சும்பன் முதல் - சுயாதிபதி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சும்பன் மூடன் .
சும்பனம் இதழ் முதலியன சுவைக்கை ; முத்தமிடல் ; சப்புதல் .
சும்பித்தல் முத்தமிடுதல் ; சப்புதல் .
சும்பிதகரணம் புணர்ச்சிவகை .
சும்பிதம் காண்க : சும்பனம் .
சும்புதல் வாடிச் சுருங்குதல் .
சும்புள் கடப்பமரம் .
சும்புளித்தல் பேரொளி முதலியவற்றால் கண்கூசுதல் .
சும்மா தொழிலின்றி ; இயல்பாய் ; அமைதியாய் ; வறிதாக ; காரணமின்றி ; பயனின்றி ; கருத்தின்றி ; விளையாட்டாய் ; இலவசமாய் ; தடையின்றி ; அடிக்கடி .
சும்மாடு பாரத்தைத் தாங்குவதற்காகத் தலையில் வைக்கும சுமையடை ; தானியமாகக் கொடுக்கும் உரிமை .
சும்மாடுகோலுதல் துணியைத் தலைக்குச் சும்மாடாகச் சுற்றிக்கட்டுதல்
சும்மாது காண்க : சும்மா .
சும்மெனல் மூச்சுவிடுதற் குறிப்பு .
சும்மை சுமை ; தொகுதி ; நெற்போர் ; ஊர் ; நாடு ; ஆவிரைச்செடி ; ஒலி ; யாழ்நரம்பின் ஒசை .
சுமக்க மிகவும்
சுமங்கலம் பெரிதும் மங்கலமாயுள்ளது .
சுமங்கலி மங்கலியப் பெண் , கணவனுடன் வாழ்பவள் .
சுமங்கலை மங்கலியப் பெண் , கணவனுடன் வாழ்பவள் .
சுமங்கை வறட்சுண்டிச்செடி ; ஆடுதின்னாப் பாளை .
சுமடன் சுமப்பவன் ; அறிவில்லாதவன் ; கீழ்மகன் .
சுமடி அறிவிலாள் .
சுமடு காண்க : சும்மாடு ; சுமை .
சுமடை காண்க : சும்மாடு ; சுமை .
சுமத்தல் பாரமாதல் ; சார்தல் ; மிகுதல் : தாங்குதல் ; மேற்கொள்ளுதல் ; பணிதல் .
சுமத்தி மிகுதி ; விலையேற்றம் ; கெட்டி .
சுமத்துதல் பாரமேற்றுதல் ; உடன்படச் செய்தல் ; கடன் முதலியன பொறுக்கவைத்தல் ; குற்றம் முதலியன ஏற்றுதல் ;
சுமதலை பொறுப்பு ; விலை முதலியவற்றின் ஏற்றம் .
சுமதி பாரம் ; மிகுதி ; பொறுப்பு ; நல்லறிவு ; அறிஞன் ; தீர்த்தங்கரருள் ஒருவர் .
சுமந்த அதிகமான
சுமப்பு பாரம் , சுமை .
சுமம் பூ .
சுமரணம் சுரணை , உணர்த்தி , அறிவு ; நினைவு .
சுமரணை சுரணை , உணர்த்தி , அறிவு ; நினைவு .
சுமருதல் சுமக்குதல் .
சுமனசம் காண்க : சுமம் .
சுமனை சிவப்புப் பசு .
சுமார் ஏறக்குறைய ; மட்டம் .
சுமாரகம் நினைப்பு .
சுமாலி கள் ; ஓர் அரக்கன் .
சுமுகம் இன்முகம் .
சுமுகன் இன்முகமுள்ளவன் .
சுமுத்திரை சரியளவு ; சரியானது ; நேர்மை .
சுமேரு தேவர்க்கு இருப்பிடமான மேருமுடி .
சுமை சுமக்கை ; பாரம் ; தொகுதி ; ஓரங்குல மழை ; 60 படிகொண்ட ஓர் அளவை ; பொறுப்பு ; 180 தேங்காய்கொண்ட அளவு ; 270 கவளிகொண்ட வெற்றிலைக்கட்டு .
சுமைகாரன் மூட்டை தூக்குவோன் ; குடும்பபார மிக்கவன் .
சுமைகூலி மூட்டை தூக்குவதற்குக் கொடுக்குங் கூலி .
சுமைத்தயிர் ஆடைத்தயிர் , கட்டித்தயிர் .
சுமைதலை பொறுப்பு .
சுமைதாங்கி பொறுப்பாளி ; சுமையை இறக்கித் தலைப்பாரம் ஆற்றுதற்கு உதவியாக நிறுத்தப்பட்ட கற்கட்டு ; இதணம் .
சுமைதாங்கிபோடுதல் மகப்பெறாமல் கருப்பத்துடன் இறந்தவள்பொருட்டு அவள் வயிற்றுப் பாரத்தால் உண்டான வருத்தம் நீங்குமாறு சுமைதாங்கிக்கல் நாட்டுதல் .
சுமைதி பாரம் ; மிகுதி ; பொறுப்பு .
சுமையடை காண்க : சும்மாடு .
சுமையாள் மூட்டை தூக்குவோன் .
சுமையிறக்கி காண்க : சுமைதாங்கி
சுயகாரியதுரந்தரன் தன்னலம் மிக்கவன் .
சுயகாரியம் சொந்த வேலை ; தன்னலம் .
சுயங்கிருதானர்த்தம் தானாகவே விளைத்துக் கொள்ளுந் தீங்கு .
சுயசாதிமானம் தன் சாதியில் பற்றுவைத்தல் .
சுயஞ்சோதி இயற்கையொளி ; கடவுள் .
சுயநலம் தன்னலம் .
சுயபுத்தி இயற்கையறிவு , சொந்த அறிவு ; மயக்கமற்ற அறிவு .
சுயபோக்கு தன்மனப்போக்கு .
சுயம் சொந்தமானது ; சொந்தமான ; தானாகப் பாடிய பாட்டு ; கலப்பற்ற .
சுயம்பாகம் தானாகச் சமைத்துக்கொள்கை ; சத்திரம் முதலியவற்றில் கொடுக்கும் சமையற் பொருள்கள் .
சுயம்பாகி சமையற்காரன் ; சவர்க்காரம் .
சுயம்பாவித்தல் அகங்கரித்தல்
சுயம்பிரகாசம் காண்க : சுயஞ்சோதி .
சுயம்பு தானே தோன்றியது ; கடவுள் ; பிரமன் ; அருகன் ; இயற்கை ; தூயதான ; மடையன் .
சுயம்புமூர்த்தி தானாகத் தோன்றிய தெய்வத்திருமேனி .
சுயம்வரம் தன்னை விரும்பி வந்த அரசர் கூட்டத்தில் தலைவி தலைவனைத் தானே தேர்ந்து வரித்துக்கொள்ளுகை .
சுயமரம் தன்னை விரும்பி வந்த அரசர் கூட்டத்தில் தலைவி தலைவனைத் தானே தேர்ந்து வரித்துக்கொள்ளுகை .
சுயமாய் தானாக ; அடிக்கடி .
சுயவலது சொந்தத் திறமை .
சுயாதிபத்தியம் தன் இச்சைப்படி நடத்தும் ஆட்சி ; கோளின் தசையில் தனது ஆட்சி .
சுயாதிபதி தனியாட்சி செலுத்தபவன் .