சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| சுவேதசம் | வியர்வையில் தோன்றும் உயிர் . |
| சுவேதசாரம் | நாணற்புல் . |
| சுவேதநாதம் | விந்து . |
| சுவேதம் | வெண்மை ; பாதரசம் ; வெள்ளி ; வியர்வை ; நீர்வஞ்சி ; வஞ்சிக்கொடி ; மாவிலிங்கம் . |
| சுவேதமூலம் | சாரணைப்பூடு . |
| சுவேதமூலி | தொட்டாற்சுருங்கி . |
| சுவேதவராககற்பம் | திருமால் பன்றியாகத் தோன்றிய காலம் . |
| சுவேதனை | தன்னறிவு . |
| சுவேதாம்பரர் | வெள்ளாடை தரித்த சமணமுனிவர் . |
| சுவை | ஐம்புலன்களுள் நாவின் உணர்வு , உருசி ; இன்பம் ; இரசம் ; இனிமை ; கவிதையின் இரசம் ; சித்திரைநாள் . |
| சுவைகாட்டுதல் | சுவைதருதல் ; ஆசை காட்டுதல் . |
| சுவைத்தல் | உருசிபார்த்தல் ; உண்ணுதல் ; முத்தமிடுதல் ; இன்பம் நுகர்தல் ; உருசியாதல் ; முலையுண்ணல் . |
| சுவைமை | உருசி . |
| சுவையணி | உள்நிகழுந் தன்மை வெளிப்பட்டு விளங்க எண்வகை மெய்ப்பாட்டினாலும் நடக்கும் அணிவகை . |
| சுழங்குறுதல் | சுழலுதல் . |
| சுழல் | சுழற்சி ; வளைவு ; சுழிநீர் ; சுழல்காற்று ; காற்றாடி ; பீலிக்குடை ; ஏமாற்று ; சஞ்சலம் . |
| சுழல்கால் | சூறைக்காற்று . |
| சுழல்காற்று | சூறைக்காற்று . |
| சுழல்தண்ணீர் | சுழலோடுகூடிய நீர்ப்பெருக்கு . |
| சுழல்படை | வளைதடி . |
| சுழல்மாறித்தனம் | ஏமாற்று . |
| சுழல்மாறுதல் | திருடுதல் . |
| சுழல்வன | இயங்குதிணைப் பொருள்கள் . |
| சுழல்வு | சுழல்கை ; அலைகை ; மனக்கலக்கம் . |
| சுழலமாடுதல் | ஒன்றைப் பெறுதற்கு இடைவிடாது முயலுதல் ; வஞ்சகமாகக் கொள்ளுதல் ; அடிக்கடி போய் வணங்குதல் . |
| சுழலன் | ஏமாற்றுக்காரன் . |
| சுழலுதல் | உருளுதல் ; வட்டமாகச் சுற்றுதல் ; சுற்றுத்திரிதல் ; அலைவுபடுதல் ; சஞ்சலப்படுதல் ; சோர்தல் ; பொறி மயங்குதல் . |
| சுழலை | கொள்கலம் ; வஞ்சகம் . |
| சுழலையாடுதல் | அலக்கழித்தல் ; வீணாகச் செலவழித்தல் ; களைத்துப்போதல் . |
| சுழற்சி | சுழலுகை ; அலைகை ; மனக்கலக்கம் . |
| சுழற்றல் | கிறுகிறுப்பு . |
| சுழற்றி | சுழற்றுக்கருவியின் பிடி ; துளையிடுங் கருவி ; விசிறி ; கருவண்டு . |
| சுழற்றியடித்தல் | சுழன்றுவீசுதல் ; கொள்ளை நோய் வருதல் . |
| சுழற்று | சுழற்றுகை . |
| சுழற்றுதடி | சிலம்பத்தடி . |
| சுழற்றுதல் | சுழலச்செய்தல் ; சுழற்றியாட்டுதல் ; கிறுகிறுக்கச் செய்தல் . |
| சுழாரை | பொன்னாவிரைச்செடி . |
| சுழி | உடற்சுழி ; நீர்ச்சுழி ; மயிர்ச்சுழி ; எழுத்துச்சுழி ; சுழலுகை ; தலைவிதி ; உச்சி ; உச்சிப்பூ ; சுழிப்புத்தி ; மழையின் ஒரங்குல அளவு ; கடல் . |
| சுழிக்காற்று | காண்க : சூறைக்காற்று . |
| சுழிக்குணம் | தீயகுணம் . |
| சுழிகுளம் | எவ்வெட்டு எழுத்துக்கொண்ட நான்கடியாய் மேனின்று கீழிழிந்தும் , கீழ்நின்று மேல் ஏறியும் , புறம் சென்று உள்முடியப் பாடப்படும் மிறைக்கவி . |
| சுழித்தல் | சுழலுதல் ; நீர்ச்சுழி உண்டாதல் ; உடற்சுழி யுண்டாதல் ; வேறிடத்தின்றி ஒருங்கே திரண்டு நிற்றல் ; கண்குழிதல் ; அடி படாமல் ஒதுங்குதல் ; தவறிப்போதல் ; அலையச் செய்தல் ; செலவு முதலியவற்றைச் சுருக்குதல் ; முகத்தைச் சுருக்குதல் ; கோபித்தல் ; சுழியுண்டாக்குத்ல ; மறைத்தல் ; தேர்வில் தேறாத படி செய்தல் . |
| சுழித்தனம் | காண்க : சுழிக்குணம் . |
| சுழித்துவாங்குதல் | சுழற்றி உள்இழுத்தல் ; மடக்கிவிடுதல் ; மூச்சைச் சிரமப்பட்டு வெளிவிடுதல் . |
| சுழிதல் | சுழிபோல வளைதல் ; முகஞ்சுருங்குதல் ; கபடமாதல் ; மனங்கலங்குதல் ; இறத்தல் . |
| சுழிப்பு | சஞ்சலம் . |
| சுழிப்புத்தி | காண்க : சுழிக்குணம் . |
| சுழிபேதம் | ஏமாற்றுதல் . |
| சுழிமாந்தம் | கண்களின் சுழற்சியோடு கூடிய மாந்தவகை . |
| சுழிமுனை | காண்க : சுழுமுனை . |
| சுழியச்சு | பொன்னை உருக்கி வார்க்கும் அச்சு . |
| சுழியப்பேசுதல் | வருந்தச் சொல்லுதல் . |
| சுழியம் | மகளிர் தலையணிவகை ; சுன்னம் . |
| சுழியல் | சுழிந்திருக்கை ; சுருளாக மயிரை முடிக்கை . |
| சுழியன் | வஞ்சகன் ; புத்திசாலி ; கோபி ; கொடிய குறும்பன் ; சுழல்காற்று . |
| சுழியாணி | குடுமிக்கதவின் முள்ளாணி . |
| சுழியாணிக்கட்டை | குடுமிக்கதவின் முள்ளாணியைத் தாங்குங் கட்டை . |
| சுழியாணிக்கதவு | குடுமிக்கதவு . |
| சுழியிலெழுத்து | தலைவிதி . |
| சுழியோடுதல் | தண்ணீரில் மூழ்கிக் குளித்தல் ; மனத்தை ஆராய்தல் . |
| சுழிவு | மறைவு ; மனக்கவலை . |
| சுழுத்தி | புலன்கள் செயலற்றுநிற்கும் நிலை . |
| சுழுந்து | காண்க : சுளுந்து . |
| சுழுமுனை | இடைகலை பிங்கலைகளுக்கு இடையிலுள்ள நாடி ; மூலாதாரத்திலிருந்து உச்சித்துளை வரைக்கும் நிற்கும் நாடி . |
| சுழுனானை | இடைகலை பிங்கலைகளுக்கு இடையிலுள்ள நாடி ; மூலாதாரத்திலிருந்து உச்சித்துளை வரைக்கும் நிற்கும் நாடி . |
| சுழுனை | இடைகலை பிங்கலைகளுக்கு இடையிலுள்ள நாடி ; மூலாதாரத்திலிருந்து உச்சித்துளை வரைக்கும் நிற்கும் நாடி . |
| சுள் | உறைப்பு ; கருவாடு ; சிறுமை . |
| சுள்ளக்கம் | கோபம் ; மேட்டிமை ; வேர்க்குரு . |
| சுள்ளக்கன் | கோபக்காரன் ; அடங்காத குதிரை அல்லது மாடு . |
| சுள்ளக்காய் | மிளகாய் . |
| சுள்ளம் | சினம் . |
| சுள்ளல் | மெல்லியது . |
| சுள்ளற்கோல் | வளையுந் தடி ; சவுக்கு . |
| சுள்ளாணி | சிறிய ஆணி ; மெல்லிய ஆணி . |
| சுள்ளாப்பித்தல் | அடித்தல் ; கதிரடித்தல் . |
|
|
|