செவிடன் முதல் - செற்றார் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
செவிடன் காது கேளாதவன் .
செவிடி காது கேளாதவள் .
செவிடு காது கேளாமை ; கன்னம் ; காது கேளாதவர் ; ஆழாக்கில் ஐந்திலொன்றாகிய அளவு ; காதணிவகை .
செவிடுசெல்லுதல் ஓசை மிகுதியால் காது கேளாது போதல் ; காண்க : செவிடெறிதல் .
செவிடுபடுதல் ஓசை மிகுதியால் காது கேளாது போதல் ; காண்க : செவிடெறிதல் .
செவிடெறிதல் சத்தத்தால் அலைவுறுதல் .
செவித்துறண்டி குறும்பிவாங்கி .
செவிதாழ்த்தல் காண்க : செவிகொடுத்தல் .
செவிதின்னுதல் இரகசியம் பேசுதல் .
செவிநிறக்கல் காண்க : மாந்தளிர்க்கல் .
செவிப்படுத்துதல் காதில் மெல்ல அறிவித்தல் .
செவிப்படுதல் கேட்கப்படுதல் .
செவிப்பண் நீர்க்கரகத்தை அடக்கிவைக்க உதவும் பிரம்புக்கூடை .
செவிப்பறையறைதல் மந்திரம் முதலியவற்றைப் பிறர் செவியிற் படாதவாறு இரகசியமாகக் கூறுதல் .
செவிப்பாடு கேள்வியால் வரும் இன்பம் ; காதில் புகுகை .
செவிப்பாம்பு காண்க : செவிப்பூரான் ; மாட்டுக் குற்றவகை .
செவிப்புலன் காதால் உணரும் ஓசையுணர்வு .
செவிப்புற்று காதுநோய்வகை .
செவிப்பூரான் காதுக்குள் சென்று துன்புறுத்தும் பூரான்வகை .
செவிபடுவாதம் காது கேளாமற் செய்யும் நோய்வகை .
செவிமடல் காதின் வெளியுறுப்பு ; காண்க : செவிமலர் .
செவிமடுத்தல் கேட்டல் .
செவிமந்தம் செவிடு .
செவிமலர் ஒரு காதணிவகை ; மகளிர் காதணிவகை ; தெய்வத் திருமேனிகளிற் சாத்தும் காதோலை ; காதுநோய் நீங்கியமைக்காகச் செலுத்தும் செவியுருவம் ; உட்செவி .
செவிமறை செவியில் மறுவுள்ள எருது .
செவிமாட்டுதல் பிறர் காதில் வலிய நுழைத்தல் .
செவியடி காதின் அடிப்பகுதி ; களத்தில் கதிரடித்தவுடன் நெற்பட்டறை வைத்திருந்த இடம் .
செவியடித்தல் காதாட்டுதல் .
செவியம் காண்க : செவ்வியம் .
செவியறிவு காண்க : செவியறிவுறூஉ .
செவியறிவுறுத்தல் நல்லறிவு புகட்டுதல் .
செவியறிவுறூஉ அரசர் முதலியோர்க்குச் செவிக்கண் நிற்கக் கூறும் நீதி ; அரசர்க்கு நல்லறிவு புகட்டுதலைக் கூறும் புறத்துறை ; ஒரு நூல்வகை .
செவியறை காண்க : காதறை .
செவியன் முயல் .
செவியான் காண்க : செவிப்பூரான் .
செவியிலி காண்க : செவியறை .
செவியுறை காதுக்கிடும் மருந்து ; செவிக்கண் நிற்கக் கூறும் நீதி .
செவியுறையங்கதம் அரசர்க்கு உறுதிகூறும் நோக்குடன் அறிஞர் கூறும் வசைச்செய்யுள் .
செவியேறு கேள்வி .
செவிரம் ஒரு பாசிவகை .
செவிலி வளர்ப்புத்தாய் ; முன்பிறந்தவள் .
செவிலித்தாய் வளர்ப்புத்தாய் .
செவிள் காதின் மேற்புறத்து உறுப்பு .
செவுள் மீனின் மூச்சு உறுப்பு .
செவேரெனல் சிவந்திருத்தற் குறிப்பு .
செவை காண்க : செவ்வை .
செழிச்சி செழிப்பு ; வளம் .
செழித்த கல் சுக்கான் கல் .
செழித்தல் தழைத்தல் ; வளம் பெருகுதல் ; சிறப்பு நிலையில் இருத்தல் ; அளவுக்கு மிஞ்சியிருத்தல் ; முகமலர்ச்சியுறுதல் .
செழிதல் வளர்தல் .
செழிப்பம் வளம் ; நிறைவு ; பொலிவு .
செழிப்பு வளம் ; நிறைவு ; பொலிவு .
செழியன் பாண்டியன் .
செழுகம் அட்டை .
செழுகை சாணளப்பான் புழு .
செழுசெழுத்தல் மிகு வளப்பமாதல் ; தழைத்தல் .
செழுஞ்சோறு கொழுத்த உணவு .
செழுத்து வளம் .
செழுந்து நிறைவு .
செழுப்பம் வளம் ; நிறைவு .
செழும்பல் வளம் ; நிறைவு .
செழுமறை நெருப்பு .
செழுமை செழிப்பு ; மாட்சிமை ; தழைவு ; அழகு .
செழுவிதின் செம்மையாக .
செள்ளு தெள்ளுப்பூச்சி ; உண்ணிவகை .
செளிம்பன் குணக்கேடன் .
செளிம்பு களிம்பு ; பிடிவாதம் .
செளிம்பூறல் களிம்புப் பற்று .
செளுகம் அட்டை .
செளுகை அட்டை .
செளைப்பு சோர்வு .
செற்றம் மனவயிரம் ; நெடுங்காலம் நிகழ்வதாகிய பகைமை ; வெறுப்பு ; தணியாக்கோபம் ; ஊடற்சினம் .
செற்றல் கொல்லுதல் ; அழித்தல் ; கேடு ; செறிவு ; ஈமுட்டை .
செற்றலர் பகைவர் .
செற்றார் பகைவர் .