செலு முதல் - செவிட்டுதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
செலு மீன்செதிள் ; நறுவிலிமரம் ; மெலிந்த .
செலுத்துதல் செல்லச் செய்தல் ; ஓட்டுதல் ; இறுத்தல் ; நடத்துதல் ; எய்தல் ; ஆணை நடத்துதல் .
செலுந்தி மெலிந்தது .
செலுந்தில் மெலிந்தது .
செலுப்பு சிறுதுண்டு ; பாக்குச்சீவல் ; நீர்க்கோப்பு .
செலுவன் மெலிந்தவன் .
செவ்வகத்தி ஓர் அகத்திமரவகை .
செவ்வட்டை ஒருவகை அட்டைப் பூச்சி ; சருக்கரைவள்ளிநோய் .
செவ்வண் செங்குத்து .
செவ்வணம் செவ்வையாக .
செவ்வணி தலைமகனுக்குத் தலைவியின் பூப்பு உணர்த்தற் குறியாகத் தோழி அணிந்து கொள்ளும் செங்கோலம் .
செவ்வந்தி ஒரு பூச்செடிவகை .
செவ்வரக்கு சாதிலிங்கம் .
செவ்வரத்தம் செம்பரத்தைச்செடி .
செவ்வரத்தை செம்பரத்தைச்செடி .
செவ்வரி கண்ணிலுள்ள சிவந்த கோடு ; நாரைவகை .
செவ்வல் செம்மண்நிலம் ; செந்நிறம் .
செவ்வல்நார் காண்க : செவ்வாம்பல் .
செவ்வல்லி செவ்வள்ளிக்கொடி ; செந்நிறமான அல்லிவகை ; காண்க : மஞ்சிட்டி .
செவ்வலரி ஓர் அலரிவகை .
செவ்வழி நன்னெறி ; முல்லைப்பண் .
செவ்வழிப்பாலை பாலை யாழ்த்திறத்துள் ஒன்று .
செவ்வழிபாடு முற்றும் அடங்கி ஒழுகுகை .
செவ்வழியாழ் முல்லைப்பண் .
செவ்வள்ளி ஓர் வள்ளிக்கொடிவகை .
செவ்வன் செவ்வகையாக .
செவ்வனம் செவ்வகையாக .
செவ்வனிறை நேர்விடை .
செவ்வாப்பு காமாலைவகை ; குழந்தைகளுக்குத் தலையிலுண்டாகும் சிவப்புக்கட்டி .
செவ்வாப்புக்கட்டி காமாலைவகை ; குழந்தைகளுக்குத் தலையிலுண்டாகும் சிவப்புக்கட்டி .
செவ்வாம்பல் செந்நிறமான அல்லிவகை .
செவ்வாய் ஒன்பது கோள்களுள் ஒன்று ; செவ்வாய்க்கிழமை ; பிடாரிகோயில் திருவிழா .
செவ்வாய்நோன்பு செவ்வாய்ப் பிள்ளையார் , ஆண்டுக்கு இருமுறை செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஆடவரும் ஆண்குழந்தைகளும் அறியாவகை வேளாள மகளிரால் மிக மறைவாகக் கடைப்பிடிக்கப்படும் விரதம் .
செவ்வாரம் நிலக்கிழானும் பயிரிடுவோனும் பிரித்துக் கொள்ளும் சரிவாரம் .
செவ்வாழை ஒரு வாழைவகை .
செவ்வானம் செக்கர்வானம் .
செவ்வி காலம் ; ஏற்ற சமயம் ; காட்சி ; அரும்பு ; பக்குவம் ; புதுமை ; அழகு ; சுவை ; மணம் ; தன்மை ; தகுதி ; சித்திரைநாள் .
செவ்விதின் செம்மையாக .
செவ்விது நேரானது ; நன்று .
செவ்விநிறம் மாந்தளிர்க்கல் .
செவ்விபார்த்தல் ஒருவன் தக்க சமயத்தை எதிர்பார்த்து நிற்றல் .
செவ்விய நேர்மையான .
செவ்வியம் மிளகுகொடி .
செவ்வியன் நேர்மையுடையவன் .
செவ்வியான் நேர்மையுடையவன் .
செவ்வியோன் நேர்மையுடையவன் .
செவ்விளகி கழுதைவண்டு .
செவ்விளநீர் செந்தெங்கின் இளங்காய் .
செவ்விளிம்பன் சிவக்கத் தோய்ந்த விளிம்பினை உடைய ஆடை .
செவ்விளை காண்க : செவ்விளநீர் .
செவ்விறகி காண்க : செவ்விளகி .
செவ்வினையாளர் நற்செய்கை உடையோர் .
செவ்வு செம்மை ; நேர்மை ; திக்கு ; முத்துக்களின் அளவுவகை .
செவ்வெண் பெயர்வினைகளுள் எண்ணிடைச்சொல் தொக்குவருந் தொடர் .
செவ்வெண்ணெய் பிறந்த குழந்தையின் வாயில் தடவும் தேன்கூட்டிய ஆமணக்கெண்ணெய் .
செவ்வே நன்றாக ; நேரே ; மேல்முகமாக .
செவ்வேள் முருகக்கடவுள் .
செவ்வை நேர்மை ; மிகுதி ; வழி முதலியவற்றின் செப்பம் ; சரியான நிலை .
செவ்வைக்கேடு ஒழுங்கின்மை .
செவ்வைப்பூசல் அறப்போர் .
செவத்தல் காண்க : சிவத்தல் .
செவந்தரை காண்க : கோலாட்டம் .
செவல் செந்நிறமான விலங்கு ; செம்மண் நிலம் .
செவலை செந்நிறமுள்ள விலங்கு .
செவி காது ; கேட்கை ; பாத்திரத்தின் காது வளையம் ; வீணையின் முறுக்காணி ; ஓரங்குல மழை .
செவிக்குத்து காதுநோவு .
செவிக்கெட்டுதல் கேள்விப்படுதல் ; கேட்டற்கு இனிதாயிருத்தல் .
செவிக்கேறுதல் கேள்விப்படுதல் ; கேட்டற்கு இனிதாயிருத்தல் .
செவிகொடுத்தல் காதுகொடுத்துக் கேட்டல் .
செவிகொள்தல் கேட்டல் .
செவிகொளுதல் கேட்டல் .
செவிச்செல்வம் கேள்வியாகிய செல்வம் .
செவிச்சொல் காதில் இரகசியமாய்க் கூறுதல் .
செவிசாய்த்தல் சொல்வதைக் கேட்கச் செவிதாழ்த்தல் .
செவிட்டுதல் கொல்லுதல் ; ஒருபுறங் கண் சாய்த்துப் பார்த்தல் .