சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| தத்துக்கிளி | வெட்டுக்கிளி ; கிளிப்பிள்ளை ; பிள்ளைகளின் விளையாட்டுவகை . |
| தத்துதல் | குதித்தல் ; தாவிச்செல்லுதல் ; தாவி ஏறுதல் ; அடியால் அளத்தல் ; ததும்புதல் ; பரவுதல் ; ஒளி முதலியன வீசுதல் . |
| தத்துப்பிள்ளை | சுவீகாரப்பிள்ளை . |
| தத்துப்புத்திரன் | சுவீகாரப்பிள்ளை . |
| தத்துமீட்டல் | நோயாளியை ஆபத்திலிருந்து காத்தல் ; கண்டம் என்று கருதப்பட்ட காலத்தைக் கடத்தல் . |
| தத்துவசதுக்கம் | மணமேடை . |
| தத்துவசாலி | அதிகாரபத்திரம் பெற்றோன் . |
| தத்துவஞானம் | முடிவான உண்மையுணர்வு . |
| தத்துவஞானி | முடிவான உண்மையை உணர்ந்தோன் . |
| தத்துவப்பொருள் | பேருண்மையாய் உள்ளவனான கடவுள் . |
| தத்துவம் | உண்மை ; பொருள்களின் குணம் ; இயல்பான அமைப்பு ; உடற்பலம் ; இந்திரிய பலம் ; அதிகாரம் ; பரமான்மா ; ஆன்மா ; அதிகாரபத்திரம் . |
| தத்துவமசி | 'அது நீயாக இருக்கிறாய் ' என்னும் பொருள்கொண்ட வேதவாக்கியம் . |
| தத்துவரூபம் | தத்துவங்களின் குணங்களை ஆன்மா காணும் நிலையாகிய தசகாரியவகை . |
| தத்துவவாதம் | இயற்கையே கடவுளென்னும் மதம் . |
| தத்துவவாதி | இயற்கையே கடவுள் என்று வாதிப்போன் . |
| தத்துவவுணர்வு | கடவுளைப்பற்றிய உண்மையுணர்வு . |
| தத்துவன் | பேருண்மையாய் உள்ளவனான கடவுள் ; அருகன் . |
| தத்துவாத்துவா | ஆறு அத்துவாக்களுள் முப்பத்தாறு தத்துவங்களாகிய அத்துவாக்கள் . |
| தத்துவாதீதன் | தத்துவம் கடந்த பரம்பொருள் . |
| தத்துறுதல் | தத்தி வருதல் ; வருத்தப்படுதல் ; நேர்தல் ; கிட்டுதல் . |
| தத்தெடுத்தல் | பிறர் குழந்தையைத் தனக்கு உரிமையாக ஏற்றல் . |
| தத்தை | கிளி ; தமக்கை . |
| தத்ரூபம் | முழுவதும் ஒற்றுமையான வடிவம் . |
| ததபத்திரி | வாழை . |
| ததம் | அகலம் ; பின்பு . |
| ததர் | செறிவு ; கொத்து ; சிதறுகை . |
| ததர்த்தல் | வருத்துதல் . |
| ததர்தல் | நெரிதல் . |
| ததள் | தளரா நிலை . |
| ததா | அப்படி . |
| ததாகதன் | புத்தன் . |
| ததி | தக்க சமயம் ; தயிர் ; சத்துவம் . |
| ததிகேடு | வலியின்மை ; செல்வக்குறைவு . |
| ததிசம் | வெண்ணெய் . |
| ததிசாரம் | வெண்ணெய் . |
| ததிமண்டபம் | மோர் . |
| ததியர் | அடியார் . |
| ததியாராதனை | காண்க : ததீயாராதனம் . |
| ததியோதனம் | தயிர்ச்சோறு . |
| ததீயாராதனம் | திருமால் அடியார்க்கு இடும் விருந்துணவு . |
| ததீயாராதனை | திருமால் அடியார்க்கு இடும் விருந்துணவு . |
| ததும்புதல் | மிகுதல் ; நிறைதல் ; நிரம்பிவழிதல் ; மனநிரம்புதல் ; அசைதல் ; முழங்குதல் . |
| ததைத்தல் | கூட்டுதல் ; நெருக்கல் ; நிறைதல் . |
| ததைதல் | நெருங்குதல் ; சிதைதல் ; சிதறல் ; வெளிப்படதிருத்தல் . |
| தந்தக்கட்டில் | தந்தத்தினால் ஆன கட்டில் ; உயர்ந்த கட்டில் . |
| தந்தக்காரி | காண்க : வாதமடக்கி . |
| தந்தக்குறி | புணர்ச்சிகாலத்தில் பல்லால் உண்டான அடையாளம் . |
| தந்தசடம் | காண்க : எலுமிச்சை ; விளாமரம் . |
| தந்தசடை | புளியாரைச்செடி . |
| தந்தசம் | காண்க : தந்தமாமிசம் . |
| தந்தசுத்தி | பல் விளக்கல் . |
| தந்தசூகம் | பாம்பு ; பாம்புகள் நிரம்பிய நரகவகை . |
| தந்தசூலை | பல்வலி . |
| தந்ததாவனம் | காண்க : தந்தசுத்தி ; பற்குச்சி ; கருங்காலிவகை . |
| தந்ததி | காண்க : சந்ததி . |
| தந்தப்பூண் | யானையின் கொம்பில் அணியும் கிம்புரி . |
| தந்தபத்திரம் | மல்லிகைவகை . |
| தந்தபலம் | விளாமரம் . |
| தந்தபலை | திப்பிலி . |
| தந்தபாகம் | யானையின் மத்தகம் . |
| தந்தம் | பல் ; யானை முதலியவற்றின் கொம்பு ; மலைமுகடு ; நறுக்கி வைத்திருக்கும் பழத்துண்டம் . |
| தந்தமா | தந்தத்தை உடைய விலங்கான யானை . |
| தந்தமாமிசம் | பல்லின் ஈறு . |
| தந்தரோகம் | பல்நோய் . |
| தந்தவேட்டம் | காண்க : தந்தமாமிசம் . |
| தந்தனத்தோம் | ஓர் ஒலிக்குறிப்பு ; வில்லிசை . |
| தந்தனப்பாட்டு | தெம்மாங்குவகை ; பெரும்பாலும் பிச்சைக்காரர் பாடும் பாட்டு . |
| தந்தனப்பாட்டுப்பாடுதல் | ஏழைபோல் நடித்தல் . |
| தந்தனம் | தந்திரம் ; ஆதாரமின்மை ; பொருட்படுத்தாமை ; தற்பெருமை . |
| தந்தனவெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| தந்தாம் | தங்கள் , தங்களுடைய . |
| தந்தாயுதம் | தந்தத்தை ஆயுதமாக உடைய யானை ; ஆண்பன்றி . |
| தந்தார் | பெற்றோர் . |
| தந்தாலிகை | கடிவாளம் . |
| தந்தாவளம் | யானை . |
|
|
|