சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| சுராளம் | பெருமித நடை . |
| சுரி | சுழற்சி ; சுழி ; எருதின் நெற்றிவெள்ளைச் சுழி ; அணி உறுப்புவகை ; நரி ; சேறு ; துளை ; ஏட்டுத் துளை ; ஏட்டில் துளையிடும் கருவி . |
| சுரிகை | கத்தி ; உடைவாள் ; கவசம் . |
| சுரித்தல் | சுழிதல் ; சுருளுதல் ; திரைதல் ; வகை வாய்க் கிடத்தல் ; சேற்றிற் புதைத்தல் ; வற்றுதல் ; சுருங்குதல் ; மனஞ்சுழலுதல் ; சேறாதல் ; உள்ளொடுக்குதல் ; சுளித்தல் ; துளைவிடுதல் . |
| சுரிதகம் | கலிப்பா உறுப்பு ஆறனுள் இறுதி உறுப்பு ; கூத்தில் சொல்நிகழும் வகையில் வரும் எட்டடிப் பாட்டு ; ஒரு தலையணிவகை . |
| சுரிதம் | கலக்கப்பட்டது ; வெட்டப்பட்டது . |
| சுரிதல் | சுழிதல் ; சுருளுதல் ; மடிப்புவிழுதல் ; கடைகுழலுதல் . |
| சுரிப்புறம் | சங்கு ; நத்தை ; ஒலை ஏட்டின் துளையுள்ள பக்கம் . |
| சுரிபோடுதல் | தமரிடுதல் . |
| சுரிமண் | புதைமணல் ; சேறு . |
| சுரிமுகம் | சுரிந்த முகமுடைய சங்கு ; நத்தை . |
| சுரியல் | வளைவு ; சுருண்ட மயிர் ; மயிர் ; பெண் மயிர் . |
| சுரியாணி | முறுக்காணி . |
| சுரியூசி | பனையேட்டில் துளையிடுங் கருவி . |
| சுரீரெனல் | காய்ந்த இரும்பில் நீர் சுண்டும் போது உண்டாகும் ஒலிக்குறிப்பு ; தேள் கொட்டுதல் முதலியவற்றால் உண்டாகும் வலிக்குறிப்பு . |
| சுருக்க | சுருக்கமாக ; விரைவாக . |
| சுருக்கம் | ஆடை முதலியவற்றின் சுருக்கு ; சிறுமை ; வறுமை ; இவறல் . |
| சுருக்களஞ்சி | குழைச்சு ; கண்ணி ; கட்டு . |
| சுருக்காங்கி | குழைச்சு ; கண்ணி ; கட்டு . |
| சுருக்கி | தொட்டாற்சுருங்கி ; சிறுகீரை ; ஆமை . |
| சுருக்கிடுதல் | சுருக்குப்போடுதல் ; சுருக்கில் மாட்டுதல் ; காண்க : சுருக்குக்கொடுத்தல் . |
| சுருக்கிப்பிடித்தல் | செலவு முதலியன குறைத்தல் ; வேலை முதலியவற்றைக் குறைத்து முடித்தல் . |
| சுருக்கு | சுருங்குகை ; ஆடை முதலியவற்றின் மடிப்பு ; குழைச்சு ; கண்ணி ; கட்டு ; குறைவு ; சுருக்கம் ; கடும்பற்றுள்ளம் ; விரைவு ; அக்கறை ; சுரணை ; காண்க : ஒட்டணி ; அடி ; வேள்வியில் உதவும் நெய்த்துடுப்பு ; பூமாலைவகை ; வில்வம் . |
| சுருக்குக்கஞ்சிகை | வேண்டியபோது சுருக்கிக் கொள்ளுதற்குரிய திரை . |
| சுருக்குக்கொடுத்தல் | காண்க : சுருக்கேற்றுதல் ; அடிகொடுத்தல் ; கண்டிப்புக் காட்டுதல் . |
| சுருக்குதல் | குறைத்தல் ; உள்ளிழுத்தல் ; ஆடை முதலியன சுருக்குதல் ; குடை முதலியன ஒடுக்குதல் ; வலை ; பை முதலியன சுருக்குதல் ; முலாம் பூசுதல் ; ஒலை முதலியன அணிதல் . |
| சுருக்குப்பை | வாயைச் சுருக்கக்கூடிய தையற் பை . |
| சுருக்குப்போட்டுக்கொள்ளுதல் | கழுத்தில் உருவுகயிறிட்டுத் தற்கொலை புரிந்துகொள்ளுதல் . |
| சுருக்குவலை | ஒரு வலைவகை . |
| சுருக்குவழி | குறுக்குப்பாதை ; கணக்குத் தீர்வதற்கான எளிய முறை . |
| சுருக்குவார் | விலங்குகளைப் பிடித்தற்குரிய கருவிவகை . |
| சுருக்குவிழுதல் | கயிறு முதலியவற்றில் முடிச்சு விழுகை ; உடலில் மடிப்பு விழுகை ; மோசத்துக்குள்ளாதல் . |
| சுருக்குவைத்தல் | கண்ணிவைத்தல் ; செருக்கை ஒடுக்க வழிதேடுதல் . |
| சுருக்கேற்றுதல் | உலோகங்களைத் தூய்மை செய்யும்போது மருந்துநீர் தெளித்தல் . |
| சுருக்கை | பூமாலைவகை ; வில்வம் . |
| சுருங்கச்சொல்லணி | ஓர் அணிவகை . |
| சுருங்கச்சொல்லல் | நூல் அழகினுள் ஒன்றான சுருக்கமாகக் கூறுதல் . |
| சுருங்கப்பிடித்தல் | குறைத்தல் . |
| சுருங்கல் | சுருங்கினது ; கோட்டையின் கள்ளவழி ; பூமாலைவகை ; நுழைவாயில் ; மடிப்பு . |
| சுருங்கில் | சிறுவீடு . |
| சுருங்கு | சலதாரை . |
| சுருங்குதல் | சிறுகுதல் ; ஒடுங்குதல் ; சுருக்கமாதல் ; உள்ளடங்குதல் ; ஒழுக்கம் தவறுதல் ; ஆடை முதலியன சுருக்கம் கொள்ளுதல் . |
| சுருங்கை | நீர் செல்லுதற்கு நிலத்துள் கற்களால் அமைக்கப்படும் கரந்துபடுத்த வழி ; கோட்டையின் கள்ளவழி ; நுழைவாயில் ; மாளிகையின் சாளரம் . |
| சுருசுருத்தல் | ஒலித்தல் ; ஊக்கமாதல் . |
| சுருசுரெனல் | ஒலித்தற்குறிப்பு ; வேகத்தோடு தீப்பற்றுதற்குறிப்பு ; உடம்பு சுடுதற்குறிப்பு . |
| சுருட்கொண்டை | மயிர்முடிவகை . |
| சுருட்கொள்ளுதல் | சுருண்டுவிழுதல் . |
| சுருட்டி | ஆலவட்டம் ; ஒரு பண்வகை ; எடுபிடிவகை ; பட்டுச்சீலைச் சுருட்டு ; காண்க : மயிர்சிகைப்பூண்டு . |
| சுருட்டிக்கொள்ளுதல் | சூழ்ச்சியாய்க் கைப்பற்றுதல் ; ஆடை , பாய் முதலியவற்றைச் சுருட்டி வைத்துக்கொள்ளல் . |
| சுருட்டிப்பிடித்தல் | நோய் முதலியன உடலை மெலிவித்தல் ; நோவுண்டாம்படி பசியால் குடல் சுருட்டப்படுதல் ; ஆடை முதலியவற்றைச் சுருட்டிப் பிடித்தல் . |
| சுருட்டிமடக்குதல் | வாதம் முதலியவற்றில் பிறரைக் கீழ்ப்படுத்துதல் ; சூழ்ச்சியாய்ப் பறித்தல் . |
| சுருட்டியடித்தல் | சுழற்றித் தள்ளுதல் ; வாதம் முதலியவற்றில் பிறரைக் கீழ்ப்படுத்துதல் . |
| சுருட்டு | சுருட்டுகை ; சுருள் ; புகையிலைச்சுருள் ; தந்திரம் ; உயர்ந்த பட்டுவகை . |
| சுருட்டுக்குடித்தல் | சுருட்டுப் புகையை உட்கொள்ளுதல் . |
| சுருட்டுதல் | சுருளச்செய்தல் ; கவர்தல் . |
| சுருட்டுப்பட்டு | உயர்ந்த பட்டுவகை . |
| சுருட்டை | சுருண்ட மயிர் ; சுருட்டை மயிருள்ள பிள்ளை ; ஒரு பாம்புவகை ; மிளகாய்ச் செடியில் காணும் இலைநோய்வகை . |
| சுருண்டுபோதல் | வாடியொடுங்குதல் ; இறத்தல் . |
| சுருணி | யானைத்தோட்டி . |
| சுருணை | சுருட்டி வைத்த துணிமுதலிய பொருள் ; கணக்கெழுதப்பட்ட ஒலைச்சுருள் ; சாணிச் சுருணை ; தீப்பற்றுதற்குரிய பந்தம் ; பூண் ; பந்து ; வைக்கோற் சுருள் ; கட்டட வளைவுவகை . |
| சுருதஞானம் | கேள்வியால் உண்டாகும் அறிவு . |
| சுருதம் | காதாற் கேட்டது : எழுதாக்கிளவியாகிய வேதம் ; வரலாறு . |
| சுருதி | காது ; சுதி ; ஒலி ; எழுதா மறை ; இசைச் சுரத்திற்கு ஆதாரமான ஒலி ; இருபத்திரண்டு வகைப்பட்ட இசைச்சுரம் ; புகழ் ; அசரீரி வாக்கு ; பொய்ச் செய்தி ; வேதசுரம் . |
| சுருதிகூட்டுதல் | வாத்திய நரம்புகளின் ஒலிகள் ஒத்திருக்குமாறு அமைத்தல் . |
| சுருதிகொடுத்தல் | இசைக்கு ஒத்த துணை ஒலி எழுப்புதல் . |
| சுருதிசேர்த்தல் | காண்க : சுருதிகூட்டுதல் . |
| சுருதியான் | வேதத்திற்குரிய பிரமன் ; வேதத்தால் அறியப்படும் கடவுள் . |
| சுரும்பர் | வண்டு . |
| சுரும்பாவன் | வண்டாகிய வில்நாணை உடைய மன்மதன் . |
| சுரும்பாயன் | வண்டாகிய வில்நாணை உடைய மன்மதன் . |
| சுரும்பித்தல் | ஒலித்தல் . |
| சுரும்பு | வண்டு ; ஆண்வண்டு ; மலை . |
| சுருவம் | வடிவம் ; தன்மை ; வேள்விக்குரிய நெய்த்துடுப்பு ; அகப்பைவகை . |
| சுருவை | வேள்விக்குரிய நெய்த்துடுப்பு . |
| சுருள் | வெற்றிலைச் சுருள் ; சுருளுகை ; சுருண்ட பொருள் ; கட்டு ; ஐவகைக் கூந்தல் முடிகளுள் ஒன்று ; மகளிர் காதணிவகை ; ஒலைச்சுருளின் மடிப்பு ; திருமணத்தில் மணமக்களுக்குத் தாம்பூலத்துடன் கொடுக்கும் பரிசு ; நாளம் . |
|
|
|