சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| சுருள்வைத்தல் | மனமக்களுக்குத் தாம்பூலத்துடன் பரிசிற்பொருள் அளித்தல் . |
| சுருளமுது | தாம்பூலம் . |
| சுருளல் | சுருளுதல் ; மயிர் முதலியவற்றின் சுருள் . |
| சுருளவாட்டுதல் | மருந்து முதலியவற்றுக்காகப் பச்சிலை முதலியவற்றை வாட்டுதல் ; வருந்த வேலை வாங்குதல் . |
| சுருளி | தொழுகண்ணிச்செடி ; இலங்கை மரவகை . |
| சுருளுதல் | சுருளாதல் ; சுருங்குதல் ; சோர்தல் ; துன்பத்திற்குள்ளாதல் . |
| சுருளை | சுருள் ; குருத்து ; காதணிவகை . |
| சுரூபம் | நல்லுருவம் ; வடிவம் ; தன்மை . |
| சுரூபவதி | அழகி . |
| சுரூபி | அழகுள்ளவன்(ள்) |
| சுரேசன் | இந்திரன் ; முருகன் . |
| சுரேசுவரி | உமை ; தேவகங்கை ; முசுமுசுக்கை . |
| சுரேந்திரன் | இந்திரன் |
| சுரை | சுரைக்கொடி ; பசு முதலியவற்றின் மடி ; கறவைப் பசு ; கள் ; தேன் ; குழிந்த இடம் ; உட்டுளை ; மூங்கிற்குழாய் ; திரிக்குழாய் ; திருகாணியைச் செலுத்துஞ்சிறுகுழாய் ; மூட்டுவாய் ; அம்புத்தலை ; பூண் ; கூரான தோண்டு பாரைவகை . |
| சுரைக்கந்தகம் | ஒரு கந்தகவகை . |
| சுரைக்குடம் | சுரைக்காயால் அமைந்த குடம் . |
| சுரைக்குடுக்கை | சுரைக்காய்க் குப்பி , உலர்ந்த சுரைக்காய் . |
| சுரைப்பழம் | சுரையின் பழம் ; பயனற்றவன் . |
| சுரோணி | நிதம்பம் . |
| சுரோணிதம் | குருதி ; மகளிர் தீட்டு ; சுக்கிலத்தோடு சேர்ந்து குழந்தை உண்டாகக் காரணமாகும் மகளிர் இரத்தம் ; சிவப்பு . |
| சுரோத்தமன் | சூரியன் . |
| சுரோத்திரம் | காது ; கேள்வி . |
| சுரோத்திரியம் | வேதமோதுவோர்க்கு விடப்பட்ட இறையிலி நிலம் ; அரசாங்கவூழியஞ் செய்தவர்க்கு விடப்பட்ட வரியில்லா நிலம் . |
| சுரோதா | கேட்கிறவன் . |
| சுல்கம் | மகள்கொள்ள அளிக்கும் பரிசம் ; பந்தயப் பொருள் ; விலைப்பொருள் . |
| சுல்லம் | கயிறு ; தாமிரம் . |
| சுல்லி | அடுப்பு ; மடைப்பள்ளி . |
| சுல்லு | வெள்ளி . |
| சுல்வம் | தாமிரம் ; சிறங்கை ; சிறுமை . |
| சுலபம் | எளிமை ; சிறுமை ; மலிவு . |
| சுலவுதல் | சுழலுதல் ; சுழற்றுதல் ; சூழ்தல் ; சுற்றுதல் . |
| சுலனன் | நெருப்பு |
| சுலாவு | காற்று . |
| சுலாவுதண்ணீர் | வயலில் தேங்கிய நீர் . |
| சுலாவுதல் | காண்க : சுலவுதல் . |
| சுலாவுரொட்டி | நன்கு அரைக்கப்பட்ட கோதுமைமாவைக் கொண்டு சுடும் ரொட்டி . |
| சுலு | எளிது ; தாமிரம் . |
| சுலுகம் | சிறங்கை ; சேறு . |
| சுலுப்பு | மரக்கலம் . |
| சுலோகம் | புகழ் ; பழமொழி ; சொல்மாலை ; வடமொழிச் செய்யுள் . |
| சுலோகி | கள் . |
| சுலோசனம் | அழகிய கண் ; மூக்குக் கண்ணாடி . |
| சுலோபம் | எளிது ; இழிந்தது ; எறும்பு ; பழமொழி . |
| சுவ | தன்னுடைய . |
| சுவகதபேதம் | உறுப்புக்கும் உறுப்பிக்கும் உள்ள வேற்றுமை . |
| சுவகதம் | தனக்குள் பேசுகை ; உறுப்புக்கும் உறுப்பிக்கும் உள்ள வேற்றுமை . |
| சுவச்சம் | தெளிவு ; தூய்மை ; நலம் ; நல்லெண்ணெய் ; கவலையின்மை . |
| சுவசம் | தன்வயத்தில் உள்ளது . |
| சுவட்டவர் | காடையைப் பழக்கிப் போர் மூட்டுவோர் . |
| சுவட்டிலக்கம் | நெல் இலக்கம் . |
| சுவடன் | சுவைஞன் . |
| சுவடி | ஏட்டுப்புத்தகம் புத்தகம் ; பத்திரத் தொகுதி . |
| சுவடிஎழுதுதல் | எழுத்துகளை எழுதிப் பழகுதல் . |
| சுவடிசேர்த்தல் | பிள்ளைகள் படிக்க ஒலைச் சுவடி சேர்த்தல் . |
| சுவடித்தல் | தின்னுதல் ; ஒப்பனைசெய்தல் . |
| சுவடியைக்கட்டுதல் | ஒலைச்சுவடியைக் கட்டி வைத்தல் ; படிப்பை நிறுத்துதல் ; பேச்சு முதலியவற்றை நிறுத்துதல் . |
| சுவடு | தழும்பு ; அடையாளம் ; அடித்தடம் ; அடிச்சுவட்டின் ஒலி ; அங்கவடி ; தூய்மையின்மை ; ஒன்றைப் பதித்தலால் ஏற்படும் குறி ; ஆற்றல் ; பழக்கம் ; வழி ; வச்சிராங்கி ; நெல் இலக்கம் ; 360 நெற்கொண்ட அளவு ; கயிறு ; சுவை . |
| சுவண்டு | பொருத்தம் . |
| சுவணகாரகன் | காண்க ; சவன்னகாரன் . |
| சுவணம் | பொன் ; உலோகக் கட்டி ; கருடன் ; கழுகு . |
| சுவத்தன் | உடல்நலமுள்ளவன் ; மனக்கவலையின்றி இருப்போன் . |
| சுவத்திகம் | மங்கலவடையாளம் ; சுவத்திவாசனம் ; நான்கு விரலும் தம்முள் ஒட்டி நிமிரப் பெருவிரல் குஞ்சித்து நிற்கும் பதாகைக் கை இரண்டனையும் மணிக்கட்டில் ஏற்றிவைக்கும் இணைக்கைவகை . |
| சுவத்திகாசனம் | ஒன்பதுவகை இருக்கைகளுள் கால்களைக் குறுக்கிட்டு வைத்துக்கொண்டு உடல் நிமிர அமரும் இருக்கைவகை . |
| சுவதந்திரம் | காண்க : சுதந்தரம் . |
| சுவப்பிரம் | வளை ; நரகம் . |
| சுவம் | பறவையலகு ; மூஞ்சூறு ; தேவலோகம் ; சொந்தமானது ; உண்மை ; நன்மை . |
| சுவர் | மதில் ; தேரின் உறுப்பு ; தேவலோகம் . |
| சுவர்க்கணம் | காண்க : இந்திரகணம் . |
| சுவர்க்கம் | துறக்கம் , தேவலோகம் ; இன்பம் ; முலை . |
| சுவர்க்கர் | தேவர் . |
| சுவர்க்கவாசல் ஏகாதசி | மார்கழி மாதத்து வளர்பிறையில் பதினோராம் திதி . |
| சுவர்க்கன் | தேவலோகத் தலைவனான இந்திரன் . |
| சுவர்க்கால் | சுவரடி ; சுவர்மேற் கட்டும் நீர்க்கால் |
| சுவர்க்கோழி | காண்க : சிள்வண்டு . |
| சுவர்ணபூமி | அண்டத்தின் வரம்பையொட்டியுள்ள கடைசிப் பூகண்டம் ; துறக்கம் ; பர்மா நாடு . |
|
|
|