சிறுத்தல் முதல் - சிறுவயது வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சிறுத்தல் சிறிதாதல் ; சுறுங்குதல் ; கோபித்தல் ; தடுத்தல் .
சிறுத்தை சிறு புலிவகை .
சிறுதகை தலைவணக்கம் .
சிறுதகைமை தலைவணக்கம் .
சிறுதடி சிறுவயல் ; பாத்தி .
சிறுதரம் சிறிய அளவு ; இளம்பருவம் ; சிறுதரத்துப் பிள்ளைகள் .
சிறுதனம் சிறுபிள்ளைத் தன்மை ; சிறுசேமிப்பு ; சொந்த நிதிகள் .
சிறுதாயார் காண்க : சிறிய தாய் .
சிறுதாரை நீர்வீசுந் துருத்தி .
சிறுதாலி சிறிய தாலிவகை ; கணவனது வாழ்நாள்வரை மகளிர் கழுத்தில் சரட்டுடன் எப்பொழுதுமுள்ள தாலி ; வைப்பாட்டிக்குக் கொடுக்குந் தாலி .
சிறுதானியம் புன்செய்த் தானியம் .
சிறுதிகை வடகிழக்கு , வடமேற்கு , தென்கிழக்கு , தென்மேற்கு எனப்படும் கோணத்திசைகள் .
சிறுதிசை வடகிழக்கு , வடமேற்கு , தென்கிழக்கு , தென்மேற்கு எனப்படும் கோணத்திசைகள் .
சிறுதிட்டை சிறுமேடு .
சிறுதுகில் கந்தை .
சிறுதுடி சிறிய உடுக்கைவகை .
சிறுதுத்தி ஒரு பூண்டுவகை .
சிறுதேட்டு காண்க : சில்வானம் .
சிறுதேர் விளையாட்டு வண்டி ; காண்க : சிறுதேர்ப்பருவம் .
சிறுதேர்ப்பருவம் தலைவன் சிறிய தேரைச் செலுத்தும் பருவத்தைச் சிறப்பிக்கும் ஆண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பகுதி .
சிறுதேவபாணி இசைப்பாவகை .
சிறுதொழில் இழிசெயல் .
சிறுநகை புன்சிரிப்பு .
சிறுநணி விரைவாக .
சிறுநனி சிறிதுபொழுது ; விரைவாக .
சிறுநாக்கு உண்ணாக்கு .
சிறுநீர் மூத்திரம் .
சிறுநுண்மை அம்பெய்தற்குரிய நால்வகை இலக்குகளுள் மிகவும் சிறியதான இலக்கு .
சிறுநெறி அரிய வழி ; தீய வழி .
சிறுநோக்கு மதிப்பற்ற பார்வை .
சிறுப்பம் இளமை .
சிறுப்பனை இழிவு ; வறுமை ; அவமரியாதை ; தொந்தரவு .
சிறுப்பித்தல் சிறுகப்பண்ணுதல் ; மரியாதைக் குறைவு காட்டுதல் .
சிறுப்பிள்ளை வேலையாள் .
சிறுப்பெரியார் சிறுமைக் குணங்கொண்டு பெரியார்போலத் தோன்றுபவர் .
சிறுபசி இளம்பசி .
சிறுபஞ்சமூலம் கண்டங்கத்தரி , சிறுமல்லிகை , பெருமல்லிகை , சிறுவழுதுணை , சிறுநெருஞ்சி இவற்றின் வேர்கள் சேர்ந்த மருந்து ; ஒருநூல் .
சிறுபட்டி கட்டுக்கடங்காத இளைஞன் .
சிறுபதம் வழி ; தண்ணீராகிய உணவு .
சிறுபயறு பச்சைப்பயறு ; பனிப்பயறு .
சிறுபயிர் குறுகிய காலத்தில் விளையும் பயிர் ; புன்செய்ப் பயிர் .
சிறுபருப்பு பச்சைப்பயற்றம்பருப்பு .
சிறுபறை கைம்மேளம் , தோற்கருவிவகை ; காண்க : சிறுபறைப்பருவம் .
சிறுபறைப்பருவம் தலைவன் சிறுபறை வைத்துக்கொண்டு அடித்து விளையாடும் பருவத்தைச் சிறப்பிக்கும் ஆண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பகுதி .
சிறுபான்மை சிலவிடங்களில் ; கொஞ்சம் ; அருகிவழங்கும் வழக்கு .
சிறுபிராயம் இளம்பருவம் .
சிறுபிள்ளை இளம்பிள்ளை .
சிறுபுறம் பிடரி ; சிறுகொடை ; முதுகு .
சிறுபுள்ளடி ஒரு செடிவகை .
சிறுபூளை நடைவழியில் முளைக்கும் ஒரு பூண்டுவகை .
சிறுபெண் இளம்பெண் .
சிறுபொழுது நாளின் பிரிவாகிய பொழுதுகள் ; அவை : மாலை , இடையாமம் , விடியல் , காலை , நண்பகல் , எற்பாடு .
சிறுமகன் அறிவற்றவன் ; சிறுவன் ; இழிந்தவன் .
சிறுமட்டம் சிறு குதிரை ; சிற்றளவு ; சிறுவாழை மரம் ; யானைக்கன்று ; குள்ளமானவன்(ள்) .
சிறுமணி காராமணிவகை ; சதங்கை ; ஒரு நெல்வகை .
சிறுமல் தண்ணீர்விட்டான்கிழங்கு .
சிறுமலை குன்று , பொற்றை .
சிறுமாரோடம் செங்கருங்காலிமரம் .
சிறுமி இளம்பெண் ; மகள் .
சிறுமியம் சேறு .
சிறுமீன் அருந்ததி ; அயிரைமீன் .
சிறுமுத்தன் ஆண்பொம்மை .
சிறுமுதுக்குறைமை இளமையிற் பேரறிவுடைமை .
சிறுமுதுக்குறைவி இளம்பருவத்தே பேரறிவினையுடையவள் .
சிறுமுறி கைச்சீட்டு .
சிறுமூசை உலோகங்களை உருக்க உதவும் சிறிய மண்குகை .
சிறுமூலகம் பூண்டுவகை ; திப்பிலி .
சிறுமூலம் சிறுகிழங்குச்செடி ; திப்பிலி .
சிறுமை இழிவு ; கயமைத்தனம் , கீழ்மை ; இளமை ; நுண்மை ; எளிமை ; குறைபாடு ; வறுமை ; பஞ்சம் ; பிறர் மனத்தை வருத்துகை ; இளப்பம் ; குற்றம் ; நோய் ; துன்பம் ; மிக்க காமம் ; கயமை .
சிறுமைத்தனம் இளமை ; கயமைத்தனம் ; நுண்மை ; குறைபாடு ; வறுமை .
சிறுமைப்படுதல் வறுமைப்படுதல் ; எளிமைப்படுதல் ; இடைஞ்சற்படுதல் ; கீழ்நிலை அடைதல் .
சிறுமையர் கீழ்மக்கள் .
சிறுவதும் சிறிதும் .
சிறுவம் இளமை .
சிறுவயது காண்க : சிறுபிராயம் .