சொல்
|
அருஞ்சொற்பொருள் |
தகர்வு | உடைவு ; அழிவு . |
தகரஞாழல் | மயிர்ச்சாந்துவகை . |
தகரடி | சிதறவடிக்கை ; பெருமிதப் பேச்சு . |
தகரம் | மயிற்சாந்து ; மணம்வீசும் மரவகை ; மணம் ; வெள்ளீயம் ; உலோகத்தகடு ; இதயத்தின் உள்ளிடம் . |
தகரவித்தை | இறைவனை இதயவொளியில் வைத்துத் தியானம்செய்யும் முறையை உணர்த்தும் வித்தை . |
தகரார் | தடை , மறுப்பு ; விவாதம் . |
தகராறு | தடை , மறுப்பு ; விவாதம் . |
தகல் | தகுதி ; காண்க : பவளப்பூண்டு ; ஒரு கீரை வகை . |
தகல்பாச்சி | மோசக்காரன் ; பெரும்புரட்டான் . |
தகல்பாசி | மோசக்காரன் ; பெரும்புரட்டான் . |
தகலக்கட்டுதல் | ஏமாற்றுதல் . |
தகலுபாசி | காண்க : தகல்பாச்சி . |
தகலோன் | தகுதியை உடையவன் . |
தகவல் | எடுத்துக்காட்டு ; நேர்விடை ; செய்தி . |
தகவின்மை | தகுதியின்மை ; நடுநிலையின்மை ; வருத்தம் . |
தகவு | தகுதி ; உவமை ; உரிமை ; குணம் ; பெருமை ; அருள் ; நடுவுநிலைமை ; நீதி ; வலிமை ; அறிவு ; தெளிவு ; கற்பு ; நன்மை ; நல்லொழுக்கம் . |
தகவுரை | பரிந்துரை , சிபாரிசு . |
தகழி | அகல் ; உண்கலம் . |
தகழிச்சி | கருப்பூரம் . |
தகளி | காண்க : தகழி . |
தகன் | வேர்விட்ட பனங்கொட்டை ; நெருப்பு ; கீரைவகை ; பூரான் ; கிழங்குவிழுந்த பனங்கொட்டையின் உள்ளீடு . |
தகனக்கிரியை | பிணத்தை எரிக்கும் சடங்கு . |
தகனபலி | நெருப்பிலிட்டுச் செய்யும் பலி . |
தகனம் | எரித்தல் ; பிணஞ்சுடுகை ; செரித்தல் ; உணவு . |
தகனன் | நெருப்பு . |
தகனித்தல் | எரித்தல் . |
தகனை | உலோகக்கட்டி . |
தகா | பசிதாகம் ; மிக்க ஆசை ; மோகம் ; பொருளாசை ; மோசம் . |
தகாதா | வழக்கு ; குற்றம் ; நெருக்குகை . |
தகாதி | வழக்கு ; குற்றம் ; நெருக்குகை . |
தகித்தல் | எரித்தல் ; பிணஞ்சுடுதல் ; சூடுசெய்தல் ; செரித்தல் . |
தகிலன் | வஞ்சகன் . |
தகிலாயம் | நட்பு ; நன்றி . |
தகிலித்தல் | உட்செலுத்துதல் ; வஞ்சித்தல் ; திருடிக் கொடுத்தல் ; பண்டமாற்றிக் கொள்ளுதல் ; உழக்குதல் ; குற்றஞ்சாட்டுதல் . |
தகிலிமா | சேங்கொட்டைமரம் . |
தகுணிச்சம் | பறைப்பொது ; அகப்புற முழவு மூன்றனுள் ஒன்று ; ஒரு வரிக்கூத்துவகை . |
தகுணிதம் | வாச்சியப்பொது ; அகப்புற முழவு மூன்றனுள் ஒன்று . |
தகுதல் | ஏற்றதாதல் ; மேம்படுதல் ; தொடங்குதல் ; கிட்டுதல் ; ஒத்தல் ; ஏற்குதல் ; இயலுதல் ; தகுதியாதல் . |
தகுதி | பொறுமை ; பொருத்தம் ; தகுதிவழக்கு ; மேன்மை ; நல்லொழுக்கம் ; நடுவுநிலைமை ; ஆற்றல் ; அறிவு ; கூட்டம் ; தடவை ; குணம் ; நிலைமை . |
தகுதியணி | தக்க இரண்டு பொருள்களின் சேர்க்கையை உணர்த்தும் அணி . |
தகுதியின்மையணி | தகாத இரண்டு பொருள்களின் சேர்க்கையை உணர்த்தும் அணி . |
தகுதியோர் | அறிஞர் ; சுற்றத்தார் ; பெருமையிற் சிறந்தோர் ; நடுவுநிலைமையோர் . |
தகுதிவழக்கு | பொருள்களுக்கு இயல்பாய் அமைந்த சொற்களை ஒழித்துத் தகுதியான வேறுசொற்களால் கூறும் இடக்கரடக்கல் , மங்கலம் , குழூஉக்குறி என்னும் மூவகை வழக்கு . |
தகுந்தகுமெனல் | ஒலியோடு எரிதற்குறிப்பு ; ஒளிவீசுதற் குறிப்பு ; முழவு முதலியன ஒலித்தற் குறிப்பு . |
தகுந்தபுள்ளி | செல்வம் முதுலியவற்றால் தகுதியானவர் . |
தகுந்தவர் | ஒழுக்கமுடையவர் . |
தகுந | தக்கவை . |
தகுவ | இயன்றவை . |
தகுவன் | அசுரன் . |
தகுவியர் | அசுரமகளிர் . |
தகுளம் | மகளிர் விளையாட்டு . |
தகை | அழகு ; அன்பு ; அருள் ; கவசம் ; குணம் ; தடை ; தகுதி ; பொருத்தம் ; ஒப்பு ; மேம்பாடு ; பெருமை ; நன்மை ; இயல்பு ; நிகழ்ச்சி ; கட்டுகை ; மாலை ; தளர்ச்சி ; தாகம் ; மூச்சிழைப்பு . |
தகை | (வி) தடுத்துவிடு ; ஆணையிடு . |
தகைத்தல் | தடுத்தல் ; கட்டுதல் ; சுற்றுதல் ; வாட்டுதல் ; அரிதல் ; நெருங்கப்பெறுதல் ; களைத்தல் . |
தகைதல் | தடுத்தல் ; ஆணையிட்டுத் தடுத்தல் ; பிடித்தல் ; அடக்குதல் ; உள்ளடக்குதல் ; பிணைத்தல் ; தளர்தல் ; ஒத்தல் ; அழகு பெற்றிருத்தல் . |
தகைப்பு | தடை ; மதிற்சுற்று ; மாளிகைக் கட்டணம் ; வீட்டின் பகுதி ; படைவகுப்பு ; தளர்ச்சி ; மூச்சிழைப்பு . |
தகைபாடுதல் | தலைவன் தலைவியின் நலம் பாராட்டுதல் . |
தகைமை | தன்மை , தகுதி ; பெருமை ; பொறுமை ; குணம் ; மதிப்பு ; அழகு ; ஒழுங்கு ; நிகழ்ச்சி . |
தகையணங்குறுத்தல் | தலைவியின் அழகு தலைவனை வருத்தமுறுத்தலைக் கூறும் அகத்துறை . |
தகைவிலாங்குருவி | தரையில் தங்காது பெரும்பாலும் பறந்துகொண்டே இருக்கும் குருவிவகை . |
தகைவிலான்குருவி | தரையில் தங்காது பெரும்பாலும் பறந்துகொண்டே இருக்கும் குருவிவகை . |
தகைவு | தடை ; இளைப்பு . |
தங்கக்கட்டி | பொற்கட்டி , மிக நல்லவன்(ள்) . |
தங்கக்கம்பி | பொன்னாலான கம்பி ; வணக்க மொடுக்கமுள்ளவன்(ள்) . |
தங்கக்கலசம் | கோபுரம் முதலியவற்றின் உச்சியில் அமைக்கும் தங்கப்பூச்சுப் பூசிய குடவுரு . |
தங்கக்குடம் | பொற்குடம் ; மிக நல்லவன்(ள்) . |
தங்கக்குணம் | சிறந்தகுணம் . |
தங்கச்சி | காண்க : தங்கை . |
தங்கசாலை | நாணயம் அடிக்கும் சாலை . |
தங்கஞ்சலமாக்கி | சுவர்ணபேதி . |
தங்கப்பூச்சு | பொன்முலாம் . |
தங்கம் | பசும்பொன் ; சிறந்தது ; கலப்பற்றபொற்கட்டி ; மிக நல்லவர் . |
தங்கமுலாம் | பொன்மெருகு . |
தங்கரேக்கு | பொன்னிற் செய்த தகடு . |
தங்கல் | தங்குதல் ; தாமதித்தல் ; தங்குமிடம் ; நிலைபெறுதல் ; அடியில் படிந்திருப்பது ; கெடி . |
![]() |
![]() |
![]() |