சிறகுகோழி முதல் - சிறுசோறு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சிறகுகோழி காட்டுக்கோழிவகை .
சிறகுதெரித்தல் காண்க : சிறகுகோதுதல் .
சிறகுமுளைத்தல் தற்காத்துக்கொள்ளும் வலி பெறுகை ; வெளியேறிவிடுகை .
சிறங்கணித்தல் காண்க : சிறக்கணித்தல் .
சிறங்கித்தல் அவமதித்தல் ; சிறங்கையால் அளத்தல் .
சிறங்கை கைந்நிறையளவு .
சிறத்தல் மேன்மையாதல் ; மேற்படுதல் ; கனத்தல் ; இன்றியமையாதிருத்தல் ; மங்கலமாதல் ; அன்பாதல் ; மகிழ்தல் ; அழகாதல் .
சிறந்தோர் உயர்ந்தோர் ; தேவர் ; உறவினர் ; துறந்தோர் .
சிறப்பணி சாதி , குணம் , செயல் என்பவற்றால் ஒரு பொருளைச் சிறப்பித்துக் கூறும் அணி ; ஒப்புமையால் பொதுமையுற்றிருந்த இரண்டு பொருள்களுக்கு ஒரு காரணத்தால் வேறுபாடு தோன்றுவதைக் கூறும் அணி .
சிறப்பாங்கல் மாணிக்கவகை .
சிறப்பாடு மேம்பாடு .
சிறப்பித்தல் அலங்கரித்தல் ; பெருமைப்படுத்தல் ; புகழ்தல் .
சிறப்பிலாதாள் மேம்பாடு இல்லாதவளாகிய மூதேவி .
சிறப்பிலாள் மேம்பாடு இல்லாதவளாகிய மூதேவி .
சிறப்பு பெருமை ; திருவிழா ; செல்வம் ; அன்பளிப்பு ; மதிப்பு ; தலைமை ; பகட்டு ; காண்க : சிறப்பணி ; இன்பம் ; ஒன்றற்கேயுரியது ; வரிசை ; போற்றுகை ; மிகுதி ; வீடுபேறு .
சிறப்புச்செய்தல் ஒப்பனைசெய்தல் ; போற்றுதல் ; விழாக்கொண்டாடுதல் .
சிறப்புடைக்கிளவி அன்பான சொல் .
சிறப்புப்பாயிரம் ஒரு நூலுக்குச் சிறப்பாக அமைக்கப்பட்ட முன்னுரை , நூற்பெயரும் காரணமும் ஆக்கியோன் பெயரும் அளவும் பயனுமுரைப்பது .
சிறப்புப்பெயர் ஒன்றற்கே உரிமைபூண்டு வரும் பெயர் ; திணை , நிலம் , சாதி , குடி , உடைமை , குணம் , தொழில் , கல்வி என்னும் எண்வகையாலும் பொருள்களுக்குச் சிறப்பாகக் கூறும் பெயர் ; அரசன் கொடுக்கும் பட்டப்பெயர் .
சிறப்புரை சிறப்புச் சொற்பொழிவு .
சிறப்புவிதி ஒன்றற்குரிய சிறப்பான முறை .
சிறப்பெடுத்தல் திருவிழாக் கொண்டாடுதல் .
சிறப்பெழுத்து ஒரு மொழிக்குச் சிறப்பாக அமைந்துள்ள எழுத்து .
சிறவு சிறந்த செயல் .
சிறாங்கணித்தல் காண்க : சிறக்கணித்தல் .
சிறாங்கித்தல் உள்ளங்கையளவாக்குதல் ; உரிமையாக்குதல் ; இரத்தல் .
சிறாங்கை காண்க : சிறங்கை .
சிறாம்பி காவற்பரண் .
சிறாம்பித்தல் ஒருசேரத் திரட்டுதல் .
சிறாம்பு மரச்சிலும்பு .
சிறாம்புதல் குறுகுதல் ; இளைத்தல் ; உராய்தல் ; பிறாண்டுதல் .
சிறாய் மரத்துண்டு .
சிறாய்த்தல் உராய்ந்து ஊறுபடுதல் .
சிறாய்த்துக்குச்சி செடிவகை .
சிறார் சிறுவர் .
சிறிட்டம் விளாம்பட்டை .
சிறிது இழிந்தது .
சிறிதுரைத்தல் இகழ்ந்து பேசுதல் .
சிறிபலம் வில்வமரம் .
சிறியசிந்தையர் கீழோர் .
சிறியத்தினி வேலிப்பருத்தி .
சிறிய தகப்பன் தந்தைக்குப் பின்னோன் ; சிறிய தாயின் கணவன் .
சிறிய தாய் தாயின் தங்கை ; சிற்றப்பன் மனைவி ; இளைய மாற்றாந் தாய் .
சிறியநோக்குதல் கடைக்கண்ணால் பார்த்தல் .
சிறிய மனம் கயமைக்குணம் .
சிறியன் சிறுவன் ; இழிந்தவன் .
சிறியிலை சிறிய இலை .
சிறிவில் அகிலமரம் .
சிறுக்கன் சிறுவன் .
சிறுக்கி இளம்பெண் ; வேலைக்காரி .
சிறுக்குதல் சிறுகச்செய்தல் ; சினத்தல் .
சிறுகல் சிறுகுதல் , குறைதல் .
சிறுகாஞ்சொறி ஒரு செடிவகை .
சிறுகாடு தூறு அடர்ந்த காடு .
சிறுகாப்பியம் பெருங்காப்பியத்திற்குள்ள உறுப்புகளில் சில குறைந்து நடைபெறும் நூல்வகை .
சிறுகாய் சாதிக்காய் .
சிறுகாரிடம் சாதிக்காய் .
சிறுகால் தென்றல் ; காண்க : காவட்டம்புல் .
சிறுகாலை உதயம் ; விடியற்காலை ; இளமைப்பருவம் .
சிறுகிராமம் நூறு குடியுள்ள ஊர் .
சிறுகீரை ஒரு கீரைவகை .
சிறுகு குழப்பம் ; துன்பம் ; தடை .
சிறுகுடல் இரைப்பை முதல் பெருங்குடல்வரையுள்ள உணவுக்குழாயின் பகுதி .
சிறுகுடி குறிஞ்சிநிலத்தூர் ; சிற்றூர் ; ஏழைக்குடும்பம் ; சுருங்குதல் ; நிலைதாழ்தல் .
சிறுகுழி 36 சதுர அடிகொண்ட ஓர் அளவை ; கீழ்வாயிலக்கப் பெருக்கம் .
சிறுகுறிஞ்சா ஒரு மருந்துக் கொடிவகை .
சிறுகுறிஞ்சி நேர்வாளமரம் ; புளியாரைப் பூண்டு .
சிறுச்சிறிது கொஞ்சம்கொஞ்சமாக .
சிறுசடாமாஞ்சில் ஒரு மருந்துவகை .
சிறுசவளம் குந்தப்படை .
சிறுசெங்குரலி கருந்தாமக்கொடி .
சிறுசெய் பாத்தி .
சிறுசொல் பழிச்சொல் ; இழிச்சொல் .
சிறுசோற்றுவிழவு சோற்றைத் தயிர் முதலியவற்றோடு கலந்து உருண்டைகளாக்கி அவற்றை வருவோர்க்குக் கொடுத்து மகிழும் கொண்டாட்டம் .
சிறுசோறு குழந்தைகள் விளையாட்டாகச் சமைக்கும் மணற்சோறு ; சித்திரான்னம் .