தந்தி முதல் - தபம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தந்தி ஆண்யானை ; நச்சுப் பற்களையுடைய பாம்பு ; யாழ்நரம்பு ; நரம்பு ; யாழ் ; காண்க : நேர்வாளம் ; கம்பி ; மின்சாரக்கம்பிமூலம் அனுப்பும் செய்தி .
தந்திக்கடவுள் யானை முகத்தையுடைய கடவுளான விநாயகர் .
தந்திக்கம்பி வீணை முதலியவற்றின் நரம்பு ; செய்திகளை அறிவிக்கும் மின்சாரக்கம்பி ; புடைவைவகை .
தந்தித்தீ யானைத் தீ என்னும் பசிநோய் .
தந்திதந்தியாய் வரிசைவரிசையாய் .
தந்திபீசம் காண்க : நேர்வாளம் .
தந்திமருப்பு காண்க : முள்ளங்கி .
தந்திமுகன் காண்க : தந்திக்கடவுள் .
தந்தியடித்தல் தந்திமூலம் செய்தி அனுப்புதல் .
தந்தியுரியோன் யானைத்தோலைப் போர்த்த சிவன் .
தந்திரக்காரன் சூழ்ச்சியுள்ளவன் , யுக்திக்காரன் .
தந்திரகம் காண்க : சீந்தில் .
தந்திரகரணம் களவுநூல் ; களவுநூலிற் சொல்லப்படுந் தொழில்கள் .
தந்திரசாத்திரம் தெய்வபூசணைக்குரிய மந்திர தந்திரங்களைக் கூறும் நூல் .
தந்திரசாலி காண்க : தந்திரக்காரன் .
தந்திரபாலன் படைத்தலைவன் .
தந்திரம் வழிவகை ; தொழில்திறமை ; உத்தி ; பித்தலாட்டம் ; சூழ்ச்சி ; கல்விநூல் ; காண்க : தந்திரசாத்திரம் ; படை ; காலாள் ; யாழ்நரம்பு ; கடவுள் வழிபாட்டில் காட்டும் கைச்செய்கை .
தந்திரமா தந்திரமுள்ள விலங்கான நரி .
தந்திரர் யாழ் வாசிப்பவரான கந்தருவர் .
தந்திரவாயன் சிலம்பி ; நெய்வோன் .
தந்திரன் காண்க : தந்திரக்காரன் .
தந்திரி தந்திரக்காரன் ; காண்க : தந்திரபலன் ; மந்திரி ; கோயிலின் அருச்சகத்தலைவர் ; யாழ் ; குழலின் துளை ; யாழ்நரம்பு .
தந்திரிகரம் செங்கோட்டியாழ் உறுப்பினுள் ஒன்று .
தந்திரிகை கம்பி .
தந்திரை சோம்பல் ; உறக்கம் .
தந்து நூல் ; கயிறு ; கல்விநூல் ; சந்ததி ; உபாயம் ; தொழில்திறமை ; உத்தி .
தந்துகடம் சிலந்திப்பூச்சி .
தந்துகம் கடுகு .
தந்துகி நாடி நுட்பக்குழல்கள் .
தந்துகீடம் நூலிழைக்கும் சிலந்திப்பூச்சி .
தந்துசாரம் காண்க : கமுகு .
தந்துபம் கடுகு .
தந்துமந்து குழப்பம் .
தந்துரம் ஒழுங்கின்மை .
தந்துரை நூற்குள் நுதலிய பொருள் அல்லாதவற்றைத் தந்து கூறும் பாயிரம் .
தந்துரைக்கிளவி பிறவுயிர்களைப் போன்று செய்யும் ஒலி .
தந்துரைத்தல் செய்யுள் மூலத்தில் இல்லாத சொற்பொருளை வருவித்துக் கூறுதல் .
தந்துவர் நெசவுகாரர் ; நூலால் நெய்யும் தொழிலையுடைய கைக்கோளர் .
தந்துவாயர் நெசவுகாரர் ; நூலால் நெய்யும் தொழிலையுடைய கைக்கோளர் .
தந்துவை மாமியார் ; மாமன் மனைவி .
தந்தை தகப்பன் .
தந்தைபெயரன் தன் தந்தையின் பெயரினையுடையவனான மகன் .
தந்தையன் காண்க : தந்தை .
தப்பட்டை பறைவகை .
தப்பட்டைக்காரன் பறையடிப்போன் .
தப்படி தவறான செய்கை ; ஐந்தடி அல்லது மூன்றடிகொண்ட கால் வைப்பு .
தப்பணம் கோணியூசி .
தப்பல் குற்றம் ; அடி ; துவைத்தல் .
தப்பளம் எண்ணெய் முதலியன நிரம்பத் தேய்க்கை ; பல காய்கறிகளைப் புளியிலிட்டுப் பக்குவப்படுத்திய குழம்பு .
தப்பளை பெருவயிறு ; தவளை ; மீன்வகை .
தப்பறை பொய் ; சூது ; கெட்ட சொல் .
தப்பறைக்காரன் பொய்யன் .
தப்பித்தல் குற்றம் முதலியவற்றினின்று விலகுதல் .
தப்பித்தவறி தவறுதலாய் ; தற்செயலாய் .
தப்பித்தான் தப்புச்செய்தவன் ; தப்பிச்சென்றவன் .
தப்பிதம் தவறு ; நெறிதவறுங் குற்றம் .
தப்பியார் குற்றம் செய்தோர் .
தப்பிலி குற்றமற்றவன் ; போக்கிரி .
தப்பு குற்றம் ; பொய் ; வஞ்சனை ; தப்பித்துக் கொள்ளுகை ; துணி துவைத்தல் ; ஒரு பறைவகை .
தப்புக்கடலை விளைச்சற்காலத்தில் சிதறிப்போன நிலக்கடலை .
தப்புக்கொட்டை விளைச்சற்காலத்தில் சிதறிப்போன நிலக்கடலை .
தப்புச்செடி தானே தோன்றிய செடி .
தப்புத்தண்டா குற்றம் ; தொந்தரை .
தப்புதல் தவறுதல் ; பயன்படாது போதல் ; பிறழுதல் ; விட்டுப்போதல் ; அபாயத்திலிருந்து நீங்குதல் ; இறத்தல் ; பிழைசெய்தல் ; அழிதல் ; அடித்தல் ; சீலை தப்புதல் ; விட்டு விலகுதல் ; காணாமற்போதல் ; தடவுதல் ; அப்பம் முதலியன தட்டுதல் ; கையால் தட்டுதல் ; தடவிப்பார்த்தல் ; அப்புதல் ; செய்யத் தவறுதல் ; தண்டுதல் .
தப்புநடத்தை தீயவொழுக்கம் .
தப்புமேளம் ஒரு பறைவகை .
தப்பெண்ணம் தவறான கருத்து .
தப்பை மூங்கிற்பட்டை ; முரிந்த எலும்பு பொருந்த வைத்துக் கட்டும் சிம்பு ; அடி ; ஒரு சிறு பறைவகை .
தபச்சரணம் தவஞ்செய்கை .
தபசி காண்க : தவசி .
தபசியம் பங்குனிமாதம் ; முல்லை .
தபசு காண்க : தவம் .
தபதபவெனல் விரைவாகத் தொடர்தற் குறிப்பு .
தபதி கல்தச்சன் , சிற்பி .
தபம் காண்க : தவம் ; மாசிமாதம் ; வெப்பம் .