சிறுவயல் முதல் - சின்னாபின்னம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சிறுவயல் காண்க : சிறுசெய் .
சிறுவரை சிறிது நேரம் ; சிறுமூங்கில் ; அற்பம் .
சிறுவல் குழந்தை ; இளம்பருவம் ; தடை .
சிறுவழுதுணை கத்திரிச்செடிவகை ; கண்டங்கத்தரி .
சிறுவன் இளைஞன் ; சிறியன் ; மகன் ; சிறு புள்ளடிவகை .
சிறுவாடு ஜமீனுக்குரிய பண்ணைநிலங்கள் ; சில்வானம் , சிறுதேட்டு ; பற்றடைப்பு நிலம் .
சிறுவாள் கைவாள் .
சிறுவி மகள் .
சிறுவிடு கொள்ளுத் தானியம் .
சிறுவித்தம் சூதாட்டத்தில் பந்தயமாக வைத்த சிறுபொருள் .
சிறுவிரல் சுண்டுவிரல் .
சிறுவிலை பஞ்சகாலம் ; இளைத்துள்ளது ; விலைமிகுதி .
சிறுவிலைக்காலம் வறுமைக்காலம் , பஞ்சகாலம் .
சிறுவிலைநாள் வறுமைக்காலம் , பஞ்சகாலம் .
சிறுவீடு சிறிய இல்லம் ; அதிகாலையில் பால் கறக்குமுன் மாடுகளை மேயவிடுதல் ; சிறுமியர் கட்டியாடும் மணல்வீடு .
சிறுவெண்காக்கை கழுத்தில் சிறு வெண்மை நிறமுடைய காகம் .
சிறுவோர் சிறுபிள்ளைகள் .
சிறை காவல் ; காவலில் அடைக்கை ; சிறைச்சாலை ; அடிமைத்தனம் ; அடிமையாள் ; பெண்டாகச் சிறைபிடிக்கப்பட்ட இளம் பெண் ; அழகுள்ளவள் ; அணை ; நீர்நிலை ; இடம் ; பக்கம் ; கரை ; மதில் ; வரம்பு ; இறகு ; யாழ்நரம்புக் குற்றவகையுள் ஒன்று .
சிறைக்கணித்தல் புறக்கணித்தல் .
சிறைக்களம் காவற்கூடம் , சிறைச்சாலை .
சிறைக்கூடம் காவற்கூடம் , சிறைச்சாலை .
சிறைக்கோட்டம் காவற்கூடம் , சிறைச்சாலை .
சிறைகாவல் சிறையிலிட்டுக் காக்குங் காப்பு .
சிறைகொள்ளுதல் காவலில் வைக்கப் பிடித்துச் செல்லுதல் .
சிறைச்சாலை காண்க : சிறைக்கூடம் .
சிறைச்சோறு முப்பத்திரண்டு அறங்களுள் சிறைப்பட்டார்க்கு உணவளிக்குஞ் செயல் .
சிறைசெய்தல் சிறையில் வைத்தல் ; நீரைத்தடுத்தல் ; நீரைக் கட்டுதல் .
சிறைத்தல் சிறையில் வைத்தல் ; நீரைத்தடுத்தல் ; நீரைக் கட்டுதல் .
சிறைதல் நிறங்கெடுதல் .
சிறைநோய் சிறைத்துன்பம் .
சிறைப்படுதல் சிறையில் அடைபடுதல் ; தடைபடுதல் ; அகப்படுதல் ; மறக்கப்படுதல் .
சிறைப்பள்ளி காண்க : சிறைக்கூடம் .
சிறைப்பாடு சிறை ; தடை ; தவறி விழுந்த இடத்தில் பண்டங்கிடக்கை ; பக்கம் .
சிறைப்புறம் ஒதுக்கிடம் ; தோழி தலைவியர்க்குள் நிகழும் செய்திகளைத் தலைவன் மறைந்தறிதற்கு அனுகூலமாய்க் காவல் மனைப்புறமாயுள்ள இடம் ; வேலிப்புறம் ; சிறைச்சாலை .
சிறைபிடித்தல் அடிமையாக்குதல் ; மனைவியாகவேனும் காமக்கிழத்தியாகவேனும் கொள்ளுமாறு பெண்ணைச் சிறைப்படுத்திக் கொண்டுபோதல் .
சிறைமீட்டல் சிறையிலிருந்து விடுவித்தல் .
சிறைமீள்தல் சிறையினின்றும் நீங்குதல் .
சிறைமீளுதல் சிறையினின்றும் நீங்குதல் .
சிறையெடுத்தல் காண்க : சிறைபிடித்தல் ; பெண்ணைத் தன்வசத்தே சேர்த்தல் .
சிறைவன் காவற்பட்டவன் .
சிறைவீடு சிறையினின்றும் வெளிவிடுகை .
சிறைவைத்தல் காவலில் வைத்தல் .
சின் ஓர் அசைச்சொல் .
சின்மதி ஏழைப்புத்தி .
சின்மயம் அறிவுமயம் .
சின்மயன் அறிவுமயமாக உள்ள உயிர் .
சின்முத்திரை சுட்டுவிரல் நுனியைப் பெருவிரல் நுனியுடன் சேர்த்துக் காட்டும் ஞானமுத்திரை .
சின்மை சிறுமை , இழிவு ; குரலின் மென்மை .
சின்மொழி சில சொல் ; இழிவான சொல் .
சின்ன சிறிய ; இழிந்த ; இளைய .
சின்னகை புன்னகை .
சின்னச்சாதி கீழ்ச்சாதி .
சின்னஞ்சிறிய மிகச் சிறிய .
சின்னத்தட்டு பொற்கொல்லர் தராசின் தட்டு .
சின்னத்தனம் கயமைத்தனம் ; சிறுபிள்ளைத்தனம் .
சின்னத்துரை இளவரசர் .
சின்னது சிறியது .
சின்னப்பட்டம் பெரிய மடாதிபதிக்கு அடுத்த நிலையில் உள்ளவர் ; குருவின் வாரிசு .
சின்னப்படுத்தல் பங்கப்படுத்தல் , குறைப்படுத்தல் .
சின்னப்படுதல் பங்கப்படுதல் ; பழுதடைதல் , சிதைவடைதல் , பின்னமுறுதல் ; இகழ்ச்சியடைதல் .
சின்னப்புத்தி அற்பபுத்தி ; பிள்ளைப்புத்தி .
சின்னப்பூ நூறு , தொண்ணூறு , எழுபது , ஐம்பது , முப்பது இவற்றுள் ஓரெண்கொண்ட நேரிசை வெண்பாக்களால் அரசனது தசாங்கத்தைப் புகழ்ந்து கூறும் நூல்வகை ; விடுபூ ; கிள்ளுப்பூ .
சின்னபின்னம் கண்டதுண்டம் .
சின்னம் அடையாளம் ; பெண்குறி ; காளம் ; அற்பம் ; சிறியது ; முறம் ; மழைத்தூறல் ; இகழ்ச்சி ; முறிவுற்றது ; விடுபூ ; கிள்ளுப்பூ ; பொடி ; காசு ; வீரர்கள் போர்க்காலத்தில் தம்வாயில் இட்டுக்கொள்ளும் பொன்தகடு ; சீந்திற்கொடி ; துண்டு .
சின்னம்படுதல் இகழ்ச்சியடைதல் .
சின்னம்மா தாயின் தங்கை ; தந்தையின் தம்பி மனைவி ; திருமகள் .
சின்னம்மை தாயின் தங்கை ; தந்தையின் தம்பி மனைவி ; அம்மைநோய்வகை .
சின்னமலர் விடுபூ .
சின்னமனிதன் கயமைத்தனமுள்ளவன் .
சின்னமுத்து அம்மைநோய்வகை .
சின்னமூதி அரசன் ஆணையைச் சின்னமூதிக் கொண்டு படைக்குச் சாற்றுவோன் .
சின்னமேளம் துருத்தி முதலிய வாத்தியங்களுடன் தாசிகள் பாடிக்கொண்டு ஆடுதற்குரிய சதிர்மேளம் .
சின்னல் பகட்டு .
சின்னன் சிற்றுயிர் ; சிறுபொருள் .
சின்னாபின்னம் காண்க : சின்னபின்னம் .