சுவர்ணம் முதல் - சுவேதகுசுமம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சுவர்ணம் பொன் ; நாணயம் .
சுவர்ணாங்கி நாற்பத்தேழாவது மேளகர்த்தா .
சுவர்தாங்கி அணைசுவர் .
சுவர்மேல்பூனை சுவரின்மீதுள்ள பூனை ; ஈரடியாய் இருப்பவன் ; இதுவோ அதுவோ என இரண்டுக்குற்ற நிலை .
சுவர்யோனி தேவர் பிறப்பு .
சுவரகழ்கருவி கன்னக்கோல் .
சுவரணை காண்க : சுரணை .
சுவரம் இசைச்சுரம் ; காய்ச்சல் .
சுவரறை நிலைப்பேழை , அலமாரி .
சுவரிதம் நலிதலோசை .
சுவரூபம் தன் இயல்பு ; அரசமரபு .
சுவரொட்டி விளம்பரத் தட்டி ; பிறரை ஒட்டியிருக்கும் குணம் உடையவர் ; சுவரில் ஒட்டப்படும் விளம்பரக் காகிதம் ; ஒற்றுக்கேட்பவன் ; சுவரில் மாட்டும் விளக்கு ; சுவர்முள்ளங்கிப் பூடு ; சுவரில் அடிக்கும் ஆட்டின் ஈரல் ; அணை சுவர் .
சுவல் பிடரி ; தோட்கட்டு ; முதுகு ; குதிரையின் கழுத்துமயிர் ; மேடு ; தொல்லை .
சுவல்வரி முதுகில் கோடுள்ள அணில் .
சுவலை அரசமரம் .
சுவவு பறவையின் அலகு ; மூஞ்சூறு ; துறக்கம் .
சுவற்றுதல் வற்றச் செய்தல் ; முற்றும் அழித்தல் .
சுவறுதல் வற்றுதல் ; உறிஞ்சப்படுதல் ; காய்தல் ; ஊறுதல் .
சுவன்னகாரன் பொற்கொல்லன் , தட்டான் .
சுவனம் கனவு .
சுவா நாய் .
சுவாகதம் வரவேற்பு மொழி ; நல்வரவு ; கிளி .
சுவாகா ஆகுதி செய்யும்போது தேவதையின் பெயர்க்குப்பின் கூறும் மொழி ; அக்கினி தேவன் மனைவி .
சுவாசக்குத்து மூச்சுநோய்வகை ; மூச்சுப்பையின் மூடுதோலில் உண்டாகும் நோய்வகை .
சுவாசக்குழல் மூச்சுக்குழாய் .
சுவாசகம் பேராமுட்டிக்கொடி ; எட்டி ; உவர்மண் ; இன்மொழி பேசும் கிளி .
சுவாசகாசம் ஈளைநோய் .
சுவாசகோசம் மூச்சுப்பை , நுரையீரல் .
சுவாசப்பை மூச்சுப்பை , நுரையீரல் .
சுவாசம் உயிர்ப்பு ; நல்லிருப்பிடம் ; நறுமணம் ; சவட்டுமண் .
சுவாசம்வாங்குதல் மரணமூச்சு வாங்குகை ; மூச்சை இழுத்துப் பின் வெளிவிடுதல் ; மேல் மூச்சு விடுதல் .
சுவாசித்தல் மூச்சுவிடுதல் .
சுவாத்தியம் மனநிறைவு ; இன்பம் .
சுவாத்தியாயம் தானாகக் கற்ற கல்வி .
சுவாதம் உயிர்ப்பு .
சுவாதி சோதிநாள் .
சுவாதிட்டானம் ஆறாதாரத்துள் ஒன்று , மூலாதாரத்துக்கும் கொப்பூழ்க்கும் இடையேயுள்ள இடம் .
சுவாதீனம் உரிமை ; தன்வயமானது ; தன்விருப்பம் .
சுவாது சுவை ; இனிமை ; காண்க : ஆடாதோடை .
சுவாந்தம் மணம் .
சுவாபம் இயல்பு .
சுவாபாவிகம் இயல்பாயுள்ளது .
சுவாமி கடவுள் ; முருகன் ; தலைவன் ; குரு ; மூத்தோன் ; ஒரு மரியாதைச் சொல் ; பொன் .
சுவாமிநாதன் சிவபெருமானுக்குக் குருவான முருகக்கடவுள் .
சுவாமியார் துறவி .
சுவாய் கப்பலின் ஒரு கயிறு .
சுவாய்ப்பற்றி பாய்மரக் கயிறுகட்டுங் கட்டை .
சுவாயம்புவம் தானாகத் தோன்றியது ; சிவாகமத்துள் ஒன்று .
சுவார்ச்சிதம் காண்க : சுயார்ச்சிதம் .
சுவாரசம் சுவையானது ; விளாம்பட்டை .
சுவாரசியம் சுவையானது ; விளாம்பட்டை .
சுவாரி காண்க : சவாரி ; கப்பலின் பின்னணியம் .
சுவாலித்தல் சுடர்விட்டெரிதல்
சுவாலை சுடர் , கனலொழுங்கு .
சுவாவி உண்மையானவன் .
சுவானசக்கரம் நாய் கடியாது விலக்குவதாகக் கருதப்படும் சக்கரம் .
சுவானம் நாய் ; நாயுருவி .
சுவானுபவம் தன் அனுபவம் .
சுவானுபூதி தன் அனுபவம் .
சுவானுபூதிகம் தன் அனுபவத்தால் உண்டாகும் அறிவு .
சுவி கல்லாலமரம் ; இத்திமரம் ; துளசிச்செடி .
சுவிகை கள் ; கச்சோலம் .
சுவிசாலம் மிகு அகலம் .
சுவிசேடகன் நற்செய்தி சொல்லுவோன் .
சுவீகரித்தல் ஏற்றுக்கொள்ளுதல் தத்தெடுத்தல் ; உட்கொள்ளுதல் .
சுவிகாரபுத்திரன் தத்துப்பிள்ளை .
சுவீகாரம் ஏற்பு ; தத்தெடுத்தல் .
சுவீரியம் இலந்தைக்கனி .
சுவுகம் மோவாய்க்கட்டை .
சுவேகம் உறை .
சுவேச்சை தன்னிச்சை ; தன்விருப்பம் .
சுவேதகம் விளாம்பழம் .
சுவேதகாண்டம் வஞ்சிக்கொடி ; சீந்திற்கொடி .
சுவேதகாரி வியர்வை பிறப்பிக்கும் மருந்து .
சுவேதகுசுமம் காண்க : வெள்ளெருக்கு .