சுயாதீனம் முதல் - சுராலை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சுயாதீனம் தன்வயமானது ; தன்விருப்பம் .
சுயாதீனன் தன் விருப்பம்போல் நடப்பவன் .
சுயார்ச்சிதம் சொந்த சம்பாத்தியம் .
சுயிரகம் தருப்பைப்புல்
சுயேச்சை தன்னிச்சை , தன்விருப்பம் , சுதந்தரம் .
சுயோகி கள் .
சுர்க்கி செங்கற்பொடி .
சுரக்கட்டி வயிற்றுக்கட்டி .
சுரகுரு தேவர்க்குத் தலைவனாகிய இந்திரன் ; தேவர்க்குக் குருவாகிய வியாழன் ; சோழர் குலத் தலைவன் .
சுரங்கப்பாதை தரைமட்டத்திற்கு அடியில் உள்ள பாதை .
சுரங்கம் நிலவறை ; கீழறுக்கும் அறை ; வீட்டில் நுழைவதற்குக் கள்வர் இடும் கன்னம் .
சுரங்கம்வைத்தல் பாறைகளை மருந்து வைத்து உடைத்தல் ; கீழறுத்தல் ; கன்னமிடுதல் ; வஞ்சகத்தால் தீங்கு விளைவித்தல் .
சுரங்கமறுத்தல் பாறைகளை மருந்து வைத்து உடைத்தல் ; கீழறுத்தல் ; கன்னமிடுதல் ; வஞ்சகத்தால் தீங்கு விளைவித்தல் .
சுரச்சதி ஓர் இசைவகை .
சுரசம் சூடு தோய்த்த மருந்துச் சாறு ; மதுரச்சாறு ; சிறு கிழங்குச் செடி ; துளசிச்செடி ; நொச்சி ; பாதரசம் ; அரத்தை .
சுரசனி இரவு .
சுரசி வெண்ணொச்சிமரம் .
சுரசுரத்தல் சருச்சரையாதல் .
சுரசுரப்பு சருச்சரையாக இருக்கை .
சுரசை சிற்றரத்தை .
சுரஞ்சனம் கமுகு .
சுரடி ஒரு பண்வகை .
சுரண்டி சுரண்டுங் கருவி ; தட்டிப் பறிப்பவன் ; சிறிது சிறிதாகப் பொருள் சேர்ப்பவன் ; சுரண்டின பொருள் .
சுரண்டுதல் நகம் முதலியவற்றால் பிராண்டுதல் ; நகம் அல்லது விரல் நுனியால் உடம்பைத் தீண்டிக் குறிப்பித்தல் ; சண்டைக்கு இழுத்தல் ; கவர்தல் ; செலவால் கரைத்தல் ; தூண்டிவிடுதல் ; விபசாரஞ் செய்தல் ; இரத்தல் .
சுரணை உணர்ச்சி ; அறிவு .
சுரத்தல் ஊறுதல் ; உடலில் நீர் முதலியன பெருகி வீங்குதல் ; நிறைதல் ; பால்முதலியன சுரத்தல் ; இடைவிடாது சொரிதல் ; மிகக் கொடுத்தல் .
சுரத்துய்த்தல் வீரர் தாம் கவர்ந்த ஆநிரையை அரிய வழியில் நோவு படாதபடி நடத்திக் கொண்டு செல்லுதலைக் கூறும் புறத்துறை .
சுரதநீர் காமநீர் .
சுரதநூல் காமநூல் .
சுரதம் புணர்ச்சி ; இனிமை ; சாறு ; பாதரசம் .
சுரதமங்கை பொதுமகள் .
சுரதரு தேவதரு , கற்பகத்தரு .
சுரதல¦லை புணர்ச்சி .
சுரதாக்கு அரத்தைச்செடி .
சுரநடை பாலைநிலத்தில் தலைவியை இழந்து நின்ற தலைவன் நிலையைக் கூறும் புறத்துறை .
சுரநதி தேவநதியாகிய கங்கை .
சுரப்பட்டைச்சத்து கொய்னா .
சுரப்பு சுரத்தல் ; ஊற்று ; வீக்கம் .
சுரப்புவிடுதல் கறத்தற்கு ஏற்ப மடியினின்று பால் சுரக்கத் தொடங்குதல் ; கன்றைவிட்டுப் பால் சுரக்கச் செய்தல் .
சுரபதம் தேவருலகம் .
சுரபதி தேவர் தலைவனான இந்திரன் .
சுரபி காமதேனு ; வெள்ளைப்பசு ; மணம் ; காண்க : தேட்கொடுக்கி ; துளசி ; மல்லிகை ; சாதிக்காய் ; பிரமிப்பூடு .
சுரபிபத்திரை பெருநாவல் .
சுரபு இலவம்பிசின் ; ஒரு பஞ்சுமரவகை .
சுரபுன்னாகம் புன்னைமரவகை .
சுரபுன்னை புன்னைமரவகை .
சுரம் பாலைநிலம் ; காய்ச்சல் ; காடு ; அருநெறி ; வழி ; இசைவகை ; ஏழிசை ; உயிரெழுத்து : குரல் : கள் ; உப்பு ; நகத்தின் அடி ; உட்டுளை .
சுரம்பாடுதல் எடுத்துக்கொண்ட பண்ணுக்கேற்ற சுரவரிசைகளாலே கீர்த்தனம் முதலியன பாடுதல் .
சுரம்போக்கு தலைவனுடன் தலைவி பாலை வழியிற் செல்லும் உடன்போக்குத் துறை .
சுரம்போடுதல் இசைப்பாடலுக்கு ஏற்ப இசை அமைத்தல் .
சுரம்விழுதல் குரல் தாழ்தல் ; செருக்குக் குறைதல் .
சுரமகளிர் தெய்வப் பெண்டிர் .
சுரமண்டலம் ஒரு வாத்தியவகை .
சுரமதி சிலந்தி ; நச்சுச் சிலந்திவகை ; மேகப் புண்வகை .
சுரமலி காண்க : செந்தீக்கரப்பான் ; கொப்புளம் .
சுரமலிகம் காண்க : செந்தீக்கரப்பான் ; கொப்புளம் .
சுரமாந்தம் குழுந்தைகட்கு வரும் மாந்தநோய்வகை .
சுரமேற்றுதல் அடியோடு ஒழித்தல் ; தூண்டுதல் ; காட்டில் துரத்துதல் .
சுரர் தேவர் .
சுரர்குருநாள் பூசநாள் .
சுரர்பகைவர் தேவருக்குப் பகைவராகிய அசுரர் .
சுரர்பதி இந்திரன் ; தேவருலகம் .
சுரரிடம் தேவருலகம் , துறக்கம் .
சுரலோகம் தேவருலகம் , துறக்கம் .
சுரவன்பாக்கு உயர்ந்த பாக்குவகை .
சுரழ் இலவம்பிசின் .
சுரளிகை பாலைமரம் .
சுரன் அறிஞன் ; சூரியன் ; காடு ; சிறுமீன்வகை .
சுரா கள் .
சுராகரம் கள்ளுக்கு இருப்பிடமான தென்னை .
சுராட்டு ஏகாதிபத்தியமுடைய இந்திரன் ; நான்கு அடியுற்ற செய்யுளில் இரண்டெழுத்து ஒரடியுள் மிக்குச் சீரொத்து வருவது ; 50 இலட்சத்துக்குமேல் ஒரு கோடிக்குக்கீழ் இறைவருவாயுடைய அரசன் .
சுராதிராசன் காண்க : சுரகுரு .
சுராரி அசுரர் .
சுராலயம் தேவர் வாழிடமாகிய மேரு .
சுராலை சாம்பிராணி .