சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| தபலை | தவலை ; பாத்திரவகை ; மத்தளவகை . |
| தபளா | மத்தளவகை . |
| தபன் | சூரியன் . |
| தபனம் | வெப்பம் ; வெயிற்காலம் ; தாகம் ; ஒரு நரகவகை . |
| தபனற்கஞ்சி | வெயிலில் நிறமிழக்கும் மஞ்சள் . |
| தபனன் | சூரியன் ; தீக்கடவுள் ; கொடிவேலி . |
| தபனியம் | காண்க : தமனியம் . |
| தபனீயகம் | காண்க : தமனியம் . |
| தபா | தடவை . |
| தபாது | தப்பு ; ஏமாற்றுகை . |
| தபாய்த்தல் | தப்பிவிடுதல் ; கேலிபண்ணுதல் ; ஏமாற்றிவிடுதல் . |
| தபால் | அஞ்சல் ; நிற்குமிடம் . |
| தபாற்காரன் | தபாற்கடிதங் கொடுப்போன் ; கடிதங்களை அஞ்சலில் கொண்டுசெல்வோன் . |
| தபித்தல் | காய்தல் ; வருந்துதல் . |
| தபுக்கெனல் | விழுதல் முதலியவற்றின் விரைவுக்குறிப்பு ; ஓர் ஒலிக்குறிப்பு . |
| தபுத்தல் | கெடுத்தல் ; அழித்தல் . |
| தபுத்துதல் | ஈரம் புலர்த்துதல் . |
| தபுதல் | கெடுதல் ; இறுத்தல் . |
| தபுதாரநிலை | கணவன் தன் தாரம் இழந்து துயருறும் நிலையைக் கூறும் புறத்துறை . |
| தபுதாரம் | கணவன் தன் தாரம் இழந்து துயருறும் நிலையைக் கூறும் புறத்துறை . |
| தபுதி | அழிவு . |
| தபோதன் | முனிவன் . |
| தபோதனன் | முனிவன் . |
| தபோநிதி | முனிவன் . |
| தபோபலம் | தவப்பயன் ; தவத்தால் உண்டாகும் வல்லமை . |
| தபோலோகம் | மேலேழு உலகினுள் ஒன்று . |
| தபோவனம் | தவம் செய்யும் காடு ; தவசிகள் தங்கும் சோலை . |
| தம் | ஒரு சாரியை இடைச்சொல் ; மூச்சடக்குகை ; மூச்சு . |
| தம்பகம் | ஒன்றுக்கும் பயன்படாது அங்கங்கே முளைத்துத் தீய்ந்துபோகும் தாவரவகை . |
| தம்பட்டம் | ஒரு பறைவகை ; வாளவரைக் கொடி . |
| தம்பட்டை | வாளவரைக்கொடி . |
| தம்பதி | கணவனும் மனைவியும் ; மருதமரம் . |
| தம்பம் | தூண் ; யானை முதலியன கட்டுந் தறி ; விளக்குத்தண்டு ; பற்றுக்கோடு ; கொடிக்கம்பம் ; கவசம் ; ஊருணி ; தம்புகைமரம் ; காண்க : தம்பனம் . |
| தம்பர் | தாம்பூல எச்சில் . |
| தம்பல் | காண்க : தம்பர் ; மழையால் வயல் இறுகுகை . |
| தம்பலடித்தல் | கனத்த மழையால் இறுகினவயலை உழுதல் ; வயலிறுகிச் சமமாதல் . |
| தம்பலப்பூச்சி | இந்திரகோபம் என்னும் பூச்சிவகை . |
| தம்பலம் | வெற்றிலைபாக்கு ; காண்க : தம்பர் ; தம்பலப்பூச்சி . |
| தம்பலாடுதல் | வயலில் நீர்பாய்ச்சி மிதித்துச் சேறாக்குதல் . |
| தம்பலி | மருதமரம் . |
| தம்பலை | நிலவிலந்தைமரம் . |
| தம்பனகாரன் | பொருள்களின் இயற்கையைக் கட்டுப்படுத்தும் மந்திரவாதி . |
| தம்பனம் | அசைவற நிறுத்துகை ; எட்டுக் கருமத்துள் ஒருவன் இயக்கத்தை மந்திரத்தால் தடுத்து நிறுத்துகை . |
| தம்பனை | ஒருவன் இயக்கத்தை மந்திரத்தால் தடுத்துக் கட்டுகை . |
| தம்பா | கள் அளக்குங் கருவி . |
| தம்பி | பின் பிறந்தோன் ; வயதிற் சிறியவனைக் குறிக்கும் சொல் ; தம்பிமுறையான் . |
| தம்பி | (வி) வாயுவையடக்கு . |
| தம்பிக்கை | ஒருவகைச் சிறுசெம்பு . |
| தம்பிகை | ஒருவகைச் சிறுசெம்பு . |
| தம்பிடித்தல் | மூச்சடக்குதல் . |
| தம்பித்தல் | அசையாதிருத்தல் ; மந்திரசக்தி முதலியவற்றால் தடுத்தல் . |
| தம்பிராட்டி | தனக்குத்தானே தலைவி ; உடன் கட்டையேறுபவள் . |
| தம்பிரான் | கடவுள் ; தனக்குத்தானே தலைவன் ; திருவாங்கூர் அரசர் பட்டப்பெயர் ; சைவத்துறவி ; துறவித் தலைவர் . |
| தம்பிரான்தோழன் | சிவபிரானுக்குத் தோழனாகிய சுந்தரமூர்த்தி நாயனார் . |
| தம்புதல் | குட்டுதல் . |
| தம்புரா | பக்கச் சுருதிக்குரிய ஒரு நரம்புக் கருவி . |
| தம்பூரு | பக்கச் சுருதிக்குரிய ஒரு நரம்புக் கருவி . |
| தம்போலி | வச்சிரப்படை . |
| தம்மடக்குதல் | காண்க : தம்பிடித்தல் . |
| தம்மதம் | உடன்பாடு ; காண்க : நஞ்சுண்டை . |
| தம்மவன் | சுற்றத்தான் . |
| தம்மனை | தாய் . |
| தம்மாகும்மா செய்தல் | வீண்செலவு செய்தல் . |
| தம்மான் | தலைவன் . |
| தம்மி | தாமரை . |
| தம்மிடுதல் | நிறுத்தப்படுதல் ; தணிதல் . |
| தம்மிலம் | மகளிர் மயிர்முடி . |
| தம்முன் | முன்னோன் , அண்ணன் . |
| தம்மோய் | காண்க : தம்மனை . |
| தம்மோன் | காண்க : தம்மான் . |
| தமக்கை | அக்காள் ; தமக்கை ; முறையாள் . |
| தமகன் | கொல்லன் . |
| தமசம் | இருள் ; தாமதகுணம் . |
| தமசு | இருள் ; தாமதகுணம் . |
| தமத்தமப்பிரபை | காண்க : தமப்பிரபை . |
|
|
|