சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| சோரத்தனம் | திருட்டுக்குணம் ; ஏமாற்றுங்குணம் ; விபசாரம் . |
| சோரத்துவம் | திருட்டுக்குணம் . |
| சோரப்பார்வை | திருட்டுப்பார்வை ; விபசாரிகளின் நோக்கு . |
| சோரப்பெய்தல் | மழை மிகுதியாகப் பெய்தல் . |
| சோரப்போடுதல் | ஒரு செயலை ஆறப்போடுதல் ; பின்தள்ளிப் போடுதல் . |
| சோரபயம் | கள்வர் பயம் . |
| சோரபுத்திரன் | கணவனல்லாத பிறனுக்குப் பிறந்த புதல்வன் . |
| சோரம் | களவு ; வஞ்சனை ; விபசாரம் . |
| சோரம்போதல் | வைப்புப்பாடாணவகை ; களவுபோதல் ; விபசாரஞ்செய்தல் . |
| சோரமார்க்கம் | விபசாரம் . |
| சோரல் | தளர்தல் ; கெடுதல் . |
| சோரவித்தை | திருட்டுத்தொழில் . |
| சோரன் | திருடன் ; விபசாரம் செய்பவன் ; ஆட்டுக்குட்டி . |
| சோராவரி | கொள்ளை ; வலாற்காரம் . |
| சோராவாரி | கொள்ளை ; வலாற்காரம் . |
| சோரி | இரத்தம் ; மழை ; சிறுசெருப்படிச்செடி . |
| சோரியிளநீர் | செவ்விளநீர் . |
| சோல்தல் | கைப்பற்றுதல் ; மீட்டுக்கொள்ளுதல் . |
| சோலுதல் | கைப்பற்றுதல் ; மீட்டுக்கொள்ளுதல் . |
| சோலி | செயல் ; தொந்தரவு ; முலைக்கச்சு ; தோணியிலொதுக்கிடம் ; இரவிக்கைவகை . |
| சோலிக்காரன் | காரியக்காரன் ; தொல்லை கொடுப்பவன் . |
| சோலிசெய்தல் | வேலைசெய்தல் ; நேரம் போக்குதல் . |
| சோலிமாலி | தொல்லை . |
| சோலை | மரங்கள் செறிந்து நிழல்செய்யும் இடம் ; சீனிமரம் . |
| சோலைநுகர்வு | வேனிற்காலத்துச் சோலையின் குளிர்ச்சி இன்பம் துய்த்தல் . |
| சோலைமலை | காண்க : அழகர்மலை . |
| சோவானை | மங்களகரமான ஆரத்திப்பாட்டு . |
| சோவி | காண்க : சோகி . |
| சோவெனல் | ஒலிக்குறிப்பு . |
| சோவை | காண்க : சோகை . |
| சோழகக்கச்சான் | தென்மேற்குக் காற்று . |
| சோழகக்கொண்டல் | தென்கீழ்த்திசைக் காற்று . |
| சோழகம் | தென்காற்று . |
| சோழகன் | ஒரு காட்டுச் சாதியான் ; கள்ளர் பட்டப்பெயருள் ஒன்று . |
| சோழங்கன் | சோழன் . |
| சோழநாடு | சோழர் அரசாண்ட தமிழ்நாட்டுப் பகுதி . |
| சோழம் | காண்க : சோழநாடு ; பார்ப்பனனைக் கொன்ற ஒரு சோழனைப் பற்றியிருந்த பேய் ; விடாதுபற்றித் துன்புறுத்துவோன் ; சோம்பேறி ; மூடன் . |
| சோழமண்டலம் | காண்க : சோழநாடு . |
| சோழன் | சோழவரசன் . |
| சோழி | காண்க : சோகி . |
| சோழிப்பல் | பலகறைபோன்ற பல் . |
| சோழியக்கடகம் | மண் அள்ளும் கூடை , சாட்டுக்கூடை . |
| சோழயக்கூடை | மண் அள்ளும் கூடை , சாட்டுக்கூடை . |
| சோழியப்பாரை | மண்வெட்டிவகை . |
| சோழியப்பை | இரப்போர் பை . |
| சோழியமணம் | இருபதினாயிரம் பாக்குக் கொண்ட அளவு . |
| சோழியன் | சோழநாட்டான் ; பார்ப்பனர் , வேளாளர் முதலியோருள் சில வகுப்பினர்க்கு வழங்கும் பெயர் ; ஒரு மண்வெட்டிவகை . |
| சோழியாவணம் | காண்க : சோழியமணம் . |
| சோளகம் | குடுமி வைக்கும் சடங்கு . |
| சோளம் | ஒரு தானியவகை ; சங்கஞ்செடி ; காண்க : சோழம் . |
| சோளன் | காண்க : சோழன் ; மக்காச்சோளம் ; ஒரு தானியவகை . |
| சோளி | காண்க : சோழியப்பை . |
| சோளிகை | காண்க : சோழியப்பை . |
| சோற்றமலை | காண்க : சோற்றுக்கட்டி . |
| சோற்றலகு | சிப்பல் ; மரத்தில் வயிரமில்லாத பாகம் . |
| சோற்றி | மரத்தினுட்சோறு ; வயிரமின்மை ; பழத்தின் சதைப்பாகம் ; பச்சிலைவகை ; சோறு . |
| சோற்றிலை | காண்க : சோற்றுக்கற்றாழை . |
| சோற்றுக்கட்டி | அன்னவுருண்டை . |
| சோற்றுக்கடன் | உண்ட சோற்றுக்குக் கைம்மாறாகச் செய்யும் செயல் ; கடமையாக மாத்திரம் இடும் சோறு . |
| சோற்றுக்கற்றாழை | வெள்ளிய உள்ளீடுடைய கற்றாழைவகை . |
| சோற்றுக்குவால் | அன்னக்குவியல் . |
| சோற்றுக்கை | சோற்றை எடுத்துதவும் வலக்கை . |
| சோற்றுத்தடி | காண்க : சோற்றுக்கட்டி . |
| சோற்றுத்துருத்தி | சோற்றால் நிரப்பிய துருத்தி ; உடம்பு . |
| சோற்றுப்பற்று | சோற்றுப்பருக்கை . |
| சோற்றுப்பனை | வயிரம் அற்ற பனை . |
| சோற்றுப்பானை | சோறாக்கும் மட்பாண்டம் ; பெருந்தீனிக்காரன் . |
| சோற்றுப்பை | இரைப்பை . |
| சோற்றுமயக்கம் | பேருணவு உண்டமையால் வரும் உறக்கம் . |
| சோற்றுமாடு | பயனற்றவன் ; சோறு தின்பதற்கு மாத்திரமுள்ள மாடு போன்றவன் . |
| சோறாக்குதல் | உணவு சமைத்தல் . |
| சோறு | அன்னம் ; மிருதங்கத்தின் நடுவில் பூசும் கலவைச்சாந்து ; கற்றாழை முதலியவற்றின் சோறு ; பனை முதலியவற்றின் உள்ளீடு ; முத்தி ; பரணிநாள் . |
| சோறுகொல்லி | பெருந்தீனிக்காரன் ; அன்னபேதி . |
| சோறுவடித்தல் | காண்க : சோறாக்குதல் ; சமைத்த சோற்றினின்று கஞ்சியை வடித்தல் . |
| சோறுவாய்த்தல் | செஞ்சோற்றுக் கடன் கழித்தல் . |
|
|
|