்தடித்து இளைப்பாற்றிக்கொள்ளுதல் .
சிறகி பறவைவகை ; ஒருமீன்வகை .
சிறகிமீன் பறவைமீன் .
சிறகு இறகு ; மீன்சிறகு ; படை முதலியவற்றின் உறுப்பு ; தெருவின் பக்கம் ; தெரு ; கிளை வாய்க்கால் ; பனையோலையிற் பாதி ; கதவு முதலியவற்றின் இலை .
சிறகுகட்டிப்பறத்தல் விரைந்துசெல்லுதல் .
சிறகுகதவு இரட்டைக்கதவு .
சிறகுகுடில் தூக்குங்குடிசை .
சிறகுகோதுதல் சிறகை அலகால் வகிர்தல் ; சிறகை உலர்த்துதல் .