சொல்
|
அருஞ்சொற்பொருள் |
செங்கிரந்தி | ஒரு மேகக்கட்டிவகை ; செந்நிறப்புண்கட்டி . |
செங்கிளுவை | கீச்சுத்தாராப் பறவை ; ஒரு மரவகை . |
செங்கீரை | ஒரு கீரைவகை ; செங்கீரைப் பருவம் . |
செங்கீரைப்பருவம் | இருகை ஊன்றி ஒரு கால் மடக்கி ஒரு கால் நீட்டி ஐந்தாம் திங்களிற் பிள்ளைகள் தலைநிமிர்ந்தாடும் பருவம் . |
செங்குங்குமம் | சந்தனமரவகை . |
செங்குணக்கு | நேர்கிழக்கு . |
செங்குத்தாய்விழுதல் | தலைகுப்புற விழுதல் . |
செங்குத்து | நேரே நிமிர்ந்து நிற்கும் நிலை . |
செங்குந்தம் | கண்ணோய்வகை ; இரத்தத்தால் சிவந்த ஈட்டி . |
செங்குமிழ் | ஒரு மரவகை . |
செங்குமுதம் | காண்க : செவ்வாம்பல் ; கண்ணோய்வகை . |
செங்குலிகம் | சாதிலிங்கம் . |
செங்குவளை | செங்கழுநீர்ப்பூ . |
செங்குளவி | மஞ்சள் நிறமுள்ள ஒரு குளவிவகை . |
செங்குறிஞ்சி | ஒரு மரவகை . |
செங்குன்றி | ஒரு குன்றிக்கொடிவகை . |
செங்கை | கொடுக்குந் தன்மையுள்ள கை ; அழகிய கை ; சிவந்த கை ; திருவாதிரைநாள் . |
செங்கொடிவெலி | ரோசாநிறப் பூவுள்ள ஒரு கொடிவகை . |
செங்கொல் | செம்பொன் . |
செங்கொல்லர் | தட்டார் . |
செங்கொள் | ஒரு கொள்ளுவகை . |
செங்கோட்டியாழ் | நால்வகை யாழ்களுள் ஒன்று . |
செங்கோடு | செங்குத்தான மலை ; செருந்திமரம் ; ஒரு சிவதலம் . |
செங்கோல் | அரசச் சின்னமாகிய நேர்கோல் ; நல்லரசாட்சி ; நெருப்புச் சலாகை . |
செங்கோல்கோடுதல் | அரசநீதி தவறுதல் . |
செங்கோலம் | செம்புமணல் . |
செங்கோலறுகு | அறுகம்புல்வகை . |
செங்கோலோச்சுதல் | நீதி தவறாது அரசு புரிதல் . |
செங்கோற்கடவுள் | யமன் . |
செங்கோன்மை | அரசநீதி . |
செச்சை | சந்தனக்குழம்பு ; நீறு ; சட்டை ; வெள்ளாட்டுக்கடா ; ஆடு ; மேடராசி ; தழைகள் ; குடில் ; செங்காடு ; உதயசந்திரன் ; இலிங்கப்பெட்டகம் ; இரட்டை ; சிவப்பு ; வெட்சி ; செந்துளசிச்செடி . |
செஞ்ச | நிறைய ; சேர ; நேராக ; முழுதும் . |
செஞ்சடையோன் | காஷ்மீரப் படிகம் ; சிவன் ; வயிரவன் ; வீரபத்திரன் . |
செஞ்சந்தனம் | ஒரு சந்தனமரவகை . |
செஞ்சம் | நேர்மை ; முழுமை . |
செஞ்சாந்து | குங்குமம் ; சந்தனக்கலவை . |
செஞ்சாலி | உயர்தரச் செந்நெல்வகை . |
செஞ்சிலை | சிவந்தகல் ; செங்காவி ; அழகிய வில் . |
செஞ்சீரகம் | செந்றிறமுள்ள சீரகவகை . |
செஞ்சு | நேர்மை ; முழுதும் . |
செஞ்சுடர் | சூரியன் ; தீ . |
செஞ்சுடர்ப் பகவன் | தீக்கடவுள் ; ககிரவன் . |
செஞ்சுருட்டி | ஒரு பண்வகை . |
செஞ்செயல் | நேர்மையான தொழில் . |
செஞ்செவியர் | செல்வர் . |
செஞ்செவே | நேராக ; எளிதாக ; முழுவதும் . |
செஞ்செழிப்பு | முகமலர்ச்சி ; பயிர்ச்செழிப்பு ; ஏராளம் . |
செஞ்சொல் | திருந்திய சொல் ; வெளிப்படையான சொல் . |
செஞ்சொன்மாலை | புகழ்மாலை . |
செஞ்சோற்றுக்கடன் | உணவுபெற்று உண்டதற்காக வீரன் தன் உயிரையும் போரிடைக் கொடுத்தலாகிய கடமை . |
செஞ்சோறு | சிவப்பன்னம் ; காண்க : செஞ்சோற்றுக்கடன் ; உரிமைச்சோறு . |
செஞ்ஞானி | சிறந்த ஞானி . |
செட்டி | முருகன் ; வாணிகன் ; வணிகர்களின் பட்டப்பெயர் ; காண்க : வெட்சி ; மல்லக செட்டி . |
செட்டிச்சி | வணிகக்குலப் பெண் . |
செட்டிமை | செட்டித் தன்மை வாணிகம் . |
செட்டியப்பன் | சிவன் . |
செட்டு | சிக்கனம் ; கடும்பற்றுள்ளம் ; வாணிகம் . |
செட்டுக்காரன் | அளவாய்ச் செலவிடுவோன் ; பிறருக்குக் கொடுக்காதவன் . |
செட்டுப்பொட்டாதல் | வாணிகஞ் சிதைதல் . |
செட்டை | இறகு ; தோட்பட்டை ; மீன்சிறை ; ஆடைக்கரைவகை . |
செடகன் | வேலைக்காரன் ; அடிமை . |
செடி | பூண்டு ; புதர் ; நெருக்கம் ; பாவம் ; தீமை ; துன்பம் ; தீநாற்றம் ; பதனழிந்தது ; அற்பம் ; ஒளி ; குற்றம் . |
செடிக்காடு | புதர் . |
செடிச்சி | இழிந்தவள் . |
செடிசீத்தல் | காடுவெட்டுதல் . |
செண்டாடுதல் | பந்தாடுதல் ; நிலைகுலைத்தல் . |
செண்டாயுதன் | ஐயனார் . |
செண்டு | பூச்சேண்டு ; பந்து ; குதிரைச் சம்மட்டி ; வையாளிவீதி ; பந்தடிமேடை ; நூற்செண்டு ; தீவடடிச்செண்டு ; கூர்மை . |
செண்டுகோல் | பந்தடிக்குங் கோல் . |
செண்டுமல்லிகை | காண்க : குடமல்லிகை . |
செண்டுவெளி | அரண்மனையைச் சார்ந்துள்ள வையாளிவீதி . |
செண்டேறுதல் | சாரிகை புறப்படுதல் . |
செண்டை | ஒரு கொட்டுவாத்தியவகை . |
செண்ணம் | நுண்டொழில் ; அழகிய வடிவு . |
செண்ணிகைக்கோதை | பூமாலைவகை . |
![]() |
![]() |
![]() |