சுள்ளாப்பு முதல் - சுற்றுமண் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சுள்ளாப்பு உறைப்பு ; அடி ; பழிச்சொல் ; கடுமை ; மழையின்பின் அடிக்கும் கடுவெயில் .
சுள்ளான் காண்க : சுள்ளெறும்பு ; கொசுவகை .
சுள்ளி சிறு விறகு ; அனிச்சமரம் ; உலர்ந்த சிறு கொம்பு ; சிறுகோல் ; மரக்கிளை ; சிறுமை ; மாமரம் ; ஆச்சாமரம் ; ஞாழல் ; மயிற்கொன்றைமரம் ; நாகமல்லி ; மல்லிகை ; குங்குமம் ; எலும்பு .
சுள்ளிக்கோல் சவுக்கு .
சுள்ளிடுதல் உறைத்தல் ; மனம் வருந்துதல் .
சுள்ளிடுவான் மிளகு ; மிளகாய் ; ஒரு பூச்சி வகை .
சுள்ளு கருவாடு .
சுள்ளுச்சுள்ளெனல் கடுத்தற்குறிப்பு ; கோபக் குறிப்பு .
சுள்ளுப்பூச்சி தெள்ளுப்பூச்சி .
சுள்ளெறும்பு செந்நிறமுள்ள சிற்றெறும்புவகை .
சுள்ளை மட்கலஞ் சுடுஞ் சூளை ; காளவாய் .
சுளகம் உள்ளங்கை : நன்மொழி .
சுளகு முறம் : சுளகைப்போன்ற விசாகநாள் .
சுளகுகட்டுதல் முறம்முடைதல் .
சுளகுபின்னல் ஒலை முதலியவற்றில் பின்னும் ஒரு முடைசல்வகை ; ஒரு தலைப்பின்னல் வகை .
சுளி புளியாரைக்கீரை .
சுளிக்கு ஊன்றுகோல் ; முனை கூர்மையான ஒரு கைக்கோல்வகை .
சுளிகை முருங்கைமரம் ; அணிகலவகை .
சுளித்தல் கோபித்தல் ; சினக்குறிப்பு ; காலால் துகைத்தல் ; முறித்தல் ; வெறுத்தல் ; வருந்துதல் .
சுளிதல் சினத்தல்
சுளிவு சினக்குறிப்பு ; சினம் ; எளிது ; தணிவு .
சுளுக்கி காண்க : சுளிக்கு .
சுளுக்கு நரம்புப் பிறழ்ச்சி .
சுளுக்குநாயகம் நரம்புச்சுளுக்கைக் குணப்படுத்தும் மருந்துச்செடி .
சுளுக்குப்பார்த்தல் சுளுக்கு நீங்க மந்திரித்தல் .
சுளுக்குருவுதல் எண்ணெய் முதலியவற்றால் சுளுக்கு நீங்கும் படி மந்திரித்து உருவுதல் .
சுளுக்குவழித்தல் எண்ணெய் முதலியவற்றால் சுளுக்கு நீங்கும் படி மந்திரித்து உருவுதல் .
சுளுக்கேறுதல் சுளுக்கிக்கொள்ளுதல் .
சுளுகு நுட்ப அறிவு ; திறமைப் பேச்சு ; எளிது .
சுளுகுபின்னல் ஒரு மயிர்ப்பின்னல்வகை .
சுளுகோடி மேற்கூரை இணையும் மூலை .
சுளுந்து மரவகை ; சுள்ளி முதலியவற்றாலான தீப்பந்தம் ; சுளுந்துமரக்கழியில் எரிக்குந் தீப்பந்தம் ; ஒருவகை ஆரத்திக்கலம் .
சுளுந்துக்காரன் தீவட்டிக்காரன் , தீவட்டி பிடிப்பவன் .
சுளுவு எளிமை .
சுளை பலாப்பழம் முதலியவற்றின் சதைப்பற்று .
சுளைப்பிடாம் கம்பளி .
சுளையம் திருட்டு .
சுற்கம் காண்க : சுல்கம் .
சுற்பம் செம்பு .
சுற்றத்தார் உறவினர் ; இனத்தார் ; துணைவர் ; பரிவாரம் .
சுற்றந்தழால் உறவினரைத் தழுவிக்கொள்தல் .
சுற்றம் உறவினரர் ; பரிவாரம் ; அரசர்க்குரியதுணையில் ஒன்று ; கூட்டம் ; ஆயத்தார் .
சுற்றளவு வட்ட அளவு .
சுற்றாலை சுற்றுச்சுவர் , பிராகாரம் .
சுற்றிக்கட்டுதல் எழுத்துச்சுழி வரைதல் ; சூழ்ச்சிசெய்தல் ; நீரை வேறுவழி திருப்புதல் ; பொய்யாகக் கற்பித்தல் ; இலஞ்சம் கொடுத்தல் .
சுற்றிக்கொள்ளுதல் சூழ்ந்துகொள்ளுதல் ; கவர்தல் ; வளைந்துகொள்ளுதல் .
சுற்றிச்சுழல் சுற்றிவருதல் ; விடாது பற்றித்தொடர்தல் ; விடாது கெஞ்சுதல் .
சுற்றிச்சுழலுதல் சுற்றிவருதல் ; விடாது பற்றித்தொடர்தல் ; விடாது கெஞ்சுதல் .
சுற்றிச்சுழற்றுதல் விளக்கமின்றி வளர்த்துப் பேசுதல் .
சுற்றிப்பிடித்தல் வளைந்து பற்றுதல் ; வயிறு மிகவும் நோதல் ; பற்றிக்கொள்ளுதல் .
சுற்றிப்போடுதல் கண்ணேறு கழித்தல் ; மணமக்கள் முதலியோரின் முடியைச் சுற்றிப் பண்ணிகாரம் முதலியவற்றை எறிந்து கண்ணேறு கழித்தல் .
சுற்றியெறிதல் கண்ணேறு கழித்தல் ; மணமக்கள் முதலியோரின் முடியைச் சுற்றிப் பண்ணிகாரம் முதலியவற்றை எறிந்து கண்ணேறு கழித்தல் .
சுற்றிவாங்குதல் தேசிக்கூத்துக்குரிய கால்வகை ; சுற்றிவந்து பெற்றுக்கொள்ளுதல் .
சுற்று வட்டமாயோடல் ; அச்சின்மேல் சுழற்சி ; சுருளுதல் ; சுற்றளவு ; சுற்றுவழி ; சுற்றிடம் ; கால்விரலணி ; மதில் ; கோயிலின் சுற்றுமதில் ; சொற்பொருள்களின் சிக்கல் .
சுற்றுக்கட்டு வீட்டின் புறக்கட்டு ; அயலிடம் ; உறவினர்களிள் கூட்டம் ; கட்டுக்கதை ; இலஞ்சம் .
சுற்றுக்கட்டை கொத்தன் பூசுவதற்குப் பயன்படுத்தும் மணியாசிக்கட்டை .
சுற்றுக்கல் கொப்பு முதலிய நகையைச் சுற்றி வட்டமாக அமைக்கும் மணிகள் .
சுற்றுக்காரியம் காண்க : சுற்றுவேலை .
சுற்றுக்கால் சுற்றுப்புறம் ; அயலிடம் ; சுற்றியுள்ள கால்வாய் .
சுற்றுக்காலிடுதல் விடாது பற்றித்தொடர்தல் ; விடாதுகெஞ்சுதல் .
சுற்றுக்கோயில் ஆலயத்தின் சுற்றுப்பிராகாரத்தில் உள்ள சிறு சன்னதிகள் .
சுற்றுக்கோள் சுற்றிக்கொள்ளுகை .
சுற்றுச்சுவர் சுற்றுப்புற மதில் .
சுற்றுச்சுழற்சி சுற்றுவழி ; செயற்சிக்கல் ; குறித்த செய்தியை நேரின்றி வளர்த்துக் கூறுகை .
சுற்றுடைமை வட்டவடிவு .
சுற்றுத்தேவதை கோயிலிலுள்ள பரிவாரத் தெய்வம் ; பெரியோரை அடுத்திருப்பவர் .
சுற்றுதல் சுற்றிவரல் ; சுழன்றுசெல்லுதல் ; வளைந்தமைதல் ; கிறுகிறுத்தல் ; மனங்கலங்குதல் ; தழுவுதல் ; விடாதுபற்றுதல் ; சூழ்ந்திருத்தல் ; வளையச் சூடுதல் ; வளையக் கட்டுதல் ; சுருட்டுதல் ; சிந்தித்தல் ; அலைதல் ; உடுத்துதல் ; சுழற்றுதல் ; கம்பிகட்டுதல் ; வஞ்சித்தல்: கைப்பற்றல் .
சுற்றுப்பட்டு அயலிடம் .
சுற்றுப்படாகை சுற்றுப்புறத்து ஊர்கள் .
சுற்றுப்பயணம் இன்பப்பயணம் ; சுற்றுவழி ; அதிகார முறையில் அதிகாரிகள் பல ஊர்களுக்கும் சென்றுவருகை .
சுற்றுப்பிராகாரம் காண்க : சுற்றுமதில் .
சுற்றுப்புடைகொள்ளுதல் பக்கம் புடைத்திருத்தல்
சுற்றுப்புறம் அயலிடம் .
சுற்றும் சூழ .
சுற்றுமண் வார்ப்புக்கருவியின் புறம்பூசியமண் ; ஒலைக் கடிதத்தில் இடும் முத்திரைமண் .