தண்ணீர்க்காரன் முதல் - தத்து வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தண்ணீர்க்காரன் நீர் சுமந்து கொடுப்போன் .
தண்ணீர்க்காரி நீர் சுமந்து கொடுப்பவள் .
தண்ணீர்க்கால் நீரோடும் வழி .
தண்ணீர்க்குடம் நீர் முகக்கும் குடம் ; காண்க : நீர்வாழை .
தண்ணீர்கட்டுதல் வயல் முதலியவற்றில் நீர் தேக்குதல் ; நீர்க்கொப்புளங் கொள்ளுதல் .
தண்ணீர்காட்டுதல் கால்நடைகளுக்குக் குடிநீர் காட்டுதல் ; ஏமாற்றுதல் ; அலைக்கழித்தல் .
தண்ணீர்த்துரும்பு இடையூறு .
தண்ணீர்த்துறை நீர்நிலையில் இறங்குமிடம் .
தண்ணீர்த்துறையேறுதல் மாதவிடாயாதல் .
தண்ணீர்தெளித்தல் தூய்மையின்பொருட்டு நீர் தெளித்தல் ; தொடர்பை நீக்கிவிடுதல் .
தண்ணீர்ப்பத்தாயம் நீர்த்தொட்டி .
தண்ணீர்ப்பந்தர் வெயிற்காலத்தில் வழிச்செல்வோர்க்குக் குடிநீர் முதலியன உதவும் அறச்சாலை .
தண்ணீர்ப்பந்தல் வெயிற்காலத்தில் வழிச்செல்வோர்க்குக் குடிநீர் முதலியன உதவும் அறச்சாலை .
தண்ணீர்ப்பிடிப்பு குளம் முதலியவற்றில் நீர் பிடித்துள்ள அளவு ; உணவு முதலியவற்றின் நீர்மத் தன்மை .
தண்ணீர்பட்டபாடு தாராளமாய்ச் செலவு செய்கை ; எளிதாகச் செய்யவல்லது .
தண்ணீர்மட்டம் நீர்மட்டம் என்னும் கருவி ; குளம் முதலியவற்றில் தண்ணீர் பிடித்துள்ள அளவு .
தண்ணீர்மாறுதல் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நீரை மாற்றிப் பாய்ச்சுதல் .
தண்ணீர்வார்த்தல் வழிச்செல்வோர் முதலியோர்க்கு நீர் கொடுத்தல் ; நோய் நீங்கினோர் முதலியோரை நீராட்டுவித்தல் ; தொடர்பற நீக்கிவிடுதல் .
தண்ணீர்விட்டான் ஒரு கொடிவகை .
தண்ணீராக்குதல் ஒருவனை இரக்கங் கொள்ளும்படி செய்தல் ; உலோக முதலியவற்றை நீர்மமாக்குதல் ; பால் முதலியவற்றில் நீர் கலத்தல் ; மனப்பாடம் பண்ணல் .
தண்ணீராதல் நீர்மயமாய்ப்போதல் ; மனப்பாடமாதல் .
தண்ணுமை மத்தளம் ; முழவு ; உடுக்கை ; ஒரு கட்பறை .
தண்ணுமையோன் மத்தள ஆசிரியன் .
தண்ணெனல் குளிர்ச்சிக்குறிப்பு ; இரங்கற் குறிப்பு ; தட்டுகைக்குறிப்பு .
தண்ணெனவு குளிர்ந்திருக்கை ; இரங்குகை .
தண்பணை மருதநிலம் .
தண்பதம் புதுப்புனல் ; புதுப்புனல் விழா ; தாழ்நிலை .
தண்பு குளிர்ச்சி .
தண்மை குளிர்ச்சி ; சாந்தம் ; இன்பம் ; மென்மை ; தாழ்வு ; விளைவுக் குறைவு ; அறிவின்மை .
தணக்கம் நுணா என்னும் கொடி .
தணக்கு நுணாமரம் ; நுணாக்கொடி ; தணக்கமரம் ; முட்டைக் கோங்கிலவுமரம் ; வால் ; முட்டைக் கோங்கு என்னும் மரம் .
தணத்தல் நீங்குதல் ; போதல் ; நீக்குதல் ; பிரிதல் .
தணப்பு நீங்குதல் ; தடை ; செல்லல் .
தணல் கனிந்த நெருப்பு ; நெருப்பு ; நிழலிடம் .
தணல்விழுங்கி தணலை விழுங்கும் தீக்கோழி .
தணலம் காண்க : எருக்கு .
தணவம் அரசமரம் .
தணி மலை ; குளிர்ச்சி ; தேர்நெம்புங் கட்டை .
தணிக்கை மேற்பார்வையிடுகை .
தணிகை திருத்தணிகை .
தணிசு விலைமலிவு ; சதைபிடிக்கை ; வளைவு .
தணித்தல் ஆற்றுதல் ; குறைத்தல் ; புதைத்தல் ; தாழ்த்தல் ; தீர்த்தல் ; தண்டித்தல் ; அவித்தல் ; பொறுத்தல் .
தணிதல் ஆறுதல் ; குறைதல் ; வற்றுதல் ; விளக்கு முதலியன அவிதல் ; வேலை முதலியவற்றினின்றும் நீங்குதல் ; தாழ்தல் ; ஒன்றோடு ஒன்று இசைதல் ; நிறைதல் ; மனநிறைவாதல் ; பருத்தல் .
தணிப்பு தணித்தல் ; காண்க : தணிவு ; அதிமதுரம் முதலியவற்றைக் கியாழமிட்டுச் செய்த ஒரு மருந்துவகை .
தணியல் காண்க : தணிவு ; திருத்தணிகை ; கள் .
தணிவு குறைகை ; வணக்கம் ; சாந்தம் ; நீர் வற்றுகை ; இழிவு ; தாழ்வு .
தணுப்பு குளிர்ச்சி ; நீர்க்கோவை .
தத் அது ; அந்த ; அதட்டற்குறிப்பு .
தத்தக்கபித்தக்கவெனல் நடைதளர்தற்குறிப்பு ; பேச்சுத் தடுமாறற்குறிப்பு .
தத்தகன் காண்க : தத்துப்பிள்ளை .
தத்தங்கொடுத்தல் சுவீகாரங் கொடுத்தல் ; காண்க : தத்தம்பண்ணுதல் .
தத்தடி குழந்தையின் தளர்நடை .
தத்தபுத்திரன் காண்க : தத்தகன் .
தத்தம் நீர்வார்த்துக் கொடுக்கும் கொடை .
தத்தம்பண்ணுதல் பொருளை நீர்வார்த்துக் கொடுத்தல் ; பொருளைத் திரும்பப் பெறாதபடி கொடுத்துவிடுதல் ; பிதிரர்க்கு நீரோடு பிண்டம் முதலியன கொடுத்தல் .
தத்தயோகம் தீயோகங்களுள் ஒன்று .
தத்தரசமயம் நெருக்கடியான நேரம் .
தத்தரம் நடுக்கம் ; மிகுவிரைவு ; தந்திரம் .
தத்தளம் கட்டடத் தளங்களின் நெகிழ்ந்த நிலை .
தத்தளித்தல் ஆபத்தில் அகப்பட்டுத் திகைத்தல் ; பஞ்சம் முதலியவற்றால் வருந்துதல் .
தத்தளிப்பு உயிர் தப்பவேண்டித் திகைக்கை ; மனங்கலங்குகை .
தத்தன் காண்க : வளர்ப்புப்பிள்ளை .
தத்தாங்கி சிறுமியர் கைகொட்டிப் பாடும் விளையாட்டுவகை .
தத்தாங்கிகொட்டுதல் சிறு குழந்தைகள் கை கொட்டுதல் .
தத்தாபகாரம் தானங் கொடுத்ததைத் திரும்ப வாங்குகையாகிய பாவம் .
தத்தாரி கண்டபடி திரிவோர் .
தத்தி கொடை ; சத்துவம் .
தத்திகாரம் பொய் .
தத்திதம் பெரும்பான்மைப் பெயர்ச்சொல்லின்மேல் வரும் விகுதி ; பகுபதம் .
தத்திதன் பெரும்பான்மைப் பெயர்ச்சொல்லின்மேல் வரும் விகுதி ; பகுபதம் .
தத்திதாந்தம் தத்தித விகுதியைக்கொண்ட பெயர் ; சிறிது மாறித் தன்னோடு இயைபுடைய பொருளையாகிலும் தன் பொருளையாகிலும் உணர்த்துவது .
தத்தியம் மெய் ; துகில்வகை .
தத்தியோதனம் காண்க : ததியோதனம் .
தத்தினம் காண்க : சிராத்தம் .
தத்து தாவிநடத்தல் ; பாய்தல் ; மனக்கவலை ; சாதகத்தின்படி நேரும் ஆபத்து ; தவறு ; சுவீகாரம் ; சுவீகாரபுத்திரன் ; சிறுதுளை ; பூச்சிக்கடியாலாகிய தடிப்பு .