சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சோதித்தல் | ஆராய்தல் ; விசாரணைசெய்தல் ; தூய்மைசெய்தல் ; சோதனைபண்ணுதல் ; விளக்கமுறுதல் ; தீமைசெய்யத் தூண்டுதல் . |
சோதிநாயகன் | ஒளிவடிவான கடவுள் . |
சோதிநாள் | சுவாதிநாள் . |
சோதிப்பிழம்பு | கதிர்த்திரட்சி . |
சோதிமயம் | ஒளிவடிவு ; காண்க : வாலுளுவை . |
சோதியம் | காண்க : வாலுளுவை . |
சோதியன் | ஒளிவடிவான கடவுள் . |
சோதியான் | ஒளிப்பிழம்பான சூரியன் . |
சோதிராத்திரி | நள்ளிரவு . |
சோதிவிருட்சம் | இரவில் ஒளியுடன் விளங்குவதாகக் கருதப்படும் மரவகை . |
சோதினி | செத்தை ; துடைப்பம் . |
சோந்தை | பற்று ; இடையூறு . |
சோப்பம் | இரக்கம் . |
சோப்பளாங்கி | பயனற்றவன் ; வலுவற்றவன் . |
சோப்பி | ஈயோட்டி . |
சோப்பு | அடி ; சவர்க்காரம் . |
சோப்புதல் | சோர்வுறச் செய்தல் ; அடித்தல் . |
சோபகிருது | அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்தேழாம் ஆண்டு . |
சோபநித்திரை | புணர்ச்சி முடிந்தபின் நிகழும் அயர்ந்த உறக்கம் . |
சோபம் | அழகு ; ஒளி ; இரத்தத்தைக் குறைக்கும் நோய்வகை ; சோர்வு ; கள் ; துன்பம் ; சோம்பல் ; இரக்கம் ; பத்துக்கோடி ; கோடாகோடி ; மூர்ச்சை . |
சோபலம் | சோம்பல் ; பெருஞ்சீரகம் . |
சோபலாங்கி | காண்க : சோப்பளாங்கி . |
சோபனஞ்சொல்லுதல் | முதற்பூப்பு முதலிய நற்செய்தி கூறுதல் ; வாழ்த்துக் கூறுதல் ; மங்களப்பாட்டுப் பாடல் . |
சோபனப்பாட்டு | மங்களப்பாட்டு . |
சோபனம் | அழகு ; நன்மை ; வாழ்த்து ; வாழ்த்துப்பாட்டு ; நற்செய்தி ; நன்னிமித்தம் ; நன்முகூர்த்தம் ; நித்திய யோகத்துள் ஒன்று ; நற்செயல் . |
சோபாதானம் | முதற்காரணமுள்ளது . |
சோபாலிகை | அடம்பு ; விரிதூறு . |
சோபானம் | படிக்கட்டு ; தாழ்வாரம் . |
சோபானமுறை | படிமுறை . |
சோபானவகை | பாரம்பரியம் . |
சோபித்தல் | ஒளிசெய்தல் ; அழகாதல் ; மேம்படுதல் ; சோர்வுறுதல் . |
சோபிதம் | அழகு ; ஒளி . |
சோபை | அழகு ; ஒளி ; ஒரு நோய்வகை . |
சோம்பல் | மடிமை ; மயக்கத்தைத் தரும் அம்மைநோய் ; மயக்கம் . |
சோம்பலம் | சேங்கொட்டை . |
சோம்பன் | சோம்பேறி . |
சோம்பாகி | சமையற்காரன் . |
சோம்பாயி | சமையற்காரன் . |
சோம்பி | காண்க : சோம்பன் . |
சோம்பு | சோம்பல் ; மந்தம் ; பெருஞ்சீரகம் . |
சோம்புதல் | சோம்பலடைதல் ; அறிவு மந்தமாதல் ; ஊக்கமிழத்தல் ; வாடுதல் ; கெடுதல் ; பின்வாங்குதல் . |
சோம்பேறி | சோம்பலாயிருப்பவன் ; தங்கத்தை இளக்கும் திராவகம் . |
சோமக்கிரணம் | காண்க : சந்திரகிரகணம் . |
சோமகுண்டம் | காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள ஒரு புண்ணிய தீர்த்தம் . |
சோமசுந்தரன் | மதுரையில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் . |
சோமசூத்திரம் | சிவன்கோயிலில் திருமுழுக்காட்டிய நீர் விழும் கோமுகம் . |
சோமசேகரன் | நிலவை முடியில் உடைய சிவன் . |
சோமதாரி | இந்துப்பு . |
சோமதிசை | குபேரனது திசையான வடதிசை . |
சோமநாதி | ஒருவகைப் பெருங்காயம் . |
சோமபந்து | ஆம்பல் ; சூரியன் ; புதன் . |
சோமபானம் | வேள்வியில் குடிக்கும் சோமச்சாறு . |
சோமம் | யாகரசக்கொடி ; காண்க : கொடிக்கள்ளி ; ஒரு வேள்வி ; கள் . |
சோமராகம் | பாலைப் பண்களுள் ஒன்று . |
சோமவட்டம் | அமிர்தம் பெருகும் இடம் என்று கருதப்படும் புருவமத்தி . |
சோமவல்லரி | காண்க : பொன்னாங்காணி . |
சோமவல்லி | சீந்திற்கொடி . |
சோமவாரம் | திங்கட்கிழமை . |
சோமன் | சந்திரன் ; சோமசுந்தரன் ; குபேரன் ; ஒரு வள்ளல் ; எட்டு வசுக்களுள் ஒருவன் ; கருப்பூரம் ; சவர்க்காரம் ; வேட்டி ; ஆடை ; நீலபாடாணம் ; வெள்ளிமணல் . |
சோமாறி | சோம்பேறி ; ஏனாதியர்வகை ; சமையற்காரன் . |
சோமாறுதல் | இரவல் வாங்குதல் ; ஒருத்தியைப் பலர் புணர்தல் ; திருடுதல் ; பண்டமாற்றுதல் ; ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொன்றிற்குப் பகிர்தல் ; சோம்புதல் ; பின்வாங்குதல் . |
சோமி | துர்க்கை . |
சோமேசன் | காண்க : சோமசேகரன் . |
சோர் | சோர்வு ; வஞ்சகம் ; பகட்டு . |
சோர்ச்சி | தளர்வு ; வஞ்சகம் . |
சோர்த்தல் | திருடுதல் . |
சோர்தல் | தளர்தல் ; மனம்தளர்தல் ; மூர்ச்சித்தல் ; நழுவுதல் ; கண்ணீர் முதலியன வடிதல் ; கசிதல் ; கழலுதல் ; வாடுதல் ; தள்ளாடுதல் ; தடுமாறுதல் ; இறத்தல் ; விட்டொழிதல் ; துயரப்படுதல் ; உடலின் தைலம் முதலியன இறங்குதல் . |
சோர்பதன் | தளர்ந்த காலம் . |
சோர்பு | தளர்ச்சி . |
சோர்பொழுது | மாலைக்காலம் . |
சோர்வு | தளர்ச்சி ; மறதி ; மெலிவு ; இழுக்கு ; சொரிகை ; திருட்டு ; விபசாரம் . |
சோர்வுபார்த்தல் | ஏமாறின சமயம் பார்த்தல் . |
சோரகவி | பிறர் பாடியதைத் தான் பாடியதாகக் கூறுபவன் ; திருட்டுப் பாடல் . |
சோரகன் | திருடன் . |
சோரங்கொடுத்தல் | பறிகொடுத்தல் ; மனைவியின் கற்பழியப் பெறுதல் ; துன்புறுதல் . |
![]() |
![]() |
![]() |